மாசெஸ் – பாலியல் சுரண்டல் மற்றும் பாலியில்வாதத்திற்கு எதிரான அமைப்பு – திட்ட முன்வரைவு மாதிரி (draft agenda)


M.A.S.E.S – Movement Against Social Exploitation and Sexism

மாசெஸ் பாலியல் சுரண்டல் மற்றும் பாலியில்வாதத்திற்கு எதிரான அமைப்பு திட்ட முன்வரைவு மாதிரி (draft agenda)

 பின்னணி: 

பாலியல் சுரண்டல் மற்றும் பாகுபாடு என்பது சமூகத்தில் பல்வேறு தளங்களில் செயல்பட்டு வருகிறது.  வெகுஜன ஊடகங்களின் வழியாக அதிதீவிரமாக இது கட்டிக்காக்கப் படுகிறது, போற்றபப்டுகிறது.  இவற்றை எதிர்ப்பதற்கான செயல்பாட்டை முன்னெடுத்துச் செல்ல ஒரு சிறு அமைப்பாக நாம் சேரவேண்டியுள்ளது.  மார்க்சிய சோஷலிசப் பெண்ணியப் பார்வை அதற்கு முறையான ஒரு கவனத்தை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டு இவ்வமைப்பு உருவாக்கப்படுகிறது.  அதே போல் பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் சிந்தனைகளையும் இவ்வமைப்பு வழிகாட்டியாக ஏற்கிறது.  இது ஒரு இடதுசாரி, முற்போக்கு அமைப்பு.   அரசியல் இயக்கமாக செயல்படும் இயக்கங்கள் அன்றாட நிகவுகளுக்கு / பிரச்சனைகளுக்கு வினை புரிய வேண்டியிருக்கும் சூழலில் வெகுஜன ஊடக மாயையிலிருந்து மக்களை மீட்பதற்கான விழிப்புணர்வு ‘ஒரு முழு கவனத்தோடு’ எடுத்துச்செல்லப்படாமல் உள்ளது, குறிப்பாக பெண்ணியப் பாதையில். ஆகவே இவ்வியக்கம் சாதி, மத, இன, அரசியல் கொள்கைகள், கட்சிகள், இன்னும் இதர குழுக்கள் எனும் பாகுபாடில்லாமல் அணைவரும் பங்கு பெறக்கூடிய பெண்ணிய இயக்கமாக செயல்பட விழைகிறது. இவ்வியக்கம் பாலியல் சுரண்டல் மற்றும் பாலியல்வாதத்திற்கு எதிரான இயக்கமாக மட்டுமே செயல்படும். வெகுஜன ஊடகங்களின் பாலியல் சுரண்டலுக்கு அதிக அழுத்தம் கொடுக்கும். மற்ற சமூகப் பிரச்சனைகளுக்கெதிராக செயல்படும் இயக்கங்களோடு அவர் அவர் விருப்பப்படி தேர்வு செய்து கலந்துகொள்வது என்ற முடிவுக்கு விடப்படுகிறது.

இயக்கத்தின் நோக்கம்: 

1. பெண்கள், ஆண்கள், குழந்தைகள், மூன்றாம் பாலினத்தவர் மீது வெகுஜன ஊடகங்கள் நிகழ்த்தும் பாலியல் சுரண்டல் / அவமதிப்பு  குறித்தான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வது. அதற்கென சுயகட்டுப்பாட்டு பரிந்துரைகளை முன் வைபப்து.

2.  பெண்கள் விசயத்தில், பாலியல் சுதந்திரம் எனும் முதலாளித்துவ
சிந்தனையில் ஆணாதிக்க முரண்களை எடுத்துரைத்து வெகுஜன ஊடக மாயையிலிருந்து (குறிப்பாக திரைப்பட) மாயையிலிருந்து சமூகத்தை  மீட்பதற்கான விழிப்புணர்வு.

3. விளம்பரங்கள், தொலைகாட்சிகள், திரைப்படங்கள், மற்ற ஊடகங்கள் ஆகியவற்றை கண்கானிக்கும், கட்டுப்படுத்தும் அமைப்புகளிடம் சுயதணிக்கை விதிகளை பரிந்துரைக்கச் சொல்லிக் கோறுவது. அவையும் பயன்படாத சூழலில், இருக்கும் தணிக்க விதிகளில் திருத்தங்கள் கோறுவது.  தேவைப்படும் சூழலில் சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுக்கச் சொல்லி மனித உரிமை ஆணையத்தை, நீதித்துறையை அணுகுவது.

4.  பெண்களைக் கவர்ச்சியாக சித்தரிப்பது, அதேபோல் மாற்றுப் பாலினத்தவர், விளிம்பு நிலை மக்கள், மானுடத்தின் எப்பிறப்பையும் அவமதிக்கும் சித்தரிப்புகளைச் செய்யும் திரைத்துறையினர், மற்றோர் அரசியலில் பங்கெடுத்தால் பெண்கள் (விரும்பினால் மற்றவரும்) அவர்களை புறக்கணிப்பது எனும் முழக்கம்.

கவர்ச்சித் திணிப்பினால் ஏற்படும் பாதிப்பு: 

1.  பெண்கள் / மாற்றுப் பாலினத்தவர் இழிவுபடுத்தப்படுகின்றனர். வெறும் பாலியல் பண்டமாகவே நிறுவப்படுகின்றனர்.

2.  பெண்ணியம் பற்றிய, பெண் சுதந்திரம் பற்றிய தவறான கருத்தாக்கங்களை இவை பரப்புகின்றன அதனால் பெண் விடுதலைப் போராட்டங்கள் திசை திருப்பப் படுகின்றன.

3.  கவர்ச்சித் திணிப்பினால் பாலியல் உறவுக்கான ஆவல் தூண்டப்பெற்று,  அதற்கு வடிகால் கிடைக்காத பட்சத்தில் வெறியாக மாறி பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறையாகிவிடுகிறது. வன்புணர்ச்சிகள் அதிகமாகின்றன.  சிறுமிகளும் இதற்கு இலக்காகிறார்கள்.

4. பெண்களே பெண்களுக்கெதிராக திசை திருப்பப்படுகின்றனர்.

5.  மக்களின் அறிவு நிலைகள் மலிந்த பொழுதுபோக்கு உணர்வால்
மழுங்கடிக்கப்பட்டு சமூக முன்னேற்றம் தடைபடுகிறது.

வெகுஜன ஊடகங்கள் கட்டமைப்பு அரசியலில் முக்கிய பங்கு வகிக்கிறது, குறிப்பாக பெண்கள் / மாற்றுப் பாலினத்தவர் விசயத்தில் (பாலினவாதப் பார்வையில்). இனவாத, நிறவாத, உடலின் மாற்றுத் திறனை பலவீனமாகக் கண்டு அதன் மீது செலுத்தப்படும் பாலியல் பாகுபாடும் கவனத்துக்குறியது. அதற்கெதிரான எதிர்பு குரல்கள் இன்னும் தீவிரமாக முன்னெடுக்கப்படவேண்டும். இதையும் அழுத்தம் கொடுத்து பேசுவோம்.

இவ்வமைப்பின் மூலம் இது சற்று அதிகமாக, முழு கவனத்தோடு வெகுஜன ஊடக பாலியல் சுரண்டல் முன்னெடுக்கப்பட்டு, ஒவ்வொரு பாலியல் சித்திரங்களும் ஆவணப்படுத்தப்பட்டு, தொகுக்கப்படவேண்டும்,  (முந்தைய காலத்தினதும் கூட)
அச்சித்திரங்களுக்கெதிரான போராட்டங்களை இவ்வமைப்பு
மேற்கொள்ளவேண்டும்.. விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்…

.ஊடகங்கள் அல்லாது சமூக தளத்தில் அத்தகைய பாகுபாடு, அவமதிப்பு,
சுரண்டல்களை இவ்வமைப்பு எதிர்க்கும்…போராட்டங்களை முன்னெடுக்கும், மற்ற அமைப்புகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் என்கிற வகையில் இதை நான் வடிவமைத்திருக்கிறேன்.  இதில் விளிம்பு நிலை பெண்களும், ஆண்களும் உள்ளடக்கம். மற்ற படிநிலைகளில் உள்ள ஆண்களுக்கெதிரான, மாற்றுப்பாலினத்திற்கெதிரான பாலியல் சுரண்டல்களும் உள்ளடக்கம்.

(இது துவக்கக் கட்ட வரைவு மட்டுமே…..)

இந்த அமைப்பில் இப்போதைக்கு தலைமைப் பொறுப்புக்கள் கிடையாது. உறுப்பினர்கள்,  வழிநடத்துபவர்கள் (Moderator), ஒருங்கிணைப்பாளர்கள், ஆலோசகர்கள் என்றே செயல்படுவோம். அடுத்த கட்ட நடவடிக்கைகள் சில:

செயல்திட்ட முன்வரைவு: 

1.  கருத்தியல் தளத்தில் வெகுஜன ஊடக சுரண்டல் பற்றிய விழிப்புனர்வை ஏற்படுத்துவது. (இதுவே முதன்மை நோக்கம். மற்ற பொதுத் தளங்களில் நிகழும் சுரண்டல்கள், கொடுமைகள் அமைப்பின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு உதவிகள் கேட்கபப்டுமாயின் அது எடுத்துக்கொள்ளப்படும். சூழலுக்கேற்ப இந்த அமைப்பு சாராமல் மற்ற அமைப்புகளோடு தனி நபராக பங்கெடுக்கலாம்.)

2.  அவற்றுக்கெதிரான எதிர்ப்புணர்வை பதிவு செய்யும் பிரச்சார / போராட்ட வடிவத்தை விவாதிப்பது.

3.  போராட்ட வடிவத்திற்கேற்ப தேவைகளை பட்டியலிடுவது.

4. தேவைகளை நடைமுறைப்படுத்தும் பொறுப்புகளை பகிர்ந்துக் கொள்வது.

5.  அமைப்புக்கான இறுதி செயல் திட்டம் வடிப்பது.

6. மாற்றுத்திரணாளிகள் மீதான பாலியல் சுரண்டல்கள், அவர்களிலும் பாலியல் அடிப்படையில் சுரண்டல், அவமதிப்பு, பாலியல் பாகுபாடு போற்றுதல் ஆகியவற்றை எதிர்ப்பது.

7.  இனம், மொழி, நிறம் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் பாலியல் சுரண்டல், பாலியல் அவமதிப்பு, பாலியல் பாகுபாடு போற்றுதல், ஆகியவற்றையும் எதிர்ப்பது.

8.  விளிம்பு நிலையில் உள்ள மக்கள் ‘ஒடுக்கப்பட்டவர்கள்’ என்ற
படிநிலையின் அடிப்படையில் அவர்கள்மீது நிகழும் பாலியல் சுரண்டல், பாலியல் அவமதிப்பு, பாலியல் பாகுபாடு போற்றுதல் ஆகியவற்றையும் எதிர்ப்பது.

9. ஆண்-பெண் இருமைவாத பாலியல் பாகுபாட்டின் அடிப்படையில் கூலி பாகுபாடு இருப்பின் அதையும் இவ்வமைப்பு எதிர்க்கும்,

10.  மாற்றுப் பாலினம், இனம், மொழி, நிறம், மாற்றுத் திறனாளி, விளிம்பு நிலை மக்களிலும் பாலியல்வாத அடிப்படையில் கூலி பாகுபாடு, வேலைவாய்ப்பின்மை, வாழ்வாதார சுரண்டல்கள் ஆகியவற்றை எதிர்க்கும்..

11.   முறைப்படியான ஆவணத்தொகுப்பிற்காகவும், நமது பணி, அது பேசும் பிரச்சனைகள் தொடர்பான இணைய வழி கல்விக்காகவும், தகவல் பரிமாற்றத்திற்காகவும் ஒரு வலைப்பூவைத் தொடங்குதல். (இது முடிந்து விட்டது https://masessaynotosexism.wordpress.com/)

12 .  ஆவணப்படுத்துதல் – இதற்கு முக்கியத்துவம் கொடுத்து – உறுப்பினர்கள் குறிப்புகளை (references) சேர்த்தல்,  பகிர்தல். ஆவணம் எனும்போது நடப்பு நிகழ்வுகள் மட்டுமல்லாமல் பண்டையக் காலம் முதல் இன்று வரை என்பதை நிணைவில் கொண்டு அப்போதைய பாலினவாத பிரதிபலிப்புகளையும் சேகரிக்க வேண்டும். (உ.ம்: பழைய விளம்பரங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், புகைப்படங்கள், பத்திரிகைச் செய்திகள், படங்கள் – பட ரீல்கள், பழைய வீடியோ கேசட்டுகள், திரைப்பட கதாப்பாத்திரங்கள் பற்றிய கருத்து, சுவரொட்டிகள், இப்படி எதுவேண்டுமானாலும் இருக்கலாம். சமூக தளங்களில் நடந்த பாலியல் அத்துமீறல், கூலிப்பாகுபாடுகள்,
தொழிற்முறைப் பாகுபாடுகள் குறித்த குறிப்புகளாகவும் இருக்கலாம்.

13.  இந்த அமைப்பு பற்றிய அறிமுகக் குறிப்பும். திட்ட அறிக்கை சிறு குறிப்பும் பதியப்படும்.  அவற்றை உங்கள் நண்பர்கள் வட்டத்திற்கு (ஒத்த சிந்தனையுள்ள) அனுப்பலாம். முடிந்தால் சில பிரதிகள் எடுத்தும் இணைய வசதி அற்றோர் மத்தியில் கொடுக்கலாம். (முழு திட்ட அறிக்கை தயாரான பின்னர் சிறு பிரதி வெளியீடு குறித்து யோசிக்கலாம்).
இந்த அமைப்பு இன்னும் துவக்கக் கட்டத்தில் தான் உள்ளது, ஒரு முறைப்படியான கூட்டம் கூட்டப்பட்ட பின்னரே ஒரு ஒழுங்கமைப்பு (Organizational Structure), செயற்குழு ஆகியவை உருவாக்கப்படும். (இதற்கு ஒரு 6 மாத காலம் வரைகூட பிடிக்கலாம்).  அதுவரை தன்னார்வலர்கள் (Volunteers) என்ற வகையில் ஒத்த சிந்தனையுள்ள அணைவரும் ஒண்றிணைந்து பணிபுரிகிறோம்.   ஒவ்வொருவரின் அரசியல் நிலைப்பாடு வேறுவேறாக இருக்கலாம்.  இவ்வமைப்பில் பங்களிப்பு, ஆலோசனைகள் வழங்கும் அணைவரோடும் அவர்களின் எல்லா நிலைப்பாட்டிலும் அமைப்பின் நிறுவனரோ, அமைப்பின் உறுப்பினர்களோ உடன்படுகின்றனர் என்று பொருளில்லை. அதே நேரத்தில் முற்றிலுமாக ஒருவரை, ஒன்றை நிராகரிக்கும் போக்கும் இவ்வமைப்பில் இல்லை. நட்பு முரண்பாடு, பகை முரண்பாடு என்பதை இவ்வமைப்பு வழிமொழிகிறது.  அந்த வகையில் கருத்துமுதல்வாத, மதவாத, வலதுசாரி போக்குக்கு இவ்வமைப்பு துணை நிற்காது. அதேபோல் இடதுசாரி, மூற்போக்கு சிந்தனைகளில் விமர்சனம், சுயவிமர்சனப்போக்கு ஆகியவற்றையும் நட்பு முரண்பாடு எனும் வகையில் கணக்கில் கொண்டு இடதுசாரி, முற்போக்கு வமர்சகர்கள், அறிவுஜீவிகள், அரசியல் விமர்சர்கர்கள் ஆகியோரோடும் இணைந்து இவ்வமைப்பு பணிபுரிய விரும்புகிறது.

ஆலோசகர்கள்: மூத்த சமூக / பெண்ணியஆர்வலர்கள், எழுத்தாளர்கள் ஆலோசகர்களாக இருக்கின்றனர். அவர்களின் ஆலோசனையின் பேரில் முன்வரைவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.  அவர்கள் பற்றிய விபரங்கள் முறைப்படியான ஒரு கூட்டத்தில் அவர்களின் அனுமதி பெற்றுப் பகிரப்படும்.

எளிமைபடுத்தி சொல்வதானால் இது ஒரு மனித உரிமை சார்ந்த அமைப்பு, ஒரு அரசியலமைப்பு வடிவத்தை இப்போதைக்கு கொடுக்கவியலாது. (This is not an NGO, Political Party, Alliance of any Political Group etc., As an Individual I have started this Movement out of my own concern and am seeking help from People who have similar concern. English Translation of this draft agenda will be posted shortly.)


Advertisements

Tagged: , , , , , ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: