வோடஃபோன் விளம்பரத்தின் சிறுவர் மீதான பாலியல் சுரண்டல்


வக்கிரமும், பொறுப்பின்மையுமே பணம் செய்வதற்கான, விளம்பரத்திற்கான தன்மை என்று சமீபத்திய விளம்பரங்கள் நமக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் 11 அல்லது 12 வயது சிறுவர்களை வைத்து வெளிவந்திருக்கும் வோடஃபோனின் புதிய விளம்பர ’கரு’ (theme) மிகவும் அதிர்ச்சியூட்டக்கூடியதாக இருக்கிறது.

‘இணைப்பு – தொடர்ச்சியாக, தொல்லையில்லாமல்’, ’உடனடி தொடர்புகள்’ என்கிற தலைப்புகளில் விளம்பரங்கள் வருகின்றன. 11 அல்லது 12 வயதில் இருக்கும் குழந்தைகள் இருவரை கதாநாயகன், கதாநாயகி என்ற வகையில் சித்தரித்துள்ளனர். ஒரு விளம்பரத்தில் அந்த இரு ‘சிறுவர்களும்’ ‘தனிமையில்’ உரையாடுவதற்கு ஏதுவாக ஒரு நாய் காவல் காக்கிறது.

இரண்டாவது விளம்பரத்தில் பொம்மை காரை வைத்து விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவனை நாய் ஒன்று எழுப்பி வெளியே அழைத்து வருகிறது. சிறுமி மிதிவண்டி ஓட்டியபடி ஓரக் கண்ணால் ‘நாயகனை’ பார்த்தபடி, காதல் புன்னகை சிந்தியபடி செல்கிறாள்

மூன்றாவது விளம்பரம்: ’ஆண்’ ‘நாயகன்’ விளையாடுகிறார், ‘பெண்’ ‘நாயகி’ ஊஞ்சலில் ஆடியபடி படிக்கிறார். அவருடைய ‘ஸ்கார்ஃபை’ உருவி ஓடுகிறது நாய். அதை எடுத்துக் கொடுத்து அந்த ஆண் சிறுவன் உடனடி தொடர்பை ஏற்படுத்திக் கொள்கிறார்.

இவ்வளவு வக்கிரமாக ஒருவர் சிந்திக்க முடியுமா? குடும்பம், கற்பு என்று புனிதவாதம் பேசும் இந்த மண்ணில் எப்படி இது போன்ற சுரண்டல்கள், சிறுவர்கள் மத்தியில் பாலியல் தொடர்புகளை ஊக்குவித்தல் வகையான சித்தரிப்புகள் கண்டிக்கப்படுவதில்லை.

இந்த விளம்பரத்தில் தங்கள் பிள்ளைகளை ஈடுபடுத்தியுள்ள பெற்றோரின் அறம் எத்தகையது என்கிற கேள்வி எழுந்த வண்ணம் இருக்கிறது. இது போன்ற ‘குடும்பவாதிகள்தான்’ ஒழுக்கவாதம் பேசிக்கொண்டு பணத்திற்காகவும், புகழுக்காகவும் சுயமரியாதையை விற்று பிழைக்கின்றனர். பகுத்தறிவை பயன்படுத்துபவர்களை ‘சமூக விரோதிகள்’ என்கின்றனர்.

இவ்விளம்பரம் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும். தாமதிக்க நேரமில்லை இந்த கோரிக்கையை வலியுறுத்தி Press Council of India, Ministry of Information and Broadcasting, Advertising Council of India, Ministry of Women and Child Development, IBF India விற்கு மென் கடிதம் எழுதயிருக்கிறேன்.

Tagged: , , , , ,

2 thoughts on “வோடஃபோன் விளம்பரத்தின் சிறுவர் மீதான பாலியல் சுரண்டல்

 1. Gowrymahall March 17, 2012 at 5:20 am Reply

  எழுத்தாளர்?? நிர்மலா கொற்றவை அவர்களே!!!

  பெண்களுக்கெதிரான விளம்பரங்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியமைக்கு என்து வாழ்த்துக்கள். அந்த விடயத்தில் நானும் உங்களுக்கு உதவக் காத்திருக்கின்றேன்.

  இருந்தாலும் இவ்வாறான கவர்ச்சி காட்டும் விளம்பரங்களுக்கு அந்தப் பெண்கள் முன்னிப்பதனாலேயே அந்த விளம்பரங்கள் உருவாக்கப்படுகின்றன. அதற்கு உங்களது காத்திரமான நடவடிக்கைகள் ஏதும் எடுத்திருக்கின்றீர்களா???

  பெண் வன்முறைகளுக்கெதிராக குரல்கொடுக்கின்றோம் என்ற பெயரில் பேருக்காகவும் புகழுக்காகவும் பேராசசைக்காகவும் நீங்கள் உண்மை விளங்காமல் வரட்டுபிடிவாதத்தில் உண்மையைச் சொல்லும் இஸ்லாமிய மார்க்கத்தை பற்றி தரக்குறைவாக எழுதுகின்றீர்கள்.. உதாரணமாக…

  http://www.penniyam.com/2011/11/blog-post_16.html?showComment=1331974391723#c4035408225236602090

  இந்த கட்டுரையின் மூலமும் உங்களது பேஸ்புக் ( அதாவது .. ‘கடவுள் இல்லைஇ இல்லவே இல்லைஇ இருக்க வேண்டிய் அவசியம் இல்லைஇ இருந்தாலும் நான் அவரை நம்பவேண்டிய அவசியம் இல்லைஇ நம்பினாலும் வணங்க வேண்டிய அவசியம் இல்லைஇ அவர் அவருடைய வேலையை செய்யட்டும்இ நான் என் வேலையை செய்கிறேன். என்னுடைய வேலையில் ஒன்று கடவுள் இல்லை என்று சொல்வதும்இ மதங்களை விமர்சிப்பதும்இ எதிர்ப்பதும்இ குறிப்பாக இந்துத்துவம்..நான் இந்துவாக பிறந்ததால் இந்து மதத்தைப் பற்றிய விமர்சனம் செய்ய எனக்கு அதிக தகுதியும் உரிமையும் இருக்கிறது என்ற கருத்தி்ன் மூலமும் நீங்கள் ஒரு ”படித்த முட்டாள்” என்பதை நிரூபித்து விட்டீர்கள்.

  தன்னுடைய கருத்துப் பிழையானது என்று தெரிந்தும் அதனை திருத்த வழியில்லாத நீங்கள் எழுத்தாளர்கள்இ சீர்திருத்தவாதிகள் என்று கூறிக்கொள்வது உண்மையான அவ்வாறானவர்களை கேவலப்படுத்துவது போல் ஆகாதா சகோதரியே??

  வறுமைக்காககும் குடும்ப கஷ்டத்திற்காகவும் மேலும் தங்களுக்கு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளாலும் தன்னுடைய மானத்தையிழந்து மரியாதை இழந்து தன்னுடைய உடம்பைக்காட்டி விளம்பரங்களிலும் படங்களிலும் நடிக்கும் பெண்களை விட சீர்திருத்த வாதி என்ற பெயரில் உண்மையை பொய்யாக்கி பொய்யை உண்மையாக்கி சமூகத்தில் மத்தியில் பெயரெடுக்க உழைக்கும் உன்னை மாதரி பொண்ணுங்க செய்வது மிகவும் கேவலத்திலும் கேவலமானது என்பதை அருவறுப்புடன் உனக்கு கூறிக்கொள்கின்றேன்.

  அந்த கட்டுரையிலே நீ படத்தையும் பதிவேற்றியிருந்தாய்…

  அந்தப் படத்தைப் பார்த்தவுடன் உன்னுடைய புத்தி பெண்களுக்கு எதிரான வன்முறையாளர்களுக்கு எதிராக அல்ல…

  உண்மையையும் சத்தியத்தையும் சொல்லும் இஸ்லாத்திற்கு எதிரான உன்னுடைய காழ்ப்புணர்வின் வெளிப்பாடேயாகும் என்பதை அதனைப் படித்தவர்கள் நன்கு அறிந்திருப்பர்..

  அந்தப் படத்தில் வந்திருப்பது உன்னுடைய கணவர் என்றிருந்தால் உன்னுடைய தற்போதைய நிலை என்ன? என்பதை சற்று யோசித்தேன்… திடுக்கிட்டுவிட்டேன்…

  கேவலத்தை இல்லாமல் செய்ய அதனை விளங்கப்படுத்த கேவலத்தையே நீ கையாண்டிருப்பது கேவலத்திலும் கேவலமே…..

  பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துவதற்கு முதல் அந்த வன்முறைகள் ஏற்படக்காரணமான பெண்களை விழிப்படையச் செய்வதற்கான வழிவகைகளை செய்து கொடு… அதற்குப் பிறகு ஏனைய விடயங்களை செய்து கொள்ளலாம்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: