எதிர்குரல்: தமிழ் சினிமா சூப் பாடல்களை முன்வைத்து – இளவேனில் அ.பள்ளிபட்டி


டைப்புகளுக்கான இலக்கணங்களும், ஒழுக்கங்களும் உலகெங்கும் உடைத்தெறியப்பட்டு படைபாளிகளுகானா படைப்புவெளி எல்லைகளை கடந்து நிற்கும் இன்றையகாலகட்டத்தில் எதை வேண்டுமெனிலும் யார் வேண்டுமென்றாலும் ஓர் படைப்பாய் உருகொடுக்கலாம். அது ஓவியமோ, இலக்கியமோ, இசையோ, நடனமோ, நாடகமோ இல்லை சமகாலத்தின் மிகப்பெரிய ஆதிக்கம் நிறைந்த கலையான சினிமாவாகவும் இருக்கலாம். ஆனால் எந்த படைப்பையினும் அப்படைபுக்கும், படைப்பாளிக்கும் சமுகம் சார்ந்த அக்கறையும், பொறுப்பும் அவசியம். அதிலும் வெகுசனத்தை எளிதில் சென்று சேரும் சினிமாவுக்கு பொறுப்பு மிகஅதிகம்,மக்களின் மனதிற்குள் எளிதில் சென்றுசேரும் திறன் மற்றகலைகளை காட்டிலும் சினிமாவுக்கு அதிகம், ஆனால் நிஜம் எதிர்திசையில் பயணித்துக்கொண்டிருகிறது, நம் சூழலில் தமிழ் சினிமா படைப்பாளிகள் எத்துனை சமுக அக்கறையோடு படமெடுக்கிறார்கள் என்பது பெரும் கேள்வியே. கலையாய் பார்க்கப்படவேண்டிய, வளர்க்கப்படவேண்டிய ஓர் அமைப்பு அமெரிக்கமைய தாக்குதல்களால் உருவான காலம்தொட்டே மலிவு வியாபாரமாய் மட்டுமே செயல்பட்டு வருகிறது, நம் சமுகத்தின் பெரும் அவலமாகவும் நிற்கிறது. அதிசயமாய் எங்காவது ஒன்று இரண்டு நல்லப்படங்கள் வருவதை தவிர்த்து மற்றவைகள் மலிவு வியாபாரமே.

பெண்கள் மீது தொடுக்கப்படும் அடக்குமுறைகள், கலாச்சார திணிப்புகள், உடலியல் வன்முறைகளைகொண்டே மிகுதியான தமிழ் சினிமாக்கள் முன்னிறுத்தப்படுகின்றன, மக்கள்திலகமும், சூப்பர் ஸ்ட்ராரும் தங்களின் ஒழுக்க அறங்களை பெண்கள் மீதே பெரும்பாலும் திணித்தனர். அவர்களின் நாயகிகள் சமுக ஒழுக்க பிம்பங்களுக்குள் நின்றனர். கணவனே\காதலனே கண்கண்ட தெய்வமாகவும் சித்தரிக்கப்பட்டனர். இது பாகவதர் காலம் தொடங்கி எம்ஜியார், ரஜினி இன்றைய தனுஸ் படங்கள் வரை நீள்கிறது, இப்படியான ஒழுக்க விழுமியங்களை பேசிய அதே படங்களும், நாயகர்களும் பெண்ணுடல் அசைவுகளை வைத்து மாமிச வியாபாரத்தை இன்றுவரை செய்கின்றன. நாயக பின்பத்தை எதிர்துபேசும் பெண்கள் கொடியவர்கலாகவும், ஆண் உடலுக்கு அலைபவர்களாகவும், சமுக அக்கறை அற்றவர்களாக்கவுமே சித்தரிக்கப்பட்டு வருகின்றனர். பெண் எனும் மனிதனை தமிழ் சினிமா இன்றுவரை ஓர் பொருளாகவும்,ஆண்களுக்கு கீழான உயிரக்கவுமே பாவித்துவருகிறது. பெண் பின்பத்தை தமிழ் சினிமா எத்துனை கேவலமாய்  சித்தரிததோ அதே அளவு மோசமாய் சித்தரிக்கப்பட்டு, புனிததலத்தில் நிறுவப்பட்டுள்ள விடயம் காதல். தமிழ் சினிமாவே காதலுக்கு வெற்றி தோல்விகளை கற்று தந்தது, காதலுக்கான மரணங்களை சொல்லிக்கொடுத்தது. காதலை எதார்த்தத்தில் சொல்லமால் ஓர் கணவாய், மாயஜாலமாய் சொல்லித்தந்தது, இங்கும் பாதித்தவர்கள் பெண்களே. காதலில் பிரிந்துப்போன நாயகர்கள் ஆணாதிக்கத்தின் உச்சமாய் காதலியையும், பெண்களையும் கேவலப்படுத்தி பாடுவதென்பது சமிப தமிழ் சினிமாக்களில் வழமையான ஒன்றாகிவிட்டது. அவ்வகை பாடல்களுக்கு வைத்துள்ளபெயர் அபத்தத்தின் உச்சம் “சூப் சாங்”

மயக்கமென்ன படத்தில் வரும் “அடிடா அவளை, உதைடா அவளை” எனும் பாடல், தனுஸ் பாடி பெரும்புகழ் அடைந்த “Why this kolaiveri” எனும் பாடல், கழுகு படத்தில் வரும் “ஆம்மளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்”, உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளிவர இருக்கும் படத்தில் வரும் “வேணாம் மச்சான் வேணாம் இந்த பொம்பளை காதல்” இப்படி ஓர் பெரிய பட்டியலே நீண்டுசெல்கிறது. இம்மாதிரியான பாடல்களை நாம் நிராகரிக்கவேண்டிய கட்டாயத்தில் நிற்கிறோம். இதுப்போலான நச்சுக்கள் சமுகத்தில் ஏற்கனவே ஆண்களால் துன்பப்படும் பெண்கள் மீதான ஆண்களின் பார்வை மேலும் மோசமடைய செய்யும்.உண்மை இப்பாடல்களின் வரிகளும் நேர்எதிராய் நிற்கிறது.ஓர் ஆணாய் நான் அறிந்த காதல்களில் பெண்களே ஆண்களை காட்டிலும் அதிகமாய், மிக நேசமாய் காதலிக்கின்றனர் மிகுதியான தருணங்களில் ஆண்கள் ஏமாற்றவே காத்துகிடக்கின்றனர். அநேக பெண்கள் காதலை நிராகரிக்கவும், துறக்கவும் அவர்களின் சமுக சூழல்களும் குடும்பமும் காரனமாய் அமைந்துவிடுகிறது, ஆணாதிக்க சமுகத்தில் ஆண்களுக்கான கட்டுபாடுகளை காட்டிலும் பெண்கள் மீதே கலாசார ஒழுக்கங்கள் திணிக்கப்படுகிறது. ஆனால் இப்பாடல்கள் “வேணாம் மச்சான் வேணாம் இந்த பொம்பளை காதல்” என்று ஒலிகிறது பின்பு ஆண்கள் யாரை காதலிக்கபோகிறார்கள் ? உலகெங்கும் ஓரினை உறவு மட்டுமே நிரம்பியிருந்தால் மனிதயினம் அழிந்துப்போகுமே. கழுகு படத்தில் வரும் “ஆம்மளைகும் பொம்பளைக்கும் அவசரம்” பாடலோ அந்தகால காதல் உண்மையானதாகவும் தோற்றால் காதலர்கள் மரணித்துவிடுவார்கள் என்கிறது, சாவதுதான் நிஜகாதலா ?என்ன ஒரு பிற்போக்கு அரைக்கூவல். இவற்றின் உச்சமாய் பெண்கள் ஆண்களின் பொருளுக்காய் மட்டுமே காதலிப்பதாய் எல்லா பாடல்களும் ஒன்றுசேர ஒலிகிறது. பெண்கள் பொருளுக்காய் ஆண்களை நம்புவது ஆண்கள் உருவாக்கிய சமுகத்தால் கட்டமைகப்பட்டதே, அதே போல் நான் அறிந்தவரையில் எந்த பெண்ணும் ஆண் தான் பணத்தை சிலவு செய்யவேண்டுமென நினைப்பதில்லை நீங்களே முதலில் உங்கள் ஆண் அடையாளத்தை நிலைநாட்ட பணம் சிலவு செய்கின்றிர்கள், எனக்கு கிட்டிய எல்லா தோழிகளும் என் நிலைமையை அறிந்துக்கொண்டு பலசமயங்களில் சோறு போட்டுள்ளனர், எனக்காய் நான் வேண்டிய புத்தகங்களை வாங்கிதந்துள்ளனர், ஆடைகள் வாங்கிதந்துள்ளனர், மது அருந்தவும் காசு கொடுத்துள்ளனர். என் வறுமைக்காய் தன் நகைகளை அடகு வைத்து எனக்கு பணம் கொடுத்த தோழிகளை நான் சொல்லமுடியும். அவர்களுக்காய் நான் என்றும் நன்றிகடன் பட்டவனாய் இருப்பதை தவிர அவர்கள் காலத்தால் செய்த உதவிக்கு என்னால் எந்த கைமாறும் செய்யமுடியாது. அதேபோல் மயக்கமென்ன படத்தில் வரும் “அடிடா அவளை உதைடா அவளை” தன் சக மனிதன் மீது வன்முறையை ஏவிவிட யார் இவர்களுக்கு உரிமைதந்தது.இவர்களை பொறுத்தவரை பெண் ஓர் பொருள் அவளுக்கு தனிப்பட்ட விருப்ப, வெறுப்புகள் இருக்கக் கூடாது. ஆண்கள் எத்துனை பெண்களை நினைத்தும் கைமைதுனம் செய்யலாம், திருமணத்துக்குமுன் இவர்களுடன் ஊர் சுற்ற, படுக்க ஓர் பெண்தேவை. தங்களின் ஒழுக்க பிம்பத்தை சமுகத்தில் பாதுகாக்க யாரையும் தேவடியா என்று சொல்ல தயங்குவதில்லை. ஆனால் இவர்கள் மட்டும் தங்கள் திருமணம் செய்துக்கொள்ள யோனி கிழியாதமனிதனை எதிர்பார்கின்றார்கள்.இப்படி காதல் குறித்தும் பெண் குறித்துமான முட்டாள்தனங்கள் நிரம்பிநிர்கிறது தமிழ் சினிமா

வியாபாரம் எனும் போர்வையில் இவர்கள் எப்படியும் படமெடுக்க துணியும்போதும் நாம் அவற்றை நிராகரிக்கவும் துணிய வேண்டும், நாம் நினைத்துக்கொண்டிருபதைபோல் சினிமா வெறும் பொழுதுபோக்கல்ல மனித மனங்களுக்குள் சென்று மாற்றத்தை வெகு எளிதாய் நிகழ்த்த கூடிய மிகப்பெரும் சக்தி, அதற்கான சமுக கடமைகள் மிகஅதிகம் அதைவிடுத்து சமுகத்தின் நச்சாய் இருக்கும் பட்சத்தில் அவற்றை எதிர்கவேண்டியுது நம் கடமை. மேலே கூறிய அணைத்து பாடல்களையும் முற்றிலும் நிராகரிப்போம், எதிர்ப்பினை பதிவுசெய்வோம்

Tagged: , , , , , ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: