இந்தியாவில் பெண் இனப்படுகொலை / பெண் சிசுக் கொலை / பாலினப் படுகொலையை நிறுத்துவதற்கான மனு.


Translated from the original by Kotravai

Image

கடந்த 3 தலைமுறைகளில், தோராயமாக 50 மில்லியன் பெண்கள், இந்தியாவின் மக்கள் தொகையிலிருந்து பெண்கள் என்ற ஒரே காரணத்திற்காக முறையாக அழித்தொழிக்கப்பட்டிருக்கிறார்கள்.  மானுட வரலாற்றில் நிகழ்ந்திருக்கும், நிகழும் மிக மோசமான இனப்படுகொலைகளில் முதன்மையானது இப்படுகொலைகள். இது அமைதியாக நிகழ்கிறது, தொடர்ந்து கொண்டும் இருக்கிறது.  ”காணாமல் போனவர்கள்” எனும் சொல் உண்மையில் ஒரு இடக்கரடக்கல். இதை 1986ல் முதன் முறையாக நோபேல் பரிசு பெற்ற Dr. அமர்தியா சென் அவர்கள் இந்தியாவை எச்சரிக்கும் சொல்லாக பயன்படுத்தினார். 37 மில்லியன் பெண்கள் இந்நாட்டிலிருந்து “காணாமல் போனார்கள்” என்று ஒரு கணக்கிட்டார். அதன் பின்னர் இந்தியாவிலிருந்து பெண்களை நீக்கும் செயலானது பெருகிக் கொண்டே தான் இருக்கிறது.

இந்தியாவில் பெண்களை நீக்கும் வழிமுறைகள் பல உள்ளன.  அவை பெண் கருக் கொலை, பெண் சிசுக் கொலை, பெண்களைப் பட்டினிப் போடுதல், வரதட்சனைத் தொடர்பான கொலைகள், “கௌரவ”க் கொலைகள், கருவிலேயே பெண் குழந்தைகளைக் கொல்வதற்காகத் திணிக்கபப்டும் தொடர் கருக்கலைப்பினால் விளையும் கர்பக்கால மரணங்கள் ஆகும்.

பெண் சிசுக்கொலைக்கென இந்தியாவில் ஒரு ஆழ்ந்த வேர் வரலாற்றில் உள்ளது. கிராமப்புரப் பகுதிகளில் இது மிகத் தீவிரப் பழக்கமாக உள்ளது. சிறு நகரம், பெறு நகரம் இவற்றில் வாழும் படித்த, மேல்தட்டு வர்கங்கள் பயன்படுத்தும் பாலியல் அறிந்த பின்னர் கருவிலேயேக் கொலை செய்யும் வழிமுறை விலை உயர்ந்தது என்பதால் கிராமங்களில் பெண் சிசுக் கொலையைக் கடைபிடிக்கின்றனர்.  பிறந்த பெண் சிசுவைக் கொல்ல மருத்துவச்சிக்கு வெறும் 100 ரூபாய் (U.S. $2.50) கொடுத்தால் போதும்.குழந்தைகள் கழுத்தறுக்கப்பட்டு, உயிரோடு புதைக்கப்பட்டு, பால் பக்கெட்டுகளில் மூழ்கடிக்கப்பட்டு அல்லது விசம் கொடுத்துக் கொல்லப்படுகின்றனர்.  இந்தியாவில் சிலப் பகுதிகளில் இப்பணி தந்தைக்கு அல்லது தந்தைவழி தாத்தாவுக்கு ஒதுக்கப்படுகிறது.

திட்டமிடப்பட்ட பட்டினி மற்றும் புறக்கணிப்பு: கருக்கொலையிலிருந்து தப்பிக்கும் நிறையப் பெண்கள் பட்டினியாலும், புறக்கணிப்பாலும் நீண்ட காலம் வாழ்வதில்லை.  5 வயதுக்கு குறைவான சிறுமிகள் மத்தியில் அதே வயதொத்த சிறுவர்களை விட 40% அதிக இறப்பு நிகழ்கிறது. ஏனென்றால் பெற்றோர்கள் சிறுமிகளின் உணவுக்காகவும், மருந்திற்காகவும் செலவு செய்ய விரும்புவதில்லை.  ஒரு பெண் குழந்தைக்கு அதற்குரிய தகுதியில்லை; அவள் இறப்பதே மேல் என்று நிணைக்கிறார்கள்.

பெண் கருக்கொலை என்பது இந்தியாவில் இப்போது தடையற்ற ஒரு நிகழ்வாகி இருக்கிறது. குறிப்பாக மத்திய வர்க்கம் மற்றும் மேல்தட்டு மக்களிடம்.  அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம் ஒரு மருத்துவர் கருவின் பாலியல் அடையாளத்தை வெளியிடக்கூடாது என்றாலும் ஒவ்வொரு வருடமும் 1 மில்லியன் பெண் கருக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் அழிக்கப்படுகிறது.  இன்னும் சில வருடங்களில் 2 முதல் 5 மில்லியன் என உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்பக்கால மரணம்  ஆற்றல் மிக்க மகள்களை அழிக்க தொடர் கர்ப்பத்திற்கும், கருக்கலைப்புக்கும் பெண்கள் (தாய்கள்) உட்படுத்தப்படுவதால், சில வேளைகளில் பாதுகாப்பற்ற முறைகளில் இது நடப்பதால், கர்பக்கால மரண எண்ணிக்கையில் இந்தியா உலகிலேயே முதன்மை இடம் பிடிக்கிறது. ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் 1 கர்பிணிப் பெண் இறக்கிறார்.

வரதட்சனைக் கொலைகள் திருமணமான இளம் பெண்கள் வரதட்சனைக்காகக் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. ஏனென்றால் அப்பெண்ணின் மாமனார்-மாமியார்களின் வரதட்சனை நிபந்தனைகளை பெண்ணைப் பெற்றவர்களால் பூர்த்தி செய்யமுடிவதில்லை. ’வரதட்சனை மரணங்கள்’ என்று சொல்லப்படும் இது பெரும்பாலும் கணவன்மார்கள், அவரது பெற்றோர்கள், சகோதர-சகோதரிகள் அனைவரும் சேர்ந்து செய்யும் கும்பல் கொலைகளாகத்தான் இருக்கிறது.  உடல் மீது மன்னெணை ஊற்றப்பட்டு, எரியூட்டப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இது தற்காலிக விபத்து போன்று புனையப்படுகிறது.  இல்லையேல் நிறைய தூக்க மாத்திரைகளை உட்கொள்ள வைத்தும், தூக்குக் கயிற்றில் தொங்க வைத்தும் ”தற்கொலை” நாடகமியற்றப்படுகிறது. நிறைய இளம் பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாகி தற்கொலைக்கு தள்ளப்படுகின்றனர்.  இந்த முறைகளில் ஒவ்வொரு வருடமும் 25000 பெண்கள் கொல்லப்படுகிறார்கள். உயிர்தப்பிய மற்ற ஆயிரத்தவர்கள் மிக மோசமான தீக்காய பாதிப்புகளோடும் ஊனத்தோடும் காலம் தள்ளுகிறார்கள்.

இதுபோன்ற இனப்படுகொலைகள் ஏழை, பணம் படைத்தவர், படித்தவர், படிக்காதவர், மத்திய வர்க்கம் என  இந்தியாவின் அனைத்துப் பிரிவுகளிலும் நடக்கிறது. இந்தியாவில் பெண் இனப்படுகொலைக்கும், கல்வி, பொருளாதாரம், பண்பாடு மற்றும் மதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.  அறியாமையோ அல்லது வறுமையோ இதற்கு காரணமில்லை.  விரிவான, கடுமையான சட்டமின்மையே முழுக்க முழுக்க இதற்கு காரணம். நாட்டின் சட்டம் ஒழுங்கு முறையின் அக்கறையின்மையே இதற்கு காரணம்.

 மனு

______________________________________________________________________________________________

பெறுநர்: இந்திய அரசாங்கம், மனித உரிமைள் உயர் ஆணையர் அலுவலகம் (The OHCHR,), யுனிசெஃப், யுனிஃபெம், ஐ நா மக்கள் தொகை நிதி ஆணையம் (The UNFPA), பெண்களுக்கெதிரான பாகுபாட்டை அழிப்பதற்கான செயற்குழு (CEDAW), ஐரோப்பிய ஒன்றியம், ஜி8

இங்கணம் கீழே கையொப்பமிட்டுள்ள நாங்கள் அணைவரும் இந்தியாவின் மக்கள் தொகையிலிருந்து மில்லியன் கணக்கான பெண்கள் அழித்தொழிக்கப்பட்டதையும், தொடரும் அழித்தொழிப்பு செயல்களையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்திய நாட்டின் பெண் குடிகளின் உயிர்களைப் பாதுகாக்கத் தவறிய இந்திய அரசாங்கமே இதற்கு பொறுப்பேற்க கடமைப்பட்டவர்கள்.

மனித உரிமைகளின் அடிப்படையிலிருந்து நாங்கள் முறையிடுகிறோம். தீவிர தடுப்பு நடவடிக்கை சக்திகளை நடைமுறைப்படுத்தி பெண் இனப் படுகொலையை தடுக்க இந்திய அரசாங்கம் உடனடியான, பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் . நிலவும் சட்டங்களை நடைமுறைப்படுத்தியும், மேற்கொண்டு கடுமையான சட்டங்களை இயற்றியும் அரசாங்கம் பெண் சிசுக்கொலை, கருக்கொலை, வரதட்சனைக் கொலை மற்றும் தொடர்புடைய அழித்தொழிப்புக் கொலைகளை முடிவுக்குக் கொண்டு வரும் காலத்தை அறிவிக்க வேண்டும். இந்த குற்றங்களில் இந்திய மருத்துவமனைகள், அரசாங்க அலுவலகங்கள் மற்றும் சட்ட அமலாக்கத் துறைகள் ஆகியவற்றை பொருப்பாளராக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதை செயல்படுத்தும் காலவரையரையை அறிவிக்க வேண்டும்.

மேற்சொன்ன கோரிக்கைகளை இந்திய அரசாங்கம் அங்கீகரிக்கவும்,  நடைமுறைப்படுத்தவும்   வேண்டுமென இந்த மனு மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது இந்த முயற்சியில் சர்வதேசிய மனித உரிமை குழுக்கள் எம்மோடு கைகோர்த்து இந்திய அரசாங்கத்தை செயலில் இறங்குமாறு வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

மனுவில் கையெழுத்திட கீழே உள்ள புகைப்படத்தில் அழுத்தவும்.

மொழிபெயர்த்தவர்: கொற்றவை, சென்னை

About The 50 million missing: The 50 Million Missing Campaign was founded in December 2006 by writer and gender-activist Rita Banerji.  Today it is an extensive, online, international campaign, which runs on volunteer effort and zero funds!  It works steadfastly on boosting public awareness on issues concerning India’s female genocide, and spearheading action for change.

Rita Banerji is an author, photographer and  gender activist.

Her book  Sex and Power: Defining History, Shaping Societies was released by Penguin Books in 2008 (Penguin Global, 2009).  She is also the founder and chief administrator ofThe 50 Million Missingan online, global campaign working to stop the ongoing female genocide in India.

About the Translator: Kotravai is a writer who has both written and translated articles with a feminist focus into Tamil. She is also the founder of  M.A.S.E.S – a Movement Against Sexual Exploitation and Sexism  to create awareness about sexist representations in media and to campaign against gender inequality.   She blogs at saavinudhadugal.blogspot.in

கொற்றவை சென்னையில் வசிப்பவர். பெண்ணியக் கட்டுரைகளை எழுதிவருபவர். ஊடகங்களில் பெண் உடல் சித்தரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பாலியல் பாகுபாட்டுக்கெதிரான பிரச்சாரங்களை மேற்கொள்வதற்காகவும் மாசெஸ் எனும் அமைப்பைத் தொடங்கி செயல்பட்டுவருகிறார்.  M.A.S.E.S.  athttps://masessaynotosexism.wordpress.com/

Source: http://tinyurl.com/cn33euc

Advertisements

Tagged: , , , ,

3 thoughts on “இந்தியாவில் பெண் இனப்படுகொலை / பெண் சிசுக் கொலை / பாலினப் படுகொலையை நிறுத்துவதற்கான மனு.

 1. சிவக்குமார் July 22, 2012 at 7:53 am Reply

  கையெழுத்திட்டுவிட்டேன். இது குறித்து இன்னும் விழிப்புணர்வு மிகப்பெரிய அளவு ஏற்படுத்தப்பட வேண்டும். பெண்சிசுக் கொலை வரதட்சணைக் கொடுமை இரண்டிற்குக் காரணம் சமூகத்தில்தான் இருக்கிறது.

 2. சிவக்குமார் July 22, 2012 at 7:55 am Reply

  கொற்றவை நலமா ? பெண்சிசுக் கொலை குறித்து இவ்விணைப்புகளை முன்பே மின்னஞ்சலில் உங்களுக்கு அனுப்பியதாக நினைவு படித்தீர்களா ?

  http://epaper.timesofindia.com/Repository/ml.asp?Ref=VENSTS8yMDExLzA3LzE2I0FyMDE1MDE%3D

  தமிழில்;

  http://thamizvinai.blogspot.in/2011/12/160.html

  • நினைவிருக்கிறது சிவக்குமார். இப்போது வேறொரு தளத்தில் படிக்க நேர்ந்து அவரோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது. அவரது வேண்டுகோளிபடி தமிழில் மொழி பெயர்த்துள்ளேன். நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: