இட ஒதுக்கீடு என்பது பிச்சையல்ல….


1.   //அரசியல் சட்டப்படி, இடஒதுக்கீடு என்பது வேலை பெறுவதற்கு மட்டுமே என்கிறது நீதிமன்றம். இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ஒருவர் வேலைக்குச் சேர்ந்தாலும்கூட, அவர் வேலையில் சேர்ந்துவிட்ட பிறகு அரசு இயந்திரத்தின் அங்கமாக ஆகிவிடுகிறார். அரசு ஊழியர் என்ற அடையாளம் மட்டுமே அவருக்கு உரியது. சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட அரசு ஊழியராகத்தான் அவர் பணியாற்ற வேண்டும். அந்த உறுதிமொழியுடன்தான் அவர் பணியில் சேருகிறார்.// – கேட்பதற்கு மிக நன்றாய் இருக்கிறது, நடைமுறையில் ??  சாதியைச் சொல்லி சமைத்த உணவைத் தங்கள் பிள்ளைகள் சாப்பிடாது என்று சொல்லும் பெற்றோர். பத்து நாட்களில் இரண்டு பள்ளிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார் சுந்தர வணிதா எனும் பெண்….

2.  இட ஒதுக்கீட்டின் படி வேலைப் பெற்றோர், பதவி உயர்வில் தானாகேவே முதிர்ச்சியின் அடிப்படையில் பதிவி உயர்வு பெறுவதுதான் முறை, ஆனால் நடைமுறையில் அது பல்வேறு வகையில் முடக்கப்படுகிறது என்கிறார் தோழர் ஒருவர்.

3.  பதவி உயர்வில் இட ஒதுக்கீடு நடைமுறை படுத்தப்பட்டால், உயர் பதவிகளில் ஆதி திராவிடர் / ஒடுக்கப்பட்ட சாதியினர் / பழங்குடியினர் வந்துவிடுவர், அவர்களுக்கு கீழ் நாம் எப்படி வேலை செய்வது என்று எண்ணும் ஆதிக்க சாதியினரின் சாதி வன்மமே இதற்கு தடையாக உள்ளது.

4.  தினமணி இப்படி ஒரு தலையங்கம் எழுதுவதற்கு முன், நடைமுறையில் எத்தனை தலித்துகள் முறைப்படி உயர்பதவியை அடைய முடிகிறது, உயர் பதவிகளில் இருக்கும் நபர்களின் சாதிகளை கணக்கெடுத்து ’எந்த சாதியினர்’ எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது எனும் ஆய்வை நடத்தியிருக்கலாம்.

5.  இட ஒத்துக்கீடு என்பது ஏதோ இறக்கப்பட்டு போடும் பிச்சை என்பது போன்ற மனநிலைகளைக் காண முடிகிறது….உண்மையில் பறித்து வைத்த உரிமைகள் வழங்கப்படுவதற்கு பதில் அவர்கள் அதைப் போராடிப் பெறுகிறாரக்ள். சிறுபாnமையினராக இருக்கும் ஒரு கூட்டம் பெரும்பான்மையை சிறுபான்மையாக்கிய வரலாறு மழுங்கடிக்கப்பட்டு எல்லா வகைகளிலும் ஆளும் வர்க்கத்தின் துதி பாடும் வரலாற்றை மட்டுமே கற்றுக் கொண்டதின் விளைவு இந்த அறியாமைக்கு காரணம். பெரும்பாலான அரசியல் கட்சிகள் மேலும் மேலும் இதில் ஆதாயம் தேடிக் கொள்கின்றன. செய்தி என்கிற பெயரில் வார்த்தை விளையாட்டின் மூலம் சில ஊடகங்கள் அதற்கு வலு சேர்கின்றன.

உயர்பதவியில் இட ஒதுக்கீட்டை தடை செய்வதற்கான பரிந்துரைகள் வன்மையாக கண்டிக்கத்தக்கவை. அது தலையங்கமாக இருந்தாலும் சரி.

இட ஒதுக்கீடு என்பது பிச்சையல்ல, நம் மூதாதையர் இழைத்திருந்த கொடுமைகளின் விளைவுகளை சரிசெய்வதற்கான அறவழித் தீர்வு.  உரிமைக்குரியவர்கள் கேட்டுப் பெறும் நிலையில் வைத்திருபப்தற்காக இந்த-இந்து நாடும், அரசும், ஆதிக்க சாதி மக்களும் வெட்கப்படவேண்டும்.

 

Related link:

http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=648105&SectionID=132&MainSectionID=132&SEO&Title

Tagged: , , , , ,

9 thoughts on “இட ஒதுக்கீடு என்பது பிச்சையல்ல….

  1. tamil September 1, 2012 at 11:45 am Reply

    உச்சநீதிமன்றத் தீர்ப்பு தலித்களுக்கு இட ஒதுக்கீடு மூலம் பதவி உயர்வு தரக்கூடாது என்று குறிப்பிடவில்லை. நாகராஜ் வழக்கில் கே.ஜி.பாலகிருஷ்ணன் (உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி) தலைமையில் இருந்த பெஞ்ச அளித்த தீர்ப்பின் படி, அதில் குறிப்பிடப்பட்ட நிபந்தனைகளை கருத்தில் கொண்டு பதவி உயர்வு தரலாம் என்று சொல்கிறது.இதை நீங்கள் அறிந்திருக்கவில்லை என்று தோன்றுகிறது.அதற்கு மாறாக இருந்த விதிகளை/ஆணைகளை உச்சநீதிமன்றம் எப்படி செல்லத்தக்கவை என்று சொல்லும். இந்து நாடாக இந்தியா இல்லை என்று தெரிந்தும் இந்து நாடு என்று எழுதுகிறீர்கள். அதுதான் உங்கள் உள்மன விருப்பமோ என்னவோ,
    அப்படியே ஆகட்டுமே.

  2. tamil September 2, 2012 at 3:47 am Reply

    – உச்சநீதிமன்றம் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு என்பதை ஒரு விதியாக எந்த வித நிபந்தனையுமின்றி கொண்டுவருவதை ஏற்கவில்லை. தினமணியின் தலையங்கம் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கூடாது என்கிறது. நாகராஜ் வழக்கில் தரப்பட்ட தீர்ப்பு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு மூலம் தலித்கள் பதவி உயர்வு பெறுவதை சில விதிகளுக்கு உட்பட்டு செய்ய வேண்டும் என்கிறது, அது மட்டுமின்றி அதை நியாயமா இல்லையா என்பதை நிர்ணயிக்கும் அளவுகோல்களையும் வைக்கிறது.சில மாநிலங்களில் இந்த தீர்ப்பில் உள்ள விதிமுறைகளுக்கு முரணாக பதவி உயர்வு தரப்பட்டதுதான் இப்போது பிரச்சினைக்கு காரணம்.
    தினமணி தலையங்கம்- பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கூடாது
    உச்சநீதிமன்றத் தீர்ப்பு(கள்)- பதவி உயர்வில் தலித்களுக்கு இட ஒதுக்கீடு என்று கோட்டா வைத்து (அதாவது 15% ) செய்ய முடியாது. இட ஒதுக்கீட்டினை அங்கு கொண்டு வர சில நிபந்தனைகள்,விதிகள் பின்பற்றப்பட வேண்டும்.அவற்றின் அடிப்படையில் இட ஒதுக்கீடு தர வழியும், தேவையும் இருந்தால் அவ்வாறு செய்யலாம்.அதாவது தலித் என்பதால் பதவி உயர்வு கோட்டா மூலம் automatic ஆக கிடைக்காது.
    இது கோட்ட்டா பதவி உயர்வில் கூடாது என்றும் கூறவில்லை, அதே சமயம் அதை நிரந்தர, பொது விதியாகவும் மாற்றவில்லை. மாறாக
    பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டிற்கு வரையரை, நிபந்தனைகளை முன் வைக்கிறது.
    தினமணி தலையங்கத்தில் என்ன சொன்னாலும் நாகராஜ் வழக்கின் தீர்ப்புதான் நிலைக்கும், சட்டப்படி.ஏனெனில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அது.
    ஆனால் கட்சிகள், அமைப்புகள் சில எந்த தடையுமின்றி கோட்டா மூலம் தலித்கள் பதவி உயர்வினை பெற வேண்டும் என்கின்றன.
    இதை நான் ஏற்க முடியாது. ஏன் எனில் இது சமத்துவம் என்பதை
    முற்றிலுமாக நிராகரிக்கிறது. நாகராஜ் தீர்ப்பு சமத்துவம்/சமவாய்ப்பு மற்றும் சமூகநீதி/இட ஒதுக்கீடு இந்த இரண்டிற்குமுடையே ஒரு சமன்நிலையை கொண்டு வந்து பிறர் உரிமைகளும் பாதிக்கப்படக் கூடாது, தகுந்த காரணங்களின் அடிப்படையில் பதவி உயர்விற்கு இட ஒதுக்கீடு செய்யப்படலாம் என்று சொல்கிறது. ஆகவே அந்த அளவில்
    இதை ஏற்கலாம். ஆகையால் பொதுவாக பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கூடாது என்று கருதும் நான் கூட நாகராஜ் தீர்ப்பு முழுமையாக பின்பற்றப்படுவதை ஆதரிப்பேன். அதை எல்லோரும் ஏற்றால் பிரச்சினை தீர்ந்து விடும். ஆனால் உங்களைப் போன்றவர்கள் தலித் என்றால் இட ஒதுக்கீடு மூலம் பதவி உயர்வுகொடு என்பதுடன் அதை
    வரயரை இல்லாமல் அனைத்து பதவி உயர்வுகளுக்கும் தர வேண்டும்,
    அது automatic ஆக இருக்க வேண்டும் என்கிறீர்கள். நீங்கள் கோருவது தலித்களுக்கு accelerated promotion. இதை எப்படி ஏற்க முடியும்.தலித் என்கிற ஒரே காரணனத்தினால் கோட்டா அடிப்படையில் ஒருவர் தொடர்ந்து பதவி உயர்வுகளை பெற்றுக் கொண்டு முன்னேறிக் கொண்டே இருப்பார், பிறர் அதை சகித்துக் கொண்டிருக்க வேண்டும்.
    உங்கள் வேலையில் இப்படி இருந்து உங்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டால் ஏற்பீர்களா. உங்களுடன் வேலைக்கு ஒரே நாளில் ஒரே நிலையில் சேர்ந்த தலித் கோட்டா மூலம் தொடர் பதவி உயர்வு பெற்று 10 ஆண்டுகளில் உங்களைவிட மூண்று படிநிலைகளில் முன்னே இருப்பதையும், அதன் மூலம் அவர் உங்களை அதிகாரம் செய்வதையும் ஏற்பீர்களா இல்லை அதை எதிர்த்து நீதிமன்றம் செல்வீர்களா.
    உங்கள் மனச்சாட்சியை கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்கள்.

    இப்படி தலித்கள் பதவி உயர்வு பெறுவதால் OBCகளும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை.ஏனெனில் OBCகள் இட ஒதுக்கீட்டின் கீழ் பதவி உயர்வு பெறுவதை இந்த்ரா சஹானி வழ்க்கு தீர்ப்பு மூலம் உச்சநீதிமன்றம் முடிவுக்கு கொண்டு வந்து நிறுத்தி விட்டது.

    பெண்களுக்கும் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கோரி நீங்கள் ஏன் எழுதவில்லை. அதை உங்கள் ’முற்போக்கு, இடதுசாரி’ மற்றும் பெரியாரிய நண்பர்களில் எத்தனை பேர் ஆதரிபார்கள் என்பதை
    கேட்டுப் பாருங்கள். நியாயமாக பார்த்தால் பெண்ணியவாதியான நீங்கள் அதையும் வலியுறுத்தி எழுத வேண்டும்.தலித்களுக்கும்,
    பெண்களுக்கும் இட இதுக்கீடு பதவி உயர்வில் வேண்டும் என்று கையெழுத்து இயக்கம் துவங்குங்கள், தலித்களுக்கு இட ஒதுக்கீடு பதவி உயர்வில் வேண்டும் என்போரில் எத்தனை% பேர் அதை ஆதரிக்கிறார்கள் என்பதையும் அறிந்து விடலாம்.தயாரா அதை
    அறிவதற்கு.
    அரசியல்சட்டத்தில் இடமில்லை என்ற வாதம் வரும்.அதனால் என்ன கோட்பாடு என்ற அளவில் அதை பதவி உயர்வில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு ஆதரிக்க தயாரா என்று கேளுங்கள்.
    அரசியல் சட்டத்தை அதற்கொப்ப மாற்றவேண்டும் என்று கோரலாமே.

  3. உச்ச நீதி மன்றம் சொல்லியிருப்பது குறித்து இங்கு பேசப்படவில்லை, தினமணி தலையங்கத்திற்கான கண்டம் மட்டுமே இப்பதிவு என்பதை ஏற்கணவே விளக்கி விட்டேன். மேலும் இட ஒத்துக்கீட்டுக்கு எதிரான மனநிலை, பரிந்துரைகள் எவர் எந்த நிலையில் செய்தாலும் கண்டனத்துக்குரியது என்றிருக்கிறேன்.

    இட ஒதுக்கீட்டில் சமூக நீதி, சமத்துவம் குறித்து கவலைப்படும் நீங்கள், நடைமுறையில் தலித்துகள் / பழங்குடிகள் – குறிப்பாக அருந்ததியின மக்கள் மீது ஏவப்படும் சாதியக் கொடுமைகளை அறிந்திருக்கவில்லை என்றே நினைக்கிறேன்….கீழ வெண்மணி, உத்தபுரம், திண்ணியம் இதெல்லாம் நம் காலத்தில் நடந்தவை தானே.

    அம்பேத்கரின் புகைப்படத்தை வைப்பதற்கு கூட போராட வேண்டியுள்ளது. அவர் ஒரு சாதித் தலைவர் அவர் படத்தை அனுமதிக்க மாட்டோம் எனும் பேச்சுக்கள்….SC/ST ஆசிரியர் சங்கங்கள் எதிர்கொள்ளும் சவால்கள்….

    பஞ்சாயத்து பிரசெடிடண்ட் கிருஷ்ணவேனி அடித்து வீழ்த்தப்பட்ட சம்பவம் தெரியுமா? அதுவும் மாதவிடாய் நாளன்று…காரணம் அவர் சாதி…இருளர் சாதிப் பெண்கள் மீது பாலியல் வன்முறை……இப்படி ஒவ்வொரு நாளும் சாதிக் கொடுமைகள் ஆண் பெண் குழந்தை என்று பாராமல் நடந்து கொண்டுதான் இருக்கிறது, அதற்காகதான் அம்பேத்கர் இரட்டை வாக்குரிமை கேட்டார்.

    கோட்பாடுகளை, சாசனங்களை நன்கு அறிந்திருக்கிறீர்கள், கூடவே கொஞ்சம் நடைமுறை என்ன என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்…தேவைப்பட்டால் பாதிக்கபப்ட்டவர்கள் தொடர்பு விவரங்களை நானே தருகிறேன்.

    பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுக்காக போராட்டங்கள் நடந்து கொண்டு தானே இருக்கிறது…..

    அங்கும் எவர் கை ஓங்கியிருக்கிறது, ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்கள் நிலை என்ன என்பதை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

    பெண்களுக்கான் ஆதரவு குரல் உண்மையில் எங்கிருந்து வருகிறது என்பதையும் நாங்கள் அறிவோம். நன்றி.

  4. மா. தமிழ்ப்பரிதி September 3, 2012 at 10:36 am Reply

    இது விபரீதமல்ல…. வேண்டாம் இந்த சாதி வெறி
    எல்லா நிலைகளிலும் வேண்டும் இட ஒதுக்கீடு

    தினமணியில் வெளியான ‘’வேண்டாம் இந்த விபரீதம்’’ என்னும் சாதி வன்மம் கொண்ட தலையங்கத்தையும் ( 22.08.2012) துக்ளக்கில் வெளியான சோவின் ( சோ, பதவி உயர்வில் இட ஒதுக்கீடா? 05.09.2012, பக்க எண்: 17,18,) கட்டுரையையும் மிகக்கடுமையாகக் கண்டி.த்தும் களமாடிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள். பூணூல் புடைக்க குடுமி சிலிர்க்க தாண்டவமாடும் தினமணி, மற்றும் துக்ளக்கின் சாதிவெறி வன்மத்திற்கு எதிர்வினையாற்றும் தோழர்களுக்கு நன்றி சொல்லி நான் அந்நியப்பட்டுக்கொள்ள விரும்பவில்லை. இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் சாதிவெறிகொண்டு அலையும் இவர்களுக்கு எதிராக அறிவாயுதம் ஏந்த வேண்டியது மானமும் அறிவுமுள்ள நம் அனைவரின் கடமையுமாகும். அதை நாம் செய்தாக வேண்டும்.
    இந்தியாவில் உரிய சட்டப்பாதுகாப்பு இருந்தாலும், ஒடுக்கட்ட மக்கள் தொடர்பான பல சட்டங்கள் செயற்படுத்தப்பெறாமல் உறக்கநிலையிலேயே இருக்கின்றன. இட ஒதுக்கீடு இன்னமும் முழுமையாக நடைமுறை படுத்தப்படவில்லை என்பதற்கு புதிய ஆய்வுகள் ஒன்றும் தேவையில்லை. வெள்ளிடை மலையாக உதாரணங்களும் சம்பவங்களும் கொட்டிக்கிடக்கின்றன. 2004 ஆம் ஆண்டு புள்ளிவிவரத்தின்படி, குரூப் ஏ பதவிகளில் 10%, குரூப் பி பதவிகளில் 12%, குரூப் சி பதவிகளில் 15% என்பதாகவே இட ஒதுக்கீடு உள்ளது. (ரவிக்குமார், பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு அவசியமே, புதிய தலைமுறை, 06.09.2013, பக்க எண்கள்: 50, 51); ஏன் சட்டப்படி 19% இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்பதற்காக தினமணிக்கும் துக்ளக்கிற்கும் கோபம் வரவில்லை.
    நடுவண் அரசில் உள்ள 88 செயலர் பதவிகளில், ஒருவர்கூட ஒடுக்கப்பட்ட பிரிவைச் சார்ந்தவர் இல்லை, 66 கூடுதல் செயலர் பதவிகளில் ஒருவர் தாம் ஒடுக்கப்பட்டோர் பிரிவைச் சார்ந்தவர், 249 இணைச்செயலர் பதவிகளில் 13 பேர் மட்டுமே ஒடுக்கப்பட்டப் பிரிவைச் சார்ந்தவர், 471 இயக்குநர் பதவிகளில் 31 பேர் மட்டுமே ஒடுக்கப்பட்ட பிரிவைச் சார்ந்தவர்கள் (ரவிக்குமார், பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு அவசியமே, புதிய தலைமுறை, 06.09.2013, பக்க எண்கள்: 50, 51) இதுதான் இந்தியா இட ஓதுக்கீட்டைச் செயல்படுத்தும் நிலை. இதற்கெல்லாம் தினமணியும் துக்ளக்கும் சினம் கொள்ளவில்லை.
    இந்தியாவிலுள்ள 24 நடுவண் பல்கலைக்கழத்தில் ஒடுக்கப்பட்டப் பிரிவைச் சார்ந்த உதவிப்பேராசிரியர்களுக்கான 740 பணியிடங்களில் நிரப்பப்பெறாதவையாக உள்ளன. 399, ஒடுக்கப்பட்டோர் பிரிவைச் சார்ந்த இணைப்பேராசிரியர்களுக்கு உள்ள 84% பணியிடங்களில் நிரப்பப்பெறாதவைகளாக உள்ளன. ஒடுக்கப்பட்டோர் பிரிவைச் சார்ந்த பேராசிரியர்களுக்கு உள்ள 92% பணியிடங்களில் நிரப்பப்பெறாதவை (ரவிக்குமார், பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு அவசியமே, புதிய தலைமுறை, 06.09.2013, பக்க எண்கள்: 50, 51) என தினமணியும் துக்ளக்கும் வெகுண்டெழவில்லை. ஆனால் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு என்ற குரல் எழுந்ததுமே துள்ளியெழுந்து இவாள்கள் தங்கள் இனப்பற்றை வெளிப்படுத்தியுள்ளனர்.
    இந்திய அரசமைப்புச்சட்டம் நிர்ணயித்துள்ள சட்டப்படியான இட ஒதுக்கீட்டையே புறக்கணிக்கும் கடுஞ்சாதி வெறி ஒருபுறமிருக்க, சாகும்வரை சமத்துவம் பேசிய தந்தை பெரியாரின் பெயரைத் தாங்கி நிற்கும் பெரியார் பல்கலைக்கழகம், உள்ளிட்ட இதர தமிழகப் பல்கலைக்கழகங்களில் (உயர்கல்வித்துறையில்) நிலவும் ஆதிக்கச்சாதி மேலாண்மைகளும் வன்மங்கள் வரம்புக்குள் அடக்கமுடியாதவை:அவற்றில் சில இதோ;
    • உரிய தகுதிகள் இருந்தும், ஒடுக்கப்பட்டோர் பிரிவைச் சார்ந்த பல இணைப் பேராசிரியர்களுக்கு ஆண்டுகள் பல கடந்தும் இன்னமும் பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப்படாமல் சமூகநீதி மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் இவர்கள் துறைத்தலைவர் பதவி, ஆசிரியர் தேர்வுக்குழு உறுப்பினர் உள்ளிட்ட எவ்வித பொறுப்புகளுக்கும் செல்லாமல் தடுக்கப்பட்டுள்ளனர்.
    • டாக்டர். பி.ஆர்.அம்பேத்கரின் படத்தை பல்கலைக்கழகத்தில் வைக்க மறுப்பதோடு, அண்ணலை சாதி சார்புடையவர் என பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கூறி வருகிறார். தமிழ் நாடு அரசு G.O. (Ms) No. 47, Public (General I) Department dated: 7.1.1978 நாளிட்ட அரசாணையில், அரசு அலுவலகங்களில் டாக்டர். பி.ஆர்.அம்பேத்கரின் படத்தை வைப்பது குறித்து தெளிவான அரசாணையை வெளியிட்டுள்ளது. ஆனாலும் தொடர்கிறது ஆதிக்க சாதி வெறி.

    • ஒடுக்கப்பட்டோர் பிரிவைச் சார்ந்த மாணவர், ஆசிரியர்களின் சமூகநீதியைக் கண்காணிக்கும் SC/ST CELL, இன்னமும் பெரியார் பல்கலைக்கழகத்திலும், இதர தமிழகப் பல்கலைக்கழகங்களிலும் அமைக்கப்பெறவில்லை. (பெரியார் பல்கலைக்கழகத்தில் SC/ST CELL அமைப்பதற்கு பல்கலைக்கழக நிதி நல்கைகுழு (UGC) அளித்த ஆதார நிதியில் ஒரு காசுக்கூட செலவு செய்யாமல், வட்டியுடன், பல்கலைக்கழக நிதி நல்கைகுழுவிற்கு (UGC) பெரியார் பல்கலைக்கழகம் திருப்பி அளித்துள்ளது.இந்த சமூக அநீதிக்கு யாரைத்தண்டிப்பது?

    • பல்கலைக்கழக விடுதியில் தங்கிப்பயிலும் ஒடுக்கப்பட்டோர் பிரிவைச் சார்ந்த மாணவர்கள் தங்குமிடக்கட்டணம் (accommodation fee) செலுத்துவதிலிருந்து விலக்களித்து 2006 ஆம் ஆண்டிலேயே பல்கலைக்கழக நிதி நல்கைக்குழு (UGC) ஆணையிட்டுள்ளது. ஆனால், பெரியார் பல்கலைக்கழகத்தில் தங்குமிடக்கட்டணம் ஒடுக்கப்பட்டோர் பிரிவைச் சார்ந்த விடுதி மாணவர்களிடமிருந்து பெறப்படுகிறது. (மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தங்குமிடக்கட்டணம் செலுத்துவது விலக்களிக்கப் பெற்றுள்ளது). பெரியார் பல்கலைக்கழகத்தில் இதுவரை பல்கலைக்கழக நிதி நல்கைக்குழுவிற்கு (UGC) விதியை மீறி 5 இலட்சத்திற்கு மேல் முறைகேடாக ஒடுக்கப்பட்டோர் பிரிவைச் சார்ந்த விடுதி மாணவர்களிடமிருந்து தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது.
    • தமிழகப் பல்கலைக்கழகங்களில் பயிலும் முனைவர்ப்பட்ட மாணவர்கள் கல்விக்கட்டணம் (Tuition fees) செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப் பெற்றுள்ளனர் (G.O Ms. No.722 Social Welfare Dept. Dt. 13-10-1977). ஆனால்,பெரும் போராட்டத்திற்குப்பின் இம்முரண்பாடு, 2011 இல் தான் பெரியார் பல்கலைக்கழகத்தில் சரிசெய்யப்பெற்றது. 2011 க்கு முன்னர் ஒடுக்கப்பட்டோர் பிரிவைச் சார்ந்த மாணவர்கள் செலுத்திய கல்விக்கட்டணத்தை பெரியார் பல்கலைக்கழகம் மீள வழங்க மறுத்து வருகிறது.

    • ஒடுக்கப்பட்டோர் பிரிவைச் சார்ந்த ஆசிரியர்கள், பணியாளர்கள் சங்கத்தின் கூட்டத்தை பல்கலைக்கழக வளாகத்தினுள் நடத்திட, பெரியார் பல்கலைக்கழக ஆதிகச்சாதி வன்ம நிருவாகம் மறுத்து வருகிறது.

    உரிய சட்டப்பாதுகாப்பு இருந்த போதிலும், இட ஒதுக்கீடு இன்னமும் முழுமையாக நடைமுறை படுத்தப்படவில்லை, நிதி செலவு செய்யப்படாமலேயே திருப்பி அனுப்பப்படுகிறது. இந்தியா முழுவதும் ஒடுக்கப்பட்டோர் பிரிவைச் சார்ந்தோர் மீதான வன்கொடுமை வழக்குகள் பெரும்பான்மையாக தள்ளுபடி செய்யப்படுகின்றன. இதையெல்லாம் இதுவரை எந்த பொதுச்சங்கம் கேட்டுள்ளது. ஒடுக்கப்பட்டோர் உரிமைகளை ஒடுக்கப்பட்டோர் கேட்கக்கூடாது என்பதற்காகவும், தீண்டாமை நிலைநாட்டப்படவேண்டும் என்பதற்காகவும் ஒடுக்கப்பட்டோர் பிரிவைச் சார்ந்தப் பணியாளர்கள் சங்கம் அமைப்பதை ‘’வேண்டாம் இந்த விபரீதம்’’ என்கிறது தினமணி. ஒடுக்கப்பட்டோர் பிரிவைச் சார்ந்தப் பணியாளர்களின் சங்கங்கள் சாதி வன்மங்களை, தீண்டாமையை, எதிர்ப்பதால், உரிமைக்குக்குரல் கொடுப்பதால் தினமணி தன் நஞ்சைக் கக்குகிறது.
    வன்மங்களும்,வஞ்சகங்களும்,துயரங்களும்,துரோகங்களும்,,அவமதிப்புகளும், அவதூறுகளும், அடக்குமுறைகளும்,ஆதிக்க சாதி வன்மங்களும், நீக்கமற மலிந்து அவை ஒடுக்கப்பட்ட மக்களை குறி வைத்தே வேட்டையாடி வருகின்றன. அவை அவ்வப்போது அவதாரம் தரித்து அரங்கிற்கு வருகின்றன.இதனை நாம் உணர்ந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும், எதிர் வினைத்தொடுக்கவும் அணியமாகவே இருக்க வேண்டும்.

    ஒடுக்கப்பட்டோர் தமக்குரிமையான சட்டப்படியான உரிமைகளைப் பெறுவதையும், சரி நிகர் சமானமான வாழ்வைப் பெறுவதையும் தமக்கான மான இழப்பாகக் கருதுவோர், அதனைத் தாங்கிக்கொள்ள இயலாதோர், மனம் நொந்து புண்பட்டு ஆற்றாது கண்ணீர் வடிப்போர் அதிகம் வருந்தி தீரா நோயில் விழுந்து செத்துப்போவதை விட சொந்தமாக செத்துப்போவதே அவருக்கும் இந்த நாட்டிற்கும் நல்லது.

  5. tamil September 3, 2012 at 8:15 pm Reply

    தினமணியா பெரியார் பல்கலைகழத்தை நடத்துகிறது இல்லை வைத்தியனாதானா அதன் துணைவேந்தர். சோவோ,தினமணியோ சொல்லியா அப்பல்கலைகழகம் அவ்வாறு செய்கிறது.

    • மா. தமிழ்ப்பரிதி September 3, 2012 at 10:11 pm Reply

      தினமணி பெரியார் பல்கலைக்கழத்தை நடத்தவில்லை; ஆதிக்கசாதி வன்மமும், நூலால் ஆகிய மூளைகளும், அதன் அடிப்பொடிகளும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: