காயத்ரி மரணம் – சில விளக்கங்கள்


http://www.facebook.com/namakkal4u

அன்பின் நண்பர்களுக்கு, கடந்த மூன்று தினங்களாக திருச்செங்கோடு தனியார் கல்லூரி மாணவியின் மரணம் குறித்து பல்வேறு விதமான வதந்திகள் செல்போன்கள் வாயிலாகவும், இணையம் வாயிலாகவும் பரவி வருகிறது. ஒரு பத்திரிகையாளன் என்ற முறையிலும், இந்த சம்பவத்தை நேரில் பார்த்து விசாரித்து வருபவன் என்ற முறையிலும் சில விளக்கங்களை இங்கே தர கடமைப்பட்டுள்ளேன். சில அரசியல் ஆதயம் தேடும் அமைப்புகளாலேயே இந்தபிரச்சனை தற்பொழுது பெரித

ுபடுத்தப்பட்டுள்ளது என்பது எங்களது விசாரணையில் தெரியவந்தது.ஒவ்வொரு மீடியா நிறுவனங்களுக்கும் அனாமேதய போன் கால்கள் வந்தன. பேசுபவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.இதில் எங்களுக்கு சந்தேகம் எழவே தீவிர விசாரணையில் இறங்கினோம். மாணவியின் உடல் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த பொழுது அவரது உடலை நேரில் பார்த்தேன்.இறந்த மாணவி தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தால் சில இயக்கங்கள் மாணவியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி மாணவியின் உறவினர்களையும் சேர்த்துக் கொண்டு மருத்துவமனையின் முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து மாணவி காயத்ரியின் உடல் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு டீன் வள்ளிநாயகம் தலைமையில் மூன்று மருத்துவர்கள் இறந்து போன மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். இந்த பிரேத பரிசோதனை முழுமையும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று மாலை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.இதன் நகல் மாணவியின் தாய் மாமா பழனிசாமியிடம் திருச்செங்கோடு ரூரல் போலீசார் ஒப்படைத்துள்ளனர். அந்த பிரேத பரிசோதனை அறிக்கையை நானும் வாசித்தேன். அதில் மாணவியின் மரணம் சம்பவம் நடந்த அன்று (2.9.2012) 23-36 மணி நேரத்திற்குள் நடந்திருக்கலாம் என்றும், மாணவியின் மரணம் தூக்கிட்டு கொண்டதால் கழுத்து எழும்பு முறிவு ஏற்பட்டும், மூச்சுகுழாய் உடைந்தும் மரணம் ஏற்பட்டுள்ளது என்றும், மாணவியின் உடல் தூக்கில் தொங்கியதால் இரத்த ஓட்டம் நின்று அவரது கால் பகுதியில் ரத்தம் தேங்கி பாதங்கள் நீண்டு வளைந்துள்ளன என்றும், ரத்தம் ஆங்காங்கே நின்றதால் உடல் கறுத்து,தோல்களில் நிற மாறுதல் ஏற்பட்டுள்ளதாகவும் ,மாணவியின் உடலில் காயங்களோ, பலாத்காரத்திற்கான தடையங்களோ இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இது முழுமையான தற்கொலை என முதல் கட்ட பிரேதபரிசோதனை அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

மாணவியின் சாவை வைத்து பணம் பண்ண முயற்சித்த சில விஷமிகள் கல்லூரி நிர்வாகத்திடம் பேசியதாகத் தெரிகிறது. அதற்கு கல்லூரி நிர்வாகம் இடம் கொடுக்காமல் போலீஸ் விசாரணையிலும், பிரேத பரிசோதனை அறிக்கையிலும் உண்மை நிலவரம் தெரிந்து போலீசார் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கிறோம் என கூறியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் இதுபோன்ற வதந்திகளை பரப்பி வருகின்றனர் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளது. தேவையில்லாமல் மேற்கண்ட கல்லூரி மாணவிகளிடம் வதந்தியை பரப்பி அவர்களை போராட தூண்டி தற்பொழுது கல்லூரி காலவரையின்றி மூடப்பட்டுவிட்டது. ஒரு சிலரின் அபிலாஷைகளுக்காக பெற்றோரும், மாணவியரும் தற்பொழுது மன உளைச்சளுக்கு தள்ளப்பட்டுள்ளனர். உண்மையில் மாணவி காயத்திரி சென்ற செமஸ்டர் தேர்வில் இரண்டு பேப்பர்களிலும், தற்போதைய செமஸ்டர் தேர்வில் நான்கு பேப்பர்களிலும் தோல்வியடைந்துள்ளார். இது குறித்து மாணவி தனது தந்தை வெற்றிவேலிடம் உண்மையை மறைத்து இரண்டு பேப்பர்களில் அரியர் இருப்பதாக தெரிவித்தாராம்.இதற்கே ஆத்திரமடைந்த அவர் காயத்திரியை தொலைபேசியிலேயே திட்டி தீர்த்தாராம். இதனால் மணம் உடைந்த மாணவி ஆறு பேப்பர்களில் அரியர் இருப்பது தெரிந்தால் பெற்றோர் என்ன செய்வார்களோ என்ற அச்சத்தில் கல்லூரி மூன்று நாட்கள் விடுமுறை விட்ட போதும் வீட்டிற்குச் செல்லாமல் விடுதியிலேயே தங்கியுள்ளார்.மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். இது இரண்டாவது கட்ட பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபின் தெரியவரும். அதற்கும் முன் இது போன்ற தேவையில்லாத வதந்திகள் பரப்புவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவும். மாணவி காயத்திரியையும், அவரது மரணத்தையும் கொச்சைபடுத்த வேண்டாம். மாணவியின் மரணம் குறித்த செய்திகளை இந்த இணைப்புகளில் http://namakkal4u.com/?p=20950 ,http://namakkal4u.com/?p=20964 வாசிக்கலாம். தோழர்களே வீண் வதந்திகளால் வட மாநிலங்களில் ஏற்பட்ட கலவரங்களை மனதில் கொள்ளவும். எந்த தகவலையும் உண்மை நிலை தெரியாமல் பகிர வேண்டாம். பின்னால் விபரீதத்திற்கு வித்திடலாம்.

மேற்சொன்ன கருத்து முகப்புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான எனது பதில்:

எனக்கு இந்த சம்பவம் பற்றிய தகவல் குருஞ்செய்தியாக ஒரு சமூக ஆர்வலரிடமிருந்து நேற்று மாலை வந்தது. அதில் சில மாணவிகளின் தொடர்பு எண்களூம், காய்த்ரியின் தந்தையின் எண்ணும் குறிப்பிடப்பட்டிருந்தது..

பெண்கள் விசயம் என்பதால் கண்மூடித்தனமாக இறங்கி விடக்கூடாது என்பதில் நானும் எச்சரிக்கையாக இருப்பதால் இன்று காலை வரை மௌனம் காத்தேன். பின்னர், இன்று காலை அந்த ஆர்வலரை தொடர்பு கொண்டு கேட்டேன், அவர் தனக்கு தெரிந்தவர்கள் மூலமாக இந்த செய்தி வந்ததாகவும், கல்லூரியில் மாணவர் அமைப்பு பலமாக இல்லாததாலும், பெற்றோர்கள் அச்சம் கொள்வதால் சில சிக்கல்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

குருச்செய்தியில் வந்திருந்த மாணவியின் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது, ஒரு அச்சத்துடன் இரகசியமாக பேசும் தொணியிலேயே பேசினார். காயத்ரி வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. எங்களால் போராட்டம் நடத்த முடியவில்லை, யாரும் பேச அச்சம் கொள்கிறாரக்ள். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் போராட்டம் நடத்த மாணவர்கள் திட்டமிடுகிறார்கள். ஆனால் காயத்ரியின் தந்தை கல்லூரி வாசலில் நடத்த முனைகிறார். என்று சொன்னார். அவர் தந்தை அழைப்பு விடுப்பதாக ஒரு குருஞ்செய்தியும் எனக்கு வந்தது.

பின்னர்தான் இப்படி ஒரு செய்தி வருகிறது…கவனிக்கவும்…இப்படி ஒரு செய்தி வருகிறது என்று குறிப்பிட்டு…ஊடகங்கள் இதை கவனிக்க வேண்டும் என்று ஒரு சுற்றரிக்கை விடுத்தேன். பல வேளைகளில் மக்கள் தங்கள் பிரச்சனைகளை வெளியில் பேச தயங்குவதாலும், பல மட்டங்களிலிருந்து அழுத்தங்கள் வருவதால் விசயங்கள் புதைக்கப்படுவதுமாக இருக்கும் சூழலில் மாணவர்களுக்கு உதவ தயாராக இருக்கிறோம் எனும் ஒரு அறிவிப்பை வெளியிட்டேன்.

தூத்துக்குடியில் ஒரு பாலியல் வண்புணர்வு நிகழ்வு குறித்து செய்தி பகிர்ந்து பாதிக்கப்பட்ட தரப்பிடம் உறுதி செய்து கொண்ட பின்னர் கூட, அப்பெண் ஊடகத்திடம் பேச தயங்கினார். ஒத்துழைக்கவில்லை. இதை எப்படி புரிந்து கொள்வது

ஓரளவுக்கு தொடர்பு உள்ள நபர்களே கூட்டம் நடத்த முடியாமல் திணரும் போது….இதுபோன்ற சூழல்களை சந்தேகிக்காமல் இருக்க முடியாது. ஊடகமோ, மாணவர் அமைப்போ, மனித உரிமை அமைப்புகளோ விசாரித்து சொன்னால் ஏதாவது விளங்கும்.

சமூக வலை தளங்களின் செயல்பாடுகளால் நிறைய வதந்திகள் பரவுகிறது எனும் ஒரு கருத்துருவாக்குவதற்காக இப்படி நடக்கிறதா என்றும் புரியவில்லை…ஆனால் பெண்கள் விசயத்தை பரப்பி விளையாடுகிறார்கள் என்பது உண்மையாயிருந்தால் இதை விடக் கேவலம் வேறெதுவும் இருக்க முடியாது

அதிகாரம் படைத்தவர்களின் பலம் குறித்தும் சந்தேகிக்காமல் இருக்கவியலாது….ஏதாவது அமைப்புகள் இதை விசாரிக்க முயல்கிறதா என்று பார்ப்போம்.

மாணவிகள் எனக்கு அனுப்பிய குருஞ்செய்தி என் கைபேசியில் இன்னும் உள்ளது.

Tagged: , ,

One thought on “காயத்ரி மரணம் – சில விளக்கங்கள்

  1. vijy September 11, 2012 at 9:08 am Reply

    பத்திரிக்கையாளன் என்ற முறையில் இந்த சம்பவம் குறித்து மாணவிகள் கல்லூரியினுள் போராட்டம் நடத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் அந்த கல்லூரிக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் பேசினேன்.எந்த மாணவியும் பேச முன் வரவில்லை. எனது அடையாள அட்டையை கேட்டனர். கொடுத்த பின்னர். சில மாணவிகள் பேசினர்.கல்லூரியினுள் அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை முன்னிறுத்தியே பேசினர் ( செல்போன் அனுமதிப்பதில்லை, சுதந்திரமாக போன் பேச முடிவதில்லை இப்படி…) மாணவியின் சாவு குறித்து வாய்வழியாக கேட்ட வதந்திகளையே நம்மிடம் தகவலாக தெரிவித்தனர். மாணவிகளை பொருத்தவரை கல்லூரியில் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்காக கல்லூரி நிர்வாகத்தை பழிவாங்க தங்களுக்கு கிடைத்த வதந்திதகவலை பயன்படுத்திக் கொண்டதாகவே கருதத் தோன்றுகிறது. இறந்த மாணவி தலித் என்பதால் சில தலித் அமைப்புகள் இந்த விவகாரத்தில் தலையிட்டு தங்களது சுய லாபத்திற்காக வீண் வதந்திகளை பரப்பி மாணவி காயத்திரியின் மரணத்தை கொச்சைபடுத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கூடுதல் தகவல் பெற விரும்பும் தோழர்கள் எனது செல் எண் 9894623383 தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: