One cannot be sorry about obscenity


Recently a vulgar film poster titled ‘Sorry Teacher’ is occupying the walls of Chennai. The picture portrays a young woman in an obscene manner and going by the title it depicts a teacher. The story of the film is not hard to guess, it should be about a student falling in love with a teacher. Though the morality of falling in love with teacher is not the point to debate, but it is about the depiction of the teacher character.

While I noticed the promos and posters of the film I have been wanting to write about it. After returning home from work I started drafting this piece, I wanted to appeal to the Teacher’s community to protest against this film and also share that MASES is ready to hold a protest if there are teachers willing to rise against film which demeans women under the teacher’s identity. Film makers who want to market ‘sexual attraction towards an elderly woman’ have always framed it around teacher student relationship. They have continuously characterized those teachers to be ‘sexy’ and ‘exposing ones’.  It is also important to protest against such stereotyped representation of ‘woman – teachers’ in films.

I also browsed for further information on the film. The online medium is flooded with obscene pictures and trailers from the film. Amidst this promo I noticed a much needed protests that were held against the telugu version of the film. (originally seem to have made in telugu). Teachers Union in Hyderabad has already protested against the film. Another news says that Human Rights Commission had banned the film in Telugu.

May I expect the ‘Tamil’ Teachers also to rise up against such exploitative representation of Women that also demeans a professional sect. MASES is ready to join hands with them.

Related Links:

http://www.youtube.com/watch?v=LIFkw0vjAdM

http://www.youtube.com/watch?v=bD44V1ycePY

http://entertainment.oneindia.in/telugu/news/2012/sorry-teacher-facing-wrath-teachers-complaint-098645.html

http://newindianexpress.com/entertainment/telugu/article594965.ece

 

தமிழில்:

சமீப நாட்களில் ’சாரி டீச்சர்’ என்ற திரைப்படத்தின் ஆபாசமான சுவொரொட்டி ஒன்று சென்னை நகர சுவர்களை ஆக்கிரமித்து வருகிறது. அந்த சுவரொட்டியில் ஒரு இளம் பெண் மிகவும் பாலியல் கிளர்ச்சியைத் தூண்டும் விதமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார். தலைப்பை வைத்துப் பார்க்கும் போது அந்தப் பெண் ஒரு ஆசிரியை கதாப்பாத்திர சித்தரிப்பு என்பதிலும், மாணவன் ஒருவன் அவள் மீது காதல்வயப்படும் திரைப்படம் என்பதிலும் நமக்கு ஐயமேதுமில்லை. ஒரு மாணவன் ஆசிரியையைக் காதலிக்கலாமா என்பதல்ல இங்கு விவாதம், மாறாக அந்தப் பெண்ணை ஒரு ஆசிரியையின் அடையாளத்தின் கீழ்ஆபாசமாக சித்தரித்திருப்பதுவே இங்கு கண்டனத்துக்குறியது.

 

அந்த விளம்பரச் சுவரொட்டிகளை கண்டபோது, அதன் ஆபாச சித்தரிப்பு குறித்து எழுத நினைத்திருந்தேன்.  அலுவலகப் பணி முடிந்து வீடு திரும்பிய பின்னர் எழுதத் தொடங்கினேன். ஆசிரியச் சமூகம் இத்திரைப்படத்தை எதிர்த்து தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பதே அப்பதிவின் நோக்கம். அத்தோடு பெண்ணை, ஆசிரியையை இவ்வளவு கீழ்த்தரமாக சித்தரிக்கும் ஒரு திரைப்படத்திற்கெதிராக கண்டனப் போராட்டத்தை முன்னெடுக்க மாசெஸ் தயாராக உள்ளது என்பதையும் தெரிவிக்க விரும்பினேன்.

 

ஆண் மகனை விட வயது முதிர்ந்த ஒரு பெண் மீதான பாலியல் ஈர்ப்பு, காதல் போன்ற கதையமைப்பு கொண்ட படமாக இருந்தால், பெரும்பாலும் ஆசிரியை எனும் கதாப்பாத்திரத்தையே இயக்குனர்கள் கையில் எடுக்கின்றனர். அத்தகைய ஆசிரியைகளை தொடர்ந்து ஆபாசமாகவே சித்தரித்து வந்திருக்கின்றனர்.  இத்தகைய ஆணாதிக்க பாலியல் அடையாள படிமவார்ப்புகளுக்கு கண்டனம் தெரிவிப்பது அவசியமானது.

 

இந்தப் படம் தொடர்பாக மேலும் சில தகவல்களுக்காக இணையத்தை துலாவியபோது, இணையத்தில் அந்த திரைப்படத்தின் ஆபாச புகைப்படங்களை, காணொளிகளைக் காண நேர்ந்தது.  அதற்கு நடுவே இந்தப் படத்தை முதலில் தெலுங்கில் எடுத்திருப்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது.  ஹைதராபாத்தில் உள்ள  ஆசிரியர் சங்கம் அங்கு இந்த திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. மற்றொரு செய்தியில் மனித உரிமை ஆணையம் இந்தத் திரைப்படத்திற்கு தடை விதித்திருப்பதாகத் தெரிவிக்கிறது.

 

இப்போது சாரி டீச்சர் தமிழில் வெளிவருகிறது. பெண்ணை, ஒரு குறிப்பிட்ட சேவைத் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களை அவமதிக்கும் விதமாக அமைந்திருக்கும் இந்த திரைபப்டத்திற்கு தமிழ் ஆசிரியர்களும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். மாசெஸ் அவர்களோடு இணைந்து போராட தயாராய் உள்ளது.

 

Tagged: , , , , , , , , ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: