வெ. காயத்திரி படுகொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி – க்கு மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்.


நாமக்கல் விவேகானந்தா கல்லூரி மாணவி வெ. காயத்திரி படுகொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி – க்கு மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்.

காலங்காலமாக ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களான தலித் மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு வருகின்றது. இந்த கல்வி தீண்டாமையை எதிர்த்து போராடி, விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில மாணவ மாணவிகள் மட்டுமே உயர்கல்வி பயில கல்விக்கூடங்களுக்கு வருகின்றனர். அப்படி வருகின்ற மாணவ மாணவிகளும் மர்மமான

முறையில் படுகொலை செய்யப்படுவதும் உயிரை மாய்த்துக்கொள்வதுமான கொடூரங்கள் அரரங்கேறி வருகின்றன.அந்த வரிசையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் பி.டெக் இரண்டாமாண்டு படித்துவந்த அருந்ததியர் சமூக மாணவி வெ. காயத்திரி அந்தக் கல்லூரியின் சேர்மன் கருணாநிதியின் மகன் ஸ்ரீநிதி அவனது 7 நண்பர்களாலும் பாலியல் வன்முறை செய்யப்பட்டு, படுகொலைச் செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் படுகொலையைத் தற்கொலை என்று கல்லூரி நிர்வாகமும், அதற்கேற்றபடி காவல்துறை விசாரணையும் நடைபெற்று வருகிறது.
எனவே இக்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி- க்கு மாற்ற வேண்டும்.

கல்லூரி நிர்வாகத்தின் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அந்தக் கல்லூரி விடுதியில் இதற்கு முன் நடந்த மாணவிகளின் மரணம் குறித்து விரிவான விசாரனை நடத்தப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்
தமிழகத்தில் உள்ள தலித் மாணவ- மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற உள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் சாதி ஒழிப்பிலும், சமூக விடுதலையிலும் அக்கறை கொண்ட அனைத்து தோழமைகளையும் பங்கேற்க அழைக்கிறோம்.

இடம்: மெமோரியல் ஹால் எதிரில்.
தேதி: 18.10.2012 மாலை 3.00 மணி

கண்டன உரை.
திரு. தொல்.திருமாவளவன், தலைவர். வி.சி.க
திரு. இரா. அதியமான், நிறுவனர். ஆதித்தமிழர் பேரவை
மற்றும் மாணவ – மாணவியர், கல்வியாளர்கள், படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள்.

ஒருங்கிணைப்பு
தலித் மாணவ – மாணவியர் கூட்டமைப்பு.
தொடர்புக்கு. gundalakesi@gmail.com.

Related Post:

Tagged: , , , , , , , , , ,

One thought on “வெ. காயத்திரி படுகொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி – க்கு மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்.

  1. jaya rajarethinam October 15, 2012 at 8:46 pm Reply

    Barathiyaar ethaip paarthaal raththak kanneer vadippaar…..

    2012/10/15 M.A.S.E.S — Movement Against Sexual Exploitation and Sexism

    > ** > Movement Against Sexual Exploitation and Sexism posted: “நாமக்கல் > விவேகானந்தா கல்லூரி மாணவி வெ. காயத்திரி படுகொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி – க்கு > மாற்றக்கோரி “

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: