மாசெஸ் – ஒரு வருடம் நிறைவு செய்கிறது


306021_331139980272466_256915767_n

10.3.2013

– மாசெஸ் தொடங்கி ஒரு வருடம் முடிவடைகிறது. சிறப்பு நிகழ்ச்சிகள் ஏதும் நடக்கும் எண்ணமும், சாத்தியமும் இல்லாமல் போனதால் ஒரு வருட செயல்பாடுகளை தொகுத்து ஒரு பதிவை இடுகிறேன்.

மாசெஸ் தொடங்கப்பட்ட கதையை இந்த சுட்டியில் காணலாம். https://masessaynotosexism.wordpress.com/about/the-origin/

முகப்புத்தகம் மற்றும் சமூக வலைதளங்களைக் கொண்டு வளர்ந்த ஒரு அமைப்பு மாசெஸ். ஒத்த கருத்துடைய சிலரின் தொடர் உரையாடல் மற்றும் ஊக்கத்தின் விளைவால் 10.3.2012 அன்று மாசெஸ் ஒரு முறைபடுத்தப்பட்ட அமைப்பானது. நிச்சயம் விருதுகள், நாற்காலிகள், பதவிகளை குறிவைத்து இது தொடங்கப்படவில்லை என்பதை சில காரணங்களுக்காக கவனப்படுத்த வேண்டியுள்ளது.

வெகுஜன ஊடகங்கள் – குறிப்பாக திரைப்படம் மற்றும் விளம்பரங்களில் பெண்கள் சித்தரிப்பு குறித்த விழுப்புணர்வை ஏற்படுத்தவும், முடிந்தவரையில் அதற்கெதிரான பிரச்சாரங்கள், போராட்டங்கள் தொடரவும் வேண்டும் என்ற உந்துதலின் பேரில் முகப்புத்தகத்தில், என்னுடைய வலைதளத்தில் எழுதிக் கொண்டிருந்தபோது அமைப்பாக்கும் எண்ணம் உருவானது. குறிப்பாக ஒரு சித்தரிப்பு குறித்து நிறுவனங்களுக்கு புகார் அளிக்கையில் அது ஒரு அமைப்பின் பெயரால் இருந்தால் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எண்ணமே அதன் பின்னணி. அதேபோல் இதே விசயத்தில் ஆர்வமுள்ளவர்களை திரட்ட, ஒருங்கிணைக்க தனிநபராக இயங்குவதைவிட அமைப்பாக இயங்குவது முறையானது என்றும் தோன்றியது.

அமைப்புருவாக்கத்திற்கு வித்திட்ட ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

விளம்பரம் குறித்த பிரச்சாரங்கள்:

நடிகர் சூரியா நடித்து வெளியான ஹிமாமி ஃபேர் அண்ட் ஹாண்ட்சம் முகப்பூச்சு விளம்பரம் குறித்த பிரச்சாரத்தின் பின்னணியில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டிருந்தாலும், மாசெஸின் முதல் பிரச்சாரம் ‘இ-பே’ இணையதளத்தின் ஆணாதிக்க விளம்பரத்திற்கு எதிரானது.  ‘அவனுக்காக’ (for him), ’அவளுக்காக’ (for her)  என்று பகுக்கப்பட்ட  ஒரு விளம்பரம். ஆண்களுக்கு மின்னணுசார் கருவிகளும், பெண்களுக்கு அழகுச் சாதனங்களையும் பட்டியலிட்டிருந்தது அந்த விளம்பரம். இதை என் கவனத்திற்கு ஒரு தோழர் கொண்டுவர, இரவோடு இரவாக மாசெஸ் தளத்தை உருவாக்கினேன்.  இந்த விளம்பரத்தின் ஆணாதிக்கக் கருத்தியலை விளக்கி, ஒரு மின் மனுவை தயார் செய்து எல்லோரின் கவனத்திற்கும் கொண்டு சென்றேன். சிறப்பான ஆதரவு கிட்டியது.

அதேவேளை இ- நிறுவனத்திற்கும் தொடர்புகொண்டு அந்த விளம்பரத்தின் பாலியல் அடையாளவாதக் கருத்தை நீக்குமாறு கோரிக்கை வைத்தேன் வழக்கமான விளக்கங்கள், உதாசீனங்கள்… பின்னர், பிரச்சாரம் தீவிரமாவதையும், விளம்பரத்தை நீக்காவிட்டால், அடுத்த கட்டப் போராட்டம் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தேன். இந்த விளம்பரத்தின் பாலியல்வாதக் கருத்து குறித்து பத்திரிகைகளுக்கும் செய்தி அனுப்பினேன். 13 நாள் போராட்டத்திற்கு பின் அவ்விளம்பரம் நீக்கப்பட்டது. அச்செய்தி பத்திரிகைகளுக்கும் அனுப்பப்பட்டது. D.C, COL, அது குறித்து செய்திகள் வெளியிட்டது. எதிர்ப்பு மனுவுக்கு கிடைத்த கையெழுத்துக்களே எனக்கும் ஊக்கமளித்தது,அத்தோடு முகப்புத்தக தோழர்களின் ஆதரவும்.

மாசெஸ் என்பதை ஒரு பிரச்சார மேடையாக, கருத்தியல் கட்டுடைப்பு தளமாக ஒரு அறிவார்ந்த விவாதங்களை மேற்கொள்ளும் கூட்டமாகவே நான் திட்டமிட்டிருந்தேன். மேற்சொன்ன பிரச்சாரம் வெற்றி பெறவும், பெண்கள் தினம் நெருங்கிவரவும், அடுத்த கட்டமாக மாசெஸ் அமைப்பை முறையாக அறிவிப்பது, அதன் இரண்டாம் பிரச்சாரமான ஃபேர் & ஹாண்ட்சம் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு ஆதரவு கோருவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்று திட்டமிட்டு அதற்கான வேலைகள் தொடங்கியது.

மார்ச் 10,2013 அன்று அந்த நிகழ்வு நடந்தது. அமைப்பை தோழர் சிவகாமி தொடங்கி வைக்க, அமைப்பி செயல்திட்ட நகலை அ. மார்க்ஸ் பெற்று கொண்டார். முனைவர் பத்மினி, கோ. சுகுமாரன், மோனிகா ஆகியோர் உரையாற்றினர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஓவியப் பட்டறை ஒன்றும் ஏற்பாடு செய்யப்ப்ட்டிருந்தது. ஓவியர்கள் விஸ்வம், ராஜன், கிறிஸ்டி, திலிப், ரோகினி மணி, மோனிகா, யுகன், சூரஜ், ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் ஓவியம் வரைந்து சிறப்பித்தனர். இந்த வேளையில் அவர்களுக்கு நன்றி சொல்வது அவசியம். கிரன் துளசி ஒரு புகைப்படத்தைக் கொடுத்து உதவினார்.

https://masessaynotosexism.wordpress.com/events/

பெண் விடுதலை எவர் பொறுப்பு என்ற தலைப்பில் நான் தொகுத்த 20 நிமிட காட்சிப் படம் ஒன்று அன்று ஒளிபரப்பப்பட்டது. அதற்கு உறுதுணையாக இருந்த தோழர் ஒருவரை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அவர் இல்லையெனில் அந்தப் படம் சாத்தியமாகி இருக்காது.  http://www.youtube.com/thekotravai

இமாமி விளம்பரத்தின் ஒவ்வொரு ஃப்ரேமையும் புகைப்படமாக மாற்றி ஒரு மாபெரும் பேனர் ஒன்றை தயார் செய்து, அன்று நிகழ்ச்சிக்கு வந்தவர்களிடம் கையெழுத்து வாங்கினோம். இவ்வாறாக மாசெஸ் தொடங்கியது.

இமாமி விளம்பரம் உள்ளிட்ட கருத்தியல் பிரச்சனை உள்ள மற்ற சில விளம்பரங்கள் குறித்தும் அவ்வப்போது advertising council of India, press council, போன்ற அமைப்புகளுக்கு புகார் அனுப்புவேன்…ஆனால் ஒரு பயனும் இருப்பதில்லை. ஆனாலும் அது போன்ற விளம்பரங்களின் ஆபத்தான கருத்தியல் குறித்து மக்களிடையே பகிர்வதை அதைவிட ஒரு முக்கிய செயல்பாடாக கருதுவதால் அவ்வப்போது அதை செய்து வருகிறேன்.

அதன் பிறகு வோடஃபோன் விளம்பரம், ஈமு அழகுச் சாதனங்கள், அம்ருதாஞ்சன் ரோல் ஆன் (ட்ரெயின் விளமப்ரம்) என்று நான் தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தில் என் கண்ணில் படும் விளம்பரங்கள் குறித்து பதிவிட்டு வந்தேன். சில நேரங்கள் புகாரும் அனுப்புவதுண்டு.

இதற்கிடையில் களச் செயல்பாட்டிற்கு அழைப்பு வந்தால் செல்வதுமுண்டு.

பொதுதளம்:

விளம்பரங்கள் குறித்த உரையாடல்கள் மட்டுமன்றி, பெண்கள் உரிமை, பெண்கள் நிலை தொடர்பான சில செய்திகள், அறிவிப்புகள் மீதான கருத்துக்களையும் மாசெஸ் தளத்தில் பகிர்ந்து வந்தேன். இச்சூழலில் இந்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகம் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு சம்பளம் என்றொரு வேடிக்கையான பரிந்துரையை வைத்தது. அது தொடர்பாக கருத்துக்கள் எழுதி ஊடகங்களுக்கு அனுப்பி வைத்தேன். அதனையொட்டி ஊடகங்களில் விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டது.

https://masessaynotosexism.wordpress.com/2012/09/08/salary-for-house-wives-a-reactionary-proposal/

http://tinyurl.com/ajw6k2e

http://saavinudhadugal.blogspot.in/2012/11/blog-post_9159.html

இந்த திட்டம் தொடர்பான மேலும் சில பதிவுகள் மாசெஸ் தளத்தில் உள்ளது.

A letter to condemn Humiliating Statements of Mr. Tha. Pandian.

https://masessaynotosexism.wordpress.com/2012/10/13/a-letter-to-condemn-humiliating-statements-of-mr-tha-pandian/

சில குறிப்பிடத்தக்க வழக்குகள்:

மதுரை உஷா ராணி வழக்கு

https://masessaynotosexism.wordpress.com/2012/09/05/update-on-usha-ranis-case/

விவேகானந்தா கல்லூரி மாணவி காயத்ரி பாலியல் சித்திரவதை செய்து படுகொலை

http://tinyurl.com/az4vrtg

 காளியம்மாள் வழக்கு

 https://masessaynotosexism.wordpress.com/2012/08/27/mother-and-daughter-tortured-in-a-naked-manner-by-own-brothers/

https://masessaynotosexism.wordpress.com/2012/09/04/update-on-kaliammaals-case/

வெகுஜன வார இதழ்களுக்கு வேண்டுகோள்:

http://tinyurl.com/bywybnoமதிப்பிற்குறிய அரசியல் வார இதழ் ஆசிரியர்களே,

உண்மை அறியும் குழு செயல்பாடு:

http://saavinudhadugal.blogspot.in/2012/03/blog-post_13.html – வேளச்சேரி என்கவுண்டர்

மாசெஸ் முன்னெடுத்தது:

சாதியம் – மற்றுமொரு கொலை – http://tinyurl.com/bh58o5y

 உண்மை அறியும் குழு அறிக்கை – http://tinyurl.com/bavzwghகோகிலா என்பவரின் சந்தேகத்திற்குரிய மரணம்

 

மேற்சொன்ன பட்டியல் விளம்பரத்திற்காக இல்லை, ஒரு தனி நபர் தன்னுடைய எல்லைகளுக்குட்பட்டு எவ்வாறு சமூக பங்களிப்பு செய்ய முடியும், குறிப்பாக ஒரு பெண் குறைந்த அளவு சமூக-அரசியல் அறிவைப் பெற்றுவிட்டால் அவளுடைய பார்வைகள் எப்படி மாறுகிறது என்பதனை உணர்த்துவதற்கான பதிவு இது.

இந்த தருணத்தில் சில கசப்பான அனுபங்களையும் குறிப்பிட வேண்டும், ஆனால் அது நேர விரையம் என்பதால். கசப்பான அனுபவங்கள் என்று குறிப்பிடுவதோடு நிறுத்திக் கொள்கிறேன். ஆனால் அவ்வனுபவங்கள் எனக்கொன்றை உணர்த்தியிருக்கிறது.

பெண்களுக்கான பிரச்சனைகளைப் பேசவும், போராடவும், உரிமைக் குரல் எழுப்பவும் பல்வேறு அமைப்புகள், தனி நபர்கள் உள்ளனர், புரட்சிகர கட்சிகள் உள்ளது. அவர்கள் வெகு சிறப்பாக பணிகள் செய்து வருகின்றனர். ஆகவே ஏற்கணவே மாசெஸ் செயல் திட்டத்தில் குறிப்பிட்டிருப்பது போல் ஊடக சித்தரிப்பு, பெண்மை சித்தரிப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்வது, விவாதங்கள் எழுப்புவது என்பதோடு எனது செயல்பாடுகளை ஒழுங்குபடுத்திக் கொள்வது சிறப்பானது என்று முடிவு செய்துள்ளேன்.

தற்போது முக்கியமான இரண்டு புத்தகங்கள் மொழி பெயர்ப்பு நடந்து வருவதால் பதிவுகள் சற்று குறைந்துள்ளது. ஒரு இடைவெளிக்குப் பின் மாசெஸ் தளத்தில் அல்லது மற்ற மாற்று இதழ்களில் முழு வீச்சுடன் கட்டுடைப்பு பதிவுகள் இடம்பெறும்.

ஊக்கமளித்த, தொடர்ந்து ஊக்கமளித்து வரும் அத்தனை தோழர்களுக்கும் நன்றி.

Tagged: ,

2 thoughts on “மாசெஸ் – ஒரு வருடம் நிறைவு செய்கிறது

  1. spartagus March 16, 2013 at 12:02 pm Reply

    // மாசெஸ் தொடங்கி ஒரு வருடம் முடிவடைகிறது. சிறப்பு நிகழ்ச்சிகள் ஏதும் நடக்கும் எண்ணமும், சாத்தியமும் இல்லாமல் போனதால் ஒரு வருட செயல்பாடுகளை தொகுத்து ஒரு பதிவை இடுகிறேன்.//
    ஏன் தோழர் இத்தனை சலிப்பு??? நீங்கள் இந்த அமைப்பை இன்னும் முன்னெடுத்து செல்ல வேண்டாமா???
    // இந்த தருணத்தில் சில கசப்பான அனுபவங்களையும் குறிப்பிட வேண்டும், ஆனால் அது நேர விரையம் என்பதால். கசப்பான அனுபவங்கள் என்று குறிப்பிடுவதோடு நிறுத்திக் கொள்கிறேன்//
    நீங்களா சோர்ந்து போகின்றீர்கள்? நம்ப முடியவில்லை…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: