மைனர் பெண்ணை இரண்டாம் திருமணம் செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


கீழ்கண்ட கடிதத்தை எஸ்.பி க்கும், மாவட்ட ஆட்சியாளருக்கும் அனுப்பிவைத்தோம். அடுத்த நாள் எஸ்.பியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வழக்கு நிலவரம் குறித்து கேட்டறியப்பட்டது. தான் எப்போதோ நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுவிட்டதாக அப்போது அவர் தெரிவித்தார்.

 

பாலாஜி மீது எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுவிட்டதாக சம்பந்தபட்ட குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

 

அனுப்புனர்,

நிர்மலா (கொற்றவை)

நிறுவனர்

மாசெஸ்,

சென்னை.

பெறுநர்,

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்,

தேனி மாவட்டம்.

7.03.2013 – வியாழன், அல்லி நகரத்தைச் சேர்ந்த பாலாஜி திருமணமானவர். 9 மாத பெண் குழந்தைக்கு தந்தை. மனக் கசப்பு காரணமாக பிரிந்து சென்ற மனைவி கடந்த நான்கு மாதங்களாக அவரது தந்தை வீட்டில் இருக்கிறார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட பாலாஜியும் அவரது பெற்றோரும், பதினொன்றாவது படிக்கும் 16 வயது சிறுமி நந்தினியை அவரது விருப்பத்திற்கு மாறாக பாலாஜிக்கு திருமணம் செய்துவைத்துள்ளனர். வீரபாண்டிக் கோயிலில் வைத்துக் கட்டாயத் தாலி கட்டியுள்ளார் பாலாஜி.

இதனையடுத்து சிறுமி நந்தினி வீரபாண்டி காவல்துறையிடம் புகார் செய்ய, அவர்கள் நந்தினியை சமூக நலத்துறைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சமூக நலத்துறையோ நந்தினியை மெர்ஸி இல்லத்தில் ஒப்படைத்துவிடுகிறார்கள்.

கட்டாயத் திருமணத்திற்குள்ளாகி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்காமல் அவரை ஒரு ’ஹோமில்’ ஒப்படைத்ததோடல்லாமல், இதுவரை சம்பந்தபட்ட பாலாஜி மீதும், அதற்கு உடந்தையாக இருந்த பாலாஜியின் பெற்றோர் மீதும் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை தேனி மாவட்ட காவல்துறை. நடவடிக்கை எடுக்கத் தேவையான அறிக்கையை இதுவரை சமூகநலத்துறையும் தரவில்லை அதை தேனி மாவட்ட காவல்துறையும் அழுத்தம் கொடுத்துக் கேட்டுப் பெறாமல் மெத்தனமாக இருந்துவருகிறது.

இரண்டு பெண்களின் வாழ்க்கையைக் கேள்விக் குறியாக்கி இருக்கும் நபரை தேனி மாவட்ட காவல்துறை இத்தனை மெத்தனமாகக் கையாள்வது மிகவும் வருத்தத்துக்குரியது. ஒரு ஆண் செய்த தவறால் இன்று அந்தச் சிறுமி நந்தினி தன் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு சமூக நலத்துறையின் நடவடிக்கையின் பேரில் ஒரு ‘ஹோமில்’ வசிக்கிறார். இது எந்த வகையிலும் நியாமாகாது.

இந்த சம்பவம் தொடர்பாக சமூக நலத்துறை உடனடியாக தேவைப்படும் அறிக்கையை தேனி மாவட்ட காவல்துறைக்கு அனுப்ப வேண்டும்.  சிறுமியை கட்டாயத் திருமணம் செய்த பாலாஜி மீது உடனடியாக ‘எஃப்.ஐ.ஆர்’ பதிவு செய்யப்பட வேண்டும். உடனடியாக நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.  கட்டாயத் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த அனைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த முறைகேடு தொடர்பாக புகார் மனு அளித்து, சரியான பதில் கிடைக்காமல் அவதிப்படும் குடும்பத்தாருக்கு முறைப்படியான பதிலை தேனி மாவட்ட காவல்துறை அளிக்க வேண்டும்.

இப்படிக்கு

நிர்மலா (கொற்றவை)

மாசெஸ் அமைப்பு,

சென்னை.

மேற்சொன்ன கடிதம் தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் மின் முகவரிக்கும், மாவட்ட ஆட்சியரின் மின் முகவரிக்கும் அனுப்பப்பட்டுள்ளது. சம்பந்தபட்ட சமூக நலத்துறை அதிகாரியிடம் இன்று மதியம் பேசியபோது, நந்தினி மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர், திருமணம் நடந்தது தேனி என்பதால் வட்டாரக் குழப்பம் இருந்தது என்றும், பின்னர் அந்தப் பெண் புகார் கொடுத்தது தேனி மாவட்ட எல்லை என்பதால் தேனி காவல்நிலையத்திற்கு தங்களது அறிக்கையை அனுப்பிவைத்துவிட்டதாகவும் சொன்னார்.

இனி நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல்துறையிடம் உள்ளது.

Tagged: , , , ,

3 thoughts on “மைனர் பெண்ணை இரண்டாம் திருமணம் செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  1. பூ.ஆ.இளையரசன்- புதுச்சேரி March 25, 2013 at 10:25 am Reply

    ஆணாதிக்க மனநிலையை உடைய காவல்துறை அதிகாரிகள் செயல் கண்டிக்கத்தக்கது பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிக்கு துனையாக குரல் கொடுத்தது வரும் உங்கள பணி பாராட்டுக்குரியது நன்றி..!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: