பாலியல் போதை எனும் மனநோய்


gg

 

ஓவ்வொரு முறை வன்புணர்வு கொடுமைகள் நடக்கும்போதும் போராட்டங்கள் தொடுக்கப்படுகிறது. இந்த விழிப்புணர்வும், ஒருங்கிணைப்பும் ஆதரவளித்தாலும், தாங்கள் வன்புணர்வு செய்வது ஒரு குழந்தை என்று கூட கவனத்தில் கொள்ளாத அளவுக்கு செல்லும் அந்நபர்களின் மனநிலை குறித்தே எனது எண்ணம் சுழல்கிறது.

அத்தகைய குற்றவாளிகளின் மனநிலையை ஆய்வு செய்ய இந்த அரசு என்ன செய்கிறது என்பதே மீண்டும் மீண்டும் எனது கேள்வியாக இருக்கிறது. ஏன் ஒருவர் இத்தகைய மனநிலைக்கு தள்ளப்படுகிறார்  “பாலியல் போதையூட்டும்” (sex drugging) கருவிகள் யாவை,  அவைகளின் பங்கு யாது, அதன் தாக்கம் எத்தகையது என்பன போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டாமா?

உளவியல் நிபுனர், பாலியல் மருத்துவர் (ஃப்ராய்டியர்கள் அல்ல), பெண்ணியலாளர்கள், பொதுவுடைமை ஜனநாயகவாதிகள், பொதுமக்கள், மாணவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய குழுக்களை அமைத்து பாலியல் குற்றவாளிகளிடம் உரையாடலை, ஆய்வுகளை நிகழ்த்த அரசு முனைய வேண்டும்.

குற்றத்திற்கான வேர்களை கண்டடையாமல், தூக்கில் போடு, கல்லால் அடி, ஆண்மை நீக்கம் செய் என்பதெல்லாம் வெறும் உணர்ச்சிவயபட்ட ஆணாதிக்க வாதமே. தற்காலிக மன அமைதிக்கு மட்டுமே அது உதவும்.

பாலியல் போதையூட்டத்தால் தூண்டப் பெருபவர்களுக்கு, பாலியல் மனநோயாளிகளுக்கு மறுவாழ்வு மையங்கள், ஆலோசனை மையங்கள் அமைக்கப்பட வேண்டும். அங்கு வருபவர்களின் தனியுரிமை மதிக்கப்பட வேண்டும், இரகசியங்கள் காக்கப்பட வேண்டும்.

மீண்டும் சொல்கிறேன் அந்த மனநிலை குறித்தே நான் அதிகம் கவலை கொள்கிறேன்.. இந்த சமூகம் ஒட்டுமொத்தமாக மனநோயாளிகளையே உற்பத்தி செய்கிற்து… அதில் ஒரு வகையான மனநோயாளிகள் இந்த பாலியல் குற்றவாளிகள்… கெட்டவர்களை நோக்கி பாய்வதும், தண்டனை கோருவதும் மட்டுமே நம்முடைய கடமையாகிவிட முடியாது, ஒருவரை நல்லவராக்குவதும் நம் கடமையே. அத்தகைய முயற்சிகளுக்கு அரசே வழிவகுத்து தர வேண்டும்.

Tagged: , , , , , , ,

3 thoughts on “பாலியல் போதை எனும் மனநோய்

 1. jaya rajarethinam April 20, 2013 at 9:00 am Reply

  வரவேற்கிறேன் …இந்த கட்டுரை வழியே அனைவரது கருத்தாகட்டும் நன்றி

  2013/4/20 M.A.S.E.S — Movement Against Sexual Exploitation and Sexism

  > **
  > Movement Against Sexual Exploitation and Sexism posted: ” ஓவ்வொரு
  > முறை வன்புணர்வு கொடுமைகள் நடக்கும்போதும் போராட்டங்கள் தொடுக்கப்படுகிறது.
  > இந்த விழிப்புணர்வும், ஒருங்கிணைப்பும் ஆதரவளித்தாலும், தாங்கள் வன்புணர்வு
  > செய்வது ஒரு குழந்தை என்று கூட கவனத்தில் கொள்ளாத அளவுக்கு செல்லும்
  > அந்நபர்களின் மனநிலை க”

 2. tulir August 19, 2013 at 3:46 am Reply

  Most people imagine abusers to be shadowy and frightening strangers. In fact, most often these abusers can range from family members to acquaintances and someone the victim trusts explicitly. Rarely are abusers complete strangers.

  Contrary also to what people may think, a person who abuses a child is usually not someone with a psychiatric disorder. They are usually indistinguishable from anyone else. In fact, often an abuser is a “regular” person who leads a “routine” life and is known to the victim, but has no inhibition or qualms for having sex with children.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: