பணியிடங்களில், பெண்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள்


1082601_10200292384981155_2125076262_o

 

பணியிடங்களில், பெண்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் தருவோர் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் ஒன்று இயற்றப்பட்டுள்ளது. லோக் சபா மற்றும் ராஜ்யசபாவில் இந்த சட்டம் ஏற்று கொள்ளப்பட்டு, பின் ஜனாதிபதி ஒப்புதலும் வாங்கி தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது

இது பற்றிய தகவல்கள் சிறு கேள்வி பதில் வடிவில் :

எந்தெந்த நிறுவனங்கள் இதனை பின் பற்ற வேண்டும் ?

அனைத்து நிறுவனங்களும் – அவ்வளவு ஏன் – வீட்டி பணிபுரியும் பணிப்பெண் கூட பாலியல் சீண்டல்களுக்கு ஆளானால், இச்சட்டத்தின் கீழ் கம்பிளேயின்ட் தரலாம். நிறுவனங்கள், சிறு கடைகள், ஹோட்டல்கள், அரசு துறை நிறுவனங்கள் என எல்லா இடங்களுக்கும் இச்சட்டம் பொருந்தும்

இந்த சட்டத்தில் முக்கியமாக என்ன சொல்லப்பட்டுள்ளது ?

ஒரு பெண் பாலியல் சீண்டல்களுக்கு ஆளானால், அவர் அது பற்றி, பணி புரியும் இடத்தில் புகார் தரலாம். ஒவ்வொரு நிறுவனமும் இதற்காக ” Internal Complaints committee ” ஒன்றை அமைக்க வேண்டும்.

இந்த கமிட்டியில் எத்தனை உறுப்பினர் இருக்க வேண்டும், யார் யாரெல்லாம் இருக்க வேண்டும் என்ற விபரங்களை இந்த சட்டம் விரிவாக கூறுகிறது

மேலும் புகார் உண்மை – என்றால் அதன் மேல் தகுந்த நடவடிக்கை எடுக்கவும் கூறப்பட்டுள்ளது. பொய்யான குற்ற சாட்டுகள் தரப்பட்டால் அப்படி தந்த பெண் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது

ஒவ்வொரு நிறுவனமும் Internal Complaints கமிட்டி அமைக்க வேண்டுமா ? உதாரணமாக 5 பேர் வேலை செய்யும் ஒரு மருந்து கடையில் ஒரே ஒரு பெண் இருந்தால் அங்கும் Internal Complaints கமிட்டி அமைக்கணுமா ?

10 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் வேலை பார்க்கும் எந்த நிறுவனம் அல்லது கடையும் (அங்கு ஒரே ஒரு பெண் ஊழியர் இருந்தால் கூட) இந்த கமிட்டி அமைக்க வேண்டும்.

அரசாங்கம் ஒவ்வொரு ஏரியாவிலும் சில லோக்கல் கமிட்டிகள் அமைக்கவும் சட்டம் பரிந்துரை செய்துள்ளது. 10 க்கு குறைவான நபர்கள் ஒரு நிறுவனம் அல்லது கடையில் வேலைக்கு இருந்தால் அங்கு நிகழும் இத்தகைய குற்றங்களை லோக்கல் கமிட்டி முன்பு எந்த பெண்ணும் கொண்டு செல்லலாம்

Internal Complaints கமிட்டியில் யார் யாரெல்லாம் உறுப்பினர் ஆக இருக்க வேண்டும்?

கமிட்டியில் குறைந்தது 4 உறுப்பினர் இருக்க வேண்டும். கமிட்டியின் தலைவராக ஒரு பெண் தான் இருக்க வேண்டும். அவர் அலுவலகத்தில் சீனியர் நிலையில் இருக்கும் பெண்மணியாய் இருத்தல் நலம். கமிட்டியின் மொத்த உறுப்பினர்களில் குறைந்தது பாதி பேர் பெண்களாக இருக்க வேண்டும். 4 பேர் கொண்ட கமிட்டி எனில் – குறைந்தது 2 பெண்கள்; 5 பேர் உள்ள கமிட்டி எனில் குறைந்தது 3 பெண்கள் இருத்தல் அவசியம்

இந்த கமிட்டியில் நிறுவனத்தில் பணி புரியாத ஒரு வெளி நபரும் இருக்க வேண்டும். இவர் சேவை நிறுவனங்களுடன் (NGO) தொடர்புடையவராக இருத்தல் அவசியம்

ஒரே ஊரில் இருக்கும் நிறுவனத்தின் ஒவ்வொரு கிளைக்கும் ஒரு கமிட்டி அவசியமா? வெளியூரில் இருக்கும் ப்ராஞ்ச்களுக்கும் கமிட்டி தேவையா ?

ஆம் உள்ளூர் அல்லது வெளியூர் எங்கு கிளை அலுவல்கம் இருந்தாலும் அங்கும் இத்தகைய கமிட்டி அவசியமே.

தனது மேலதிகாரியான பெண் அதிகாரி தனக்கு செக்ஸ் டார்ச்சர் தருகிறார் என ஒரு ஆண் ஊழியர் இந்த சட்டத்தின் கீழ் புகார் தர முடியுமா?

இல்லை இந்த சட்டம் முழுக்க முழுக்க பெண்களை பாது காக்க மட்டுமே இயற்றப்பட்டது. சட்டத்தின் தலைப்பிலேயே “பெண்களை பாதுகாக்க ” என கூறப்பட்டுள்ளது.

ஒரு ஆண் அதிகாரி ( Gay ) தனக்கு செக்ஸ் டார்ச்சர் தருகிறார் என இன்னொரு ஆண் ஊழியர் இந்த சட்டத்தின் கீழ் புகார் தர முடியுமா?

முடியாது மேலே சொன்ன காரணம் தான்.பெண்கள் மட்டுமே இந்த சட்டத்தின் கீழ் கம்பிலேயின்ட் தர முடியும்

ஒரு பெண் ஊழியர் மற்ற சக ஊழியர்களை விட – தனது மேனேஜர் மேல் செக்ஸ் கம்பிலேயின்ட் தந்தால் அது சீரியசாக எடுத்து கொள்ளப்படும் என்பது உண்மையா ? ஏன் ?

ஆம். சக ஊழியர் மேல் தரும் செக்ஸ் கம்பிலேயின்ட் விட- தான் ரிப்போர்ட் செய்யும் மேனேஜர் மேல் அதே புகார் தந்தால் அதன் விளைவு அதிகம் தான்.
காரணம் ஒரு மேனேஜர் தான் தன் கீழே இருப்போருக்கு வருடாந்திர அப்ரைசல், ப்ரோமோஷன், லீவு என எல்லாவற்றையும் ஓகே செய்ய வேண்டும். இந்த அதிகாரத்தை அவர் தவறாக நடக்க முயல்வது பெரும் குற்றமாக கருதப்படும்

இங்கு அந்த குற்றம் மட்டுமல்ல தனது பதவியை தவறாக பயன்படுத்தினார் என்பதால் தண்டனை அதிகமாகவே ( அநேகமாக வேலை இழப்பு) இருக்கும்
**************
இது புதிய சட்டம் என்பதால் இது பற்றி விரிவாய் பேச எங்கள் ஸ்டடி சர்க்கிளில் இருந்து ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்துள்ளோம். அதன் அழைப்பிதழ் இது…

இதை வாசிக்கும் நீங்கள் HR அல்லது லீகல் பீல்டில் இருந்தால் நிச்சயம் நீங்களும் கலந்து கொள்ளலாம் அல்லது உங்கள் நிறுவன HR மேனஜர்க்கு இந்த பதிவை அல்லது மீட்டிங் குறித்த அறிவிப்பை அனுப்பி, முடிந்தால் கலந்து கொள்ள சொல்லுங்கள் !

source: http://veeduthirumbal.blogspot.com/2013/07/blog-post_25.html – via https://www.facebook.com/groups/againstmalechauvinisticads/597274056961646/?ref=notif&notif_t=group_activity by Siva Kumar

Tagged: , , , ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: