செல்ஃபி ஷாக் – நக்கீரன்


இந்தியாவின் புதிய சூப்பர் ஸ்டார்’ ஷாருக்கானின் செல்ல மகன் ஆர்யன்கான், பள்ளி மாணவி ஒருவரோடு அந்தரங்கமாக இருக்கும் வீடியோ காட்சி… ஒருசில இணையதளத்தில் வெளியாகி பாலிவுட்டில் மட்டுமல்ல அத்தனை “வுட்’களிலும் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது. அதுவும், அந்தரங்க வீடியோவை எடுத்தது வேறு யாருமல்ல, 17 வயதே ஆன ஆர்யன்கான்தான். இதைவிட இன்னொரு ஷாக் நியூஸ்… ஆர்யன்கானோடு இருக்கும் அந்த மாணவி பாலிவுட் பழைய சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனின் மகள் வயிற்றுப் பேத்தி.

ஆர்யன்கான் பாலிவுட்டின் மன்மதன். ஷாருக்கின் “கபி குஷி கபி கம்’’படத்தில் குழந்தை ஷாருக்காக நடித்தவன். டிஸ்னியின், “தி இன்கிரெடிபில்ஸ்’-ன்’ இந்தி மொழிபெயர்ப்பான “ஹம் ஹை லாஜவாப்’’படத்தில் தேஜ் கேரக்டருக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்துள்ளான். இதற்காக ’சிறந்த குழந்தை டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டுக்கான விருதையும் பெற்றுள்ளான். தீராத விளையாட்டுப்பிள்ளை ஸ்போர்ட்ஸில் மட்டுமல்ல, கேர்ள்ஸ்களிடமும்தான்.  ஆனால், அவன் இப்போது விளையாடியது விபரீத விளையாட்டு. கடந்த சிலநாட்களுக்கு முன்புதான் இரண்டு பெண்கள் ஒரேநேரத்தில் அவனுக்கு முத்தம் கொடுத்த புகைப்படம் வெளியாகி புகைச்சலை உண்டாக்கியது. இப்போது, இப்படியொரு வீடியோ வெளியானது பெண்ணுரிமைப் போராளிகள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சர்ச்சைகளையும் விவாதத்தையும் உருவாக்கி யிருக்கிறது.

அப்படி என்ன செய்துவிட்டான் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் என்பதை அறிவதற்கு முன்  கல்கத்தாவில் நடந்த ஒரு சினிமா ப்ரஸ்மீட்டில் சமீபத்தில் ஷாருக்கான், “”பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உலகம் முழுவதும் நடந்துகொண்டிருக்கிறது. பெண்களிடம் எப்படி பழக வேண்டும் என்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கவேண்டும். எனது மகனிடம்  “எந்த பெண்ணின் மனதையும் புண்படுத்தாதே… நாகரிகமாக பழகு’ என்றுதான் அட்வைஸ் செய்வேன்”’என்றார். ஆனால், எந்த மகனிடம் அட்வைஸ் செய்ததாக ஷாருக்கான் குறிப்பிட்டாரோ அதே மகன்தான் இப்படியொரு அநாகரிகமான செயலில் ஈடுபட்டிருக்கிறான்.

காரில்தான் நடக்கிறது அந்தக் காட்சி. அமிதாப்பச்சன் பேத்தியின் ஆடைகளை களைந்து சில்மிஷங்களை செய்தபடி வீடியோ எடுக்கிறது ஒரு கை. கொஞ்சநேரத்தில்தான் தெரிகிறது அது நடிகர் ஷாருக்கானின்  மகன் ஆர்யன்கானின் கை என்பது. அதற்குப் பிறகு நடந்தது அச்சில் ஏற்றமுடியாத செயல்கள். இதை எல்லாம், ஆர்யன்கானே செல்ஃபி வீடியோ எடுப்பதும் இதன் பின்விளைவுகள் புரியாமல் அந்த மாணவியும் இவனோடு நெருக்கமாக இருப்பதும்தான் வேதனையின் உச்சகட்டம்.

சர்ச்சை குறித்து, பாலியல் சுரண்டல் மற்றும் பாலியல் வாதத்திற்கு எதிரான அமைப்பின் தலைவர் நிர்மலா கொற்றவையிடம் கேட்டபோது, “”முதலில், இது இரண்டு பேரின் பர்சனல் விஷயம். இரண்டாவது, இது உண்மையான வீடியோதானா? அல்லது மாஃர்பிங் செய்யப்பட்டதா என்பதையும் ஆராயவேண்டும். மூன்றாவது, ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான்  எடுத்த வீடியோவை அவனே இணையதளத்தில் உலவவிட்டானா அல்லது அவனது செல்ஃபோனிலிருந்து திருடப்பட்டு வெளியானதா என்பதை பார்க்கவேண்டும். சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது, பெரிதும் ஈடுபடுவது டீன் ஏஜ் வயதினர் என்பது கவலை அளிக்கக்கூடிய விஷயம்.

குறிப்பாக, டீன் ஏஜ் பெண்கள் இதன் கவர்ச்சித் தன்மையில் தன்வயம் இழந்து சில அந்தரங்கமானப் புகைப்படங்களையும் பகிர்ந்து விடுகின்றனர். வீடியோ எடுப்பதன் விபரீதம் தெரியாமல் தடுப்பதற்கு பதிலாக அமைதியாக இருந்துவிடுகிறார்கள்.  இதனால்,  வருங்காலத்தில் ஆபத்தான பின்விளைவுகளையும் எதிர்கொள்ள நேர்கிறது. உண்மையில் அந்த வீடியோவில் இருக்கும் பெண்ணைவிட வெட்கப்பட வேண்டியது அந்த வீடியோவை எடுத்து தவறாகப் பயன்படுத்தியவன்தான். மேலும், பெண்களின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் தவறாகப் பயன்படுத்தும் நபர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்”’என்கிறார் அவர்.

தமிழக அரசின் குழந்தைகள் நல குழுமத்தின் முன்னாள் தலைவரும்  ‘செஸ்’ குழந்தைகள் அமைப்பின் இயக்குனருமான டாக்டர் மனோரமா கொந்தளித்துப்போய் பேசுகிறார்.  “”இரண்டுபேரும் அப்படி அந்தரங்கமாக ஈடுபட்டது வேண்டுமானால் அவர்களது பர்சனல். ஆனால், அதை வீடியோவாக எடுத்து  சமூக வலைத்தளத்தில் பரப்பியதை பர்சனல் விஷயமாக எப்படி எடுத்துக் கொள்வது?  அதுவும், ஆர்யன்கான் எடுத்த வீடியோ அவனது அனுமதியில்லாமல் மற்றவரால் எப்படி திருடப்பட்டிருக்கும்? ஏற்கனவே, தமிழகத்தில் 17 வயது சிறுவன்  பல பெண்களை காதலித்து ஏமாற்றி வீடியோ எடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டு சிறார் சீர்திருத்தப்பள்ளியில் இருக்கிறான்.  நக்கீரன்தானே, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக அச்செய்தியை தொடர்ந்து எழுதி நடவடிக்கை எடுக்கவைத்தது.

ஷாருக்கானின் மகன் என்பதாலோ பிரபலம் என்பதாலோ விட்டுவிட முடியுமா என்ன? ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு வயது 17 என்றாலும்கூட அவன் செய்த செயல் சிறுபிள்ளைகள் செய்யக்கூடிய சாதாரண செயல் அல்ல. இப்படியொரு வீடியோவை பார்க்க நேரும் சிறுவர்-சிறுமிகளின் மனநிலையில் என்ன தோன்றும்? அதேபோல், நாமும் முயற்சித்துப்பார்க்கலாம் என்றுதானே தோன்றும்? இதைவிடக் கொடுமை, அந்தச் சிறுமியின் எதிர்காலம் என்னவாகும்? சிறுமிகள், பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவதற்கு இது ஒரு முக்கிய சான்று. இதை,  பெண்கள் அமைப்பும், காவல்துறையும் இப்படியே விட்டுவிட்டால் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்.  அதனால், உடனடியாக ஷாருக்கானின் மகன் மீது நடவடிக்கை எடுக்க  நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும்”’என்கிறார் ஆவேசமாக.

“சைபர் க்ரைம்’ வழக்கறிஞர் ஹன்சாவிடம் கேட்டபோது, “”நெருங்கிய தோழியாக இருக்கட்டும், காதலியாக இருக்கட்டும்,  மனைவியாக இருக்கட்டும். எந்த உறவாக  இருந்தாலும் சரி… ஒரு பெண்ணின் அந்தரங்கத்தை படம்பிடிப்பது தவறு. அதுவும், அவளது அனுமதியில் லாமல் அதை இணையதளத்தில் வெளியிடுவது சட்டப்படி குற்றம். எந்த ஒரு பெண்ணும் தனது அந்தரங்க வீடியோவை அனைவரும் பார்க்கட்டும் என்று இணையதளத்தில் அப்லோட் செய்ய விரும்பமாட்டாள். அந்த கோணத்தில்தான் இந்த வீடியோவையும் அணுகவேண்டியிருக் கிறது. அவளது அனுமதியில்லாமல்  அந்தச் சிறுவன் அந்த வீடியோவை பரப்பியிருந்தால் சட்டப்படி குற்றம்.

பொதுவாக இது மாதிரியான அப்லோட்களை யார் செய்தது என்பதை அதன் ஐ.பி. அட்ரஸ், மற்றும் மேக் அட்ரஸை வைத்து  சைபர் க்ரைம் போலீஸார் கண்டுபிடிப்பார்கள். ஆனால், ஐ.பி. அட்ரஸ், மேக் அட்ரஸை மாற்றும் அளவுக்கு தந்திரமுள்ளவனாக இருந்தால் அவனை சிறார் அல்லது சிறுவன் என்று சொல்லமுடியாது. ஆனாலும் சட்டப்படி  18 வயது நிரம்பிய ஒருவன் சிறுமியின் அந்தரங்கத்தை படம்பிடித்து நெட்டில் உலவவிட்டிருந்தது நிரூபிக்கப்பட்டால், சைல்டு ஃபோர்னோகிராஃபியை பரப்பியதற்காக இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி சட்டப்படி ஐந்து வருடமும் இந்திய தண்டனை சட்டம் 292 பிரிவின்படி ஐந்து வருடமும் என 10 வருடங்கள்வரை தண்டனை கிடைக்கலாம். ஆனால், சிறுவன் என்பதால் சீர்திருத்தப் பள்ளியில் கொண்டு போய்தான் வைக்க முடியும்.

டெல்லியில் நடந்த பாலியல் கொடூரத்தில் ஈடுபட்டவனும் 17 வயது உடையவன்தான். இப்படி, 16 வயதிலிருந்து 18 வயதுக்குட்பட்ட இளம் சிறார்கள் பலவிதமான குற்றங்களில் ஈடு பட்டு சட்டத்தினால் தப்பித்துக்கொண்டிருப்பதால்தான் சிறார் வயதை 16-ஆக குறைக்கவேண்டும் என்று பலரும் போராடி வருகிறோம். அதற்கான, சட்டம் முன்வரைவாகத்தான் இருக்கிறது. விரைவில் சட்டமாகி அமலுக்கு வந்தால்தான் இதுபோன்றவர்களை தண்டிக்க முடியும்”’என்கிறார் அவர். இதுகுறித்து, தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் லலிதா குமாரமங்கலத்திடம்  நாம் கேட்டபோது, “”அந்த வீடியோ உண்மையா, பொய்யா என்று தெரியாமல் நான் கருத்து சொல்லமுடியாது. அதேநேரத்தில், பாதிக்கப்பட்டதாக அச்சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத் தால் நிச்சயம் அதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வோம்”’என்றார்.

இச்சர்ச்சை குறித்து பாலிவுட் வட்டாரத்தில் விசாரித்தபோது, “””ஷாருக்கானின் மகனும் அமிதாப்பச்சனின் பேத்தியும் ஸ்டார் குடும்பம் என்பதால் மட்டுமல்ல, இருவருமே லண்டனில் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படித்துக்கொண்டிருக்கிறார்கள். அமிதாப்பச்சனின் மகள் ஸ்வேதாபச்சனின் மகள் இவர். இந்த இருவருக்கமான நட்புதான் இப்படி எல்லை மீறியிருக்கிறது” என்கிறார்கள். ‘”நீங்கள்  ஒரு பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டால்… கொடூரம் காட்டினால்… உங்கள் தந்தையர் நிச்சயம் மன்னிக்கமாட்டார்கள்’’என்று அடிக்கடி ஷாருக்கான் சொல்லிக்கொண்டே இருப்பார். ஆனால், அவரது மகன் செய்திருப்பது வெறும் மன்னிக்கக்கூடிய செயல் அல்ல; சட்டத்தால் பாடம் புகட்ட வேண்டிய செயல்.

-மனோ

source: http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=130110

Tagged: ,

One thought on “செல்ஃபி ஷாக் – நக்கீரன்

  1. jayarajarethinam October 10, 2014 at 2:01 am Reply

    வணக்கம் தோழி
    செய்தியை வாசித்தேன் மிக மிக கொடுமை …அறியா பிள்ளைகள் என்று விட்டு
    விடுவது தவறு… கண்டிக்க வேண்டிய விஷயம் ..நன்றி

    2014-10-10 10:32 GMT+05:30 M.A.S.E.S — Movement Against Sexual

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: