ஆபாச பத்திரிகை எரிப்பு – கல்லூரி மாணவிகள் பேராதரவு – வினவு


அன்பார்ந்த மாணவ – மாணவிகளே, இளைஞர்களே, உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே,

பாலியல் வக்கிரங்களைத் தூண்டும் ஆபாச பத்திரிகைகள் எரிப்புப் போராட்டத்தை எமது புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் சென்னையில், வரும் 17-ம்தேதி நடத்த உள்ளதாக அறிவித்திருந்தோம். தவிர்க்க முடியாத காரணத்தால் இப்போராட்டம் ஒரு நாள் தள்ளி, 18-ம் தேதி நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இப் போராட்டத்தையொட்டி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் பெண்கள் கல்லூரிக்கிளை மாணவத் தோழர்கள் சென்னை நகரம் முழுவதும் சூறாவளியாய் சுழன்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

சென்னையில் உள்ள மகளிர் கல்லூரிகளான ராணிமேரி கல்லூரி, பாரதி மகளிர் கல்லூரி, காயிதேமில்லத், எஸ்.ஐ.இ.டி மகளிர் கல்லூரி, செல்லம்மாள் மகளிர் கல்லூரி, லேடி விலிங்டன் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் சென்னைப் பல்கலைக் கழகம் ஆகிய கல்லூரிகளில் பாலியல் வக்கிரத்தைத் தூண்டும் ஆபாச பத்திரிக்கைகள் எரிப்புப் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் மாணவிகள், மாணவர்கள், பேராசிரியர்கள், கல்லூரி முதல்வர் ஆகியோர்களை சந்தித்து கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

ஆர்வமுடன் கையெழுத்திடும் மாணவர்கள், பேராசிரியர்கள் இப்போராட்டத்திற்கு தார்மீக ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இதை பார்த்த பெண் போலீசாரும் தாங்களாகவே முன்வந்து கையெழுத்திட்டுள்ளனர். இப்பிரச்சாரங்களை பார்க்கும் மாணவிகள் அதை படம் பிடித்து பேஸ்புக்கில் போடுவதையும் செய்கின்றனர். இந்த வகையில் புமாஇமு தொடங்கியுள்ள கலாச்சார சீரழிவுக்கு எதிரான இப்போராட்டத்திற்கு கல்லூரி மாணவிகள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது.

ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள இச்சமூகத்தை தட்டி எழுப்ப நள்ளிரவிலும் பிரச்சாரம்

மாணவிகள் மத்தியில் மட்டுமின்றி சென்னையின் முக்கிய சாலைகளான அண்ணாசாலை, காமராஜர் சாலை (கடற்கரையையொட்டிய சாலை) ஆகியவற்றில் மக்கள் அதிகம் கூடுமிடங்களில் புமாஇமு மாணவிகள் தீவீர பிரச்சாரம் செய்து வருகின்றனர். பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் பிரசுரங்களை கேட்டு வாங்கி படித்து ஆதரவு தெரிவிக்கின்றனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

கலாச்சார சீரழிவை கண்டுகொள்ளாமல் ஆழ்ந்த உரக்கத்தில் உள்ள மனிதர்களை தட்டி எழுப்பும் வகையில் நள் இரவிலும் (இரவு 12 மணிக்கும் ) பேருந்து, ரயில்களில் ஓயாமல் பிரச்சாரங்களை செய்து வருகிறது புமாஇமுவைச் சார்ந்த புரட்சிகர மாணவிகள் படை.

கலாச்சார சீரழிவுக்கு எதிரான பிரச்சார நடைப்பயணம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

பாலியல் வக்கிரத்தைத் தூண்டும் ஆபாச பத்திரிகைகள் எரிப்புப் போராட்டத்திற்கு அனைத்துதரப்பு மக்களின் ஆதரவை திரட்டும் வகையில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் – இளைஞர்களுடன் புமாஇமு வின் புரட்சிகர கலாச்சார படை 15-ம் தேதி மதுரவாயலில் இருந்து சென்னை உயர்நீதிமன்றம் வரை நடைப்பயணமாக பிரச்சாரம் செய்து வருகிறது.

டிசம்பர் – 18,
சென்னையில்…
பாலியல் வக்கிரத்தைத் தூண்டும்
ஆபாச பத்திரிகைகள் எரிப்புப் போராட்டம்!

  • பாலியல் வக்கிரத்தைத் தூண்டும் ஆபாச பத்திரிகைகள் எரிப்புப் போராட்டத்தை ஆதரியுங்கள்.
  • போராட்டத்திற்கு வாருங்கள்.
  • வருபவர்கள் எமது புமாஇமு அலுவலக எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்.

அலுவலக தொடர்பு எண் : 9445112675

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை

மூலம்: http://www.vinavu.com/2014/12/16/rsyf-protest-against-vulgarity-in-media-rescheduled-to-18th/

Tagged: , ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: