திரை மறைவு கேமிரா குறித்து – நக்கீரன்


ரகசியக் கேமிராக்கள் பொருத்தி பெண்களின் அந்தரங்க தருணங்களை, பெண் உடலை ஆபாசமாகப் படிம்பிடித்து பெண்களை மிரட்டுவது குறித்து:

பெண் உடல் பற்றிய ஆணாதிக்க சமூகத்தின் கருத்தியலே இப்படிப்பட்ட பாலியல் ரீதியான வக்கிரங்களுக்கான அடிப்படை காரணம். இந்த ஆண் அதிகாரமே பல்வேறு வக்கிரங்களுக்கு வழிவகுக்கிறது, வன்புணர்வு, ஆபாசப் படமெடுத்தால் ஆகியவை இதன் நீட்சியே. இதுபோன்ற வக்கிரங்களை, ஆபாச புகைப்படங்களை, வீடியோக்களைக் கண்டு பெண்கள் அஞ்சக்கூடாது. நமது அச்சமே அவர்களது மூலதனம். ஒருவேளை பெண்கள் இதுபோன்ற அத்துமீறல்களுக்குள்ளாக நேர்ந்தால் துணிந்து அதை அம்பலப்படுத்த வேண்டும். காவல் துறையில் புகாரளிக்க வேண்டும், சட்டரீதியான நடவடிக்கையில் இறங்க வேண்டும்.

ஆனால், இந்தப் போராட்டத்தில் வெல்வது பெண்களால் மட்டுமே சாத்தியமில்லை, காவல்துறை, சட்டம், சமூகம் என அனைத்தும் பெண்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும். புகார் கொடுக்க வரும் பெண்களை கேவலமாகப் பேசாமல், அவர்களையே குற்றவாளிகளாக்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்ணின் விருப்பமின்றி எவர் படம் எடுத்தாலும் அது வக்கிரமே, குற்றமே – அது காதலனாக, கணவனாக இருந்தாலும் சரி. காதல் சார்ந்த பிரச்சினை என்றால் அதில் பெண்ணின் நடத்தையை குறை சொல்லிப் பேசும் மனநிலையிலிருந்து சமூகம் வெளிவர வேண்டும். தங்களுக்கு நேரும் பாலியல் சார்ந்த தொல்லைகளை வெளிப்படையாகப் பேசுவதற்கான சூழலை குடும்பமும் சமூகமும் பெண்களுக்கு ஏற்படுத்தித் தரவேண்டும்.

புகார் கொடுக்கும் பெண்ணின், குடும்பத்தினரின் அடையாளங்கள் பற்றிய இரகசியம் காக்கப்பட வேண்டும். அவமானத்திற்கு பயந்து ஒடுங்குவதே வக்கிரங்கள் பெருக துணை நிற்கிறது.

Hidden Camera

Hidden Camera

page-1 page-2 page-3

Tagged:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: