Category Archives: Sexist Advertisements

Women’s Day recognition

VSTB6979

லயோலாவில் விருது

வணக்கம் தோழர்களே,
1.10.2017 – வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாய் அமைந்தது. நான் படித்த லயோலா கல்லூரியில், முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பாக நடந்த லாமெஸ்’17 என்னும் நிகழ்ச்சியே அதற்கு காரணம்.
லயோலாவில் காட்சித் தொடர்பியல் (விஷுவல் கம்யூனிகேஷன்) படித்து தொடர்பியல் துறையில் குறிப்பிடத்தக்க அங்கீகாரம் பெற்றவர்களுக்கு விருது வழங்கி அங்கீகரிக்கும் நிகழ்வு. எழுத்தாளர் என்ற வரிசையில் என்னையும் அழைத்து சிறப்பித்திருந்தார்கள்.
சிறப்பு விருந்தினர்களாக இசையமைப்பாளர் #SanthoshNarayan Director #Mysskin Actor Guru Somasundaram வந்திருந்தார்கள்.
1987களில் படித்து விநியோகிஸ்தராக திகழும் அபிராமி ஃபிலிம்ஸ் (மன்னிக்கவும் சரியான பெயர் நினைவில் இல்லை) நிறுவனர், தோழர் Kombai S Anwar, புகைப்பட கலைஞர் #GVenkatram koothu pattarai #NateshMuthusamy தொடங்கி இயக்குனர் #Vetrimaran Somee Tharan என் வகுப்புத் தோழர்கள் இயக்குனர் #அஹ்மத்,புகைப்பட கலைஞர் Satyajit C.P. ஊடகத் துறையில் Andrew Juan Pradeep Milroy Peter Saju David P @Aldom Jacob Sujith G ஒளிஓவியத் துறையில் எனக்கு அடுத்த வருடங்களில் படித்த Soundar Rajan, விளம்பர துறையில் @chockalingam OPN Karthick இயக்குனர்கள் Pushkar Gayatri John Vijay என்ற பெயர்களுக்குப் பின் வந்த அத்தன பெயர்களும் எனக்கு வியப்பளித்தது! காரணம், நாம் சமீபத்தில் திறையில் கண்டு விரும்பிய அல்லது அறிந்த முகங்களில், பெரும்பாலர் லயோல விஸ்காம்! பெருமகிழ்ச்சி!
நான் மிகவும் ரசித்த படமான ஒருநாள் கூத்து இயக்குனர் Nelson Venkatesan இயக்குனர் Rajkumar Periasamy இயக்குனர் Yuvaraj Dhayalan இயக்குனர் Badri Venkatesh Editor Fenny Oliver Editor Ruben Actor@Krishna Ramakumar, புகைப்பட கலைஞர் Sree Nag (Shreya Nagarajan Singh) என்று பட்டியல் நீண்டது (எனவே அனைவரின் பெயரும், படங்களும் நினைவில் இல்லை, மன்னிக்கவும்). இவர்களோடு நம் மனதில் கண்டிப்பாக இடம்பிடித்திருக்கக் கூடிய #சுமார்மூஞ்சிகுமாரு புகழ் Daniel Annie Pope Lallu Sananth singer & music composer Ajesh இயக்குனர் Kiruthiga Udhayanidhi …… (விஷால், ஜெயம் ரவி, விஜய் ஆகியோர் உட்பட) இன்னும் பலர் என்று வியப்பளிக்கும் பட்டியல்.
இப்படி மைய நீரோட்ட ஊடகத் துறையில் மிளிர்ந்தவர்களுக்கு மத்தியில் மாற்று அரசியல் நீரோட்டத்தை மையமாக வைத்து எழுதும் நான்.
தான் வளர்த்த பிள்ளைகளை ஊக்குவித்து, பாராட்டி, பின் வரும் சந்ததியினருக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த லயோலா கல்லூரி, முன்னாள் மாணவர்கள் சங்கம், விஸ்காம் துறை பேராசிரியர்கள், நிர்வாகிகள், மாணவர்கள் என அனைவரின் அன்பும் போற்றுதலுக்குரியது.
மேடையில் பேசியது:
வணக்கம் தோழர்களே, நான் ovc 65 பேட்ச். இந்த எண்ணை சொல்லவே பெருமையாக இருக்கிறது. அரசு தரக்கூடிய விருதை விட இந்த விருதை நான் பெருமையாக எண்ணுகிறேன், ஏனென்றால் நாம் படித்த கல்லூரியில் நமக்கு அங்கீகாரம் கிடைப்பதென்பது பெருமகிழ்ச்சிக்குரியது, அல்லவா!
இந்த தருணத்தில் நான் Rajanayagam Appaa வை மிகவும் மிஸ் செய்கிறேன். நான் படித்த காலத்தில் மிகவும் மக்காகவே இருந்தேன் ஆனால் இன்று… என்னையெல்லாம் பாஸ் செய்துவிட பெரிய மனது வேணும் அது ராஜநாயகம் தோழருக்கு இருந்தது. அதேபோல் பேராசிரியர் ஹென்ரி மரியா விக்டர், சுரோஷ் பால், ரபி பெர்னாட் ஆகியோருக்கும் எனது நன்றிகள்.
வாய்ப்பு கிடைக்கும் போது விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது ஒரு எழுத்தாளரின் கடமை. அந்த வகையில் நான் இந்த மேடையில் ஒரு வேண்டுகோள் வைக்க நினைத்தேன், எனக்கு முன்னரே கார்த்திக் பேசிவிட்டார். ஆம்! ஊடகங்களில் பெண் உடல் சித்தரிப்பு குறித்துத்தான். திரைத்துறையினர் பலர் கூடியிருக்கும் அரங்கில் இதை பேசுவது அவசியம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக பலரும் சென்று விட்டனர். இருப்பினும் சொல்கிறேன். பெண் கதாபாத்திரங்களை சற்று கூருணர்வுடன் சித்தரியுங்கள். குத்துப் பாட்டெல்லாம் எதற்கு?
சமீபத்தில் நான் பார்த்த ஒரு திரைப்படத்தில் வேலை கேட்டு வரும் ஒரு பெண்ணின் கையில் துடப்பத்தைக் கொடுத்து வீட்டிற்குள் தள்ளி விடுவார் கதாநாயகன், அவள் அதை ரசித்து சிரிப்பாள். என்ன இது?
I started a Forum to talk about Sexist Representations in Media and Thank you Karthick for speaking about it and seeking social responsibility.
மற்றபடி நிகழ்ச்சியை வெகு சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறீர்கள். அனைவருக்கும் நன்றி
என்று முடித்தேன்.
ஆனால், இந்த தருணத்தில் நான் முக்கியமான இரண்டு பெயர்களை குறிப்பிட்டே ஆக வேண்டும். ஒருவர் Fr. Injakal and Fr. Alphonse இவர்கள் இருவரும் மனது வைக்காமல் போயிருந்தால் எனக்கு லயோலா கல்லூரியில் இடமே கிடைத்திருக்காது. இன்சக்கல் அவர்களின் அறைக்கு வெளியே ஒரு மாதம் தினம் தினம் சென்று காத்திருந்து மன்றாடி பெற்ற இடம். (நுழைவுத் தேர்வில் தேரவில்லை!). அப்போது கல்லூரி முதல்வராக இருந்தவர் Fr. Xavier Alphonse இவர்களை நான் என்றென்றைக்கும் மறக்க மாட்டேன்.
இந்நிகழ்ச்சிக்கு என்னை அழைத்த Nithya B Nithi மற்றும் அனைத்து பேராசிரியர்களுக்கும் நன்றி.
#LAMBZ17

An Appeal to actress Jyothika

#Jyothika I truly appreciate your appeal to directors. Glad to see a Woman, a Heroine, a person of that industry is raising voice against such discrimination and exploitation. The most important point you made is how the medium conditions the minds of the society and men in particular! Thank you!

However, may I ask if only directors / producers should take up this responsibility. Can we be ignorant to the fact that Heroes – big heroes like #ActorSurya Vijay, Ajith and many such heroes – are also one of the decision makers in script and characterization. We all are aware of the fact that they also demand ‘glamour’ from the heroines for ‘salebility’ of their films. They dare to come out of the ‘Heroism’ built by the Patriarchal society. We are infact tired of the ‘lectures’ given by these heroes about being a ‘homely woman’, ‘good woman’, ‘chaste woman’, now the trend is being ‘Thamizhachi’…. huh… I can understand how suffocating you would have felt from the way you are voicing against it.

Since you are appealing to people in the film industry, I would like to gently appeal to you to please put forward this message to Heroes in the film industry, especially to Suriya Sivakumar, because he seems to be so ‘concerned’ about various problems of the society! Let the problem of Sexism and Sexist representation in the films also add to the list.

While it feels happy to see Suriya producing woman centric films with you as heroine of the film, it is annoying to see him exploiting / allowing to exploit other woman’s body in the name of glamour! (Love_songs in a commodified manner).

Would you be able to take up this discussion with him?

Related Link

To Read in Tamil:

http://saavinudhadugal.blogspot.in/2017/04/blog-post_24.html

Open up against TATA DOCOMO

bg

ccc

ஜில்லெட்டின் படை வீரர்கள்

no-68481_640

சமீபத்தில் ஜில்லட் நிறுவனத்தின் படைவீரர்கள் தேவை எனும் ஒரு விளம்பரத்தைக் காண நேர்ந்தது. பெண்கள் தினம் என்பது ஆண்களின் தினமாக, ஆணாதிக்க ’பெண்மை’ போற்றும் தினமாக, பெண்களுக்கு ‘லஞ்சம்’ கொடுக்கும் தினமாக மாறிவிட்ட சூழலில், இந்த விளம்பரம் என் கவனத்தை ஈர்த்தது.

அந்த விளம்பரம் என்ன சொல்கிறது:

ஆங்கிலத்தில்:

Soldiers Wanted not to guard the borders

Not to go to war

But to

Support the most important Battle of the Nation

To stand up for women

Because when you respect women

You respect your nation

Support the Movement

Gillette salutes the Soldier in You

தமிழில்:

// Because when you respect wome// – எனும் இந்த வரியை மொழிபெயர்த்தால், ஏனென்றால் நீங்கள் பெண்களுக்கு மதிப்பளித்தால் என்று வருகிறது ஆனால் நான் விளம்பரத்தைப் பார்க்கையில் என் காதில் பெண்களுக்கு வாய்ப்பளித்தால் என்று வந்ததாக நினைவு. (தவறாக இருப்பின் தெரிவிக்கவும்)

பெண்களுக்கு வாய்ப்பளித்தால் எனும் வார்த்தையில் உள்ள அரசியல் மிகவும் ஆபத்தானது ஏனென்றால் அது பெண்ணை ஆணிடம் இறைஞ்சிப் பெருபவளாக, ஆணே எல்லோருக்குமான ‘கடவுளாக’ சித்தரிக்கிறது. எதற்காக பெண்கள் ‘படைவீரர்களிடம்’ வாய்ப்பை எதிர்பார்த்து நிற்க வேண்டும். வாய்ப்பு கொடுக்கும் நிலையில் ஆண்களும், பெறும் நிலையில் பெண்களும் ஏன் இருக்கிறார்கள்?

அது அவ்வாறில்லை ‘பெண்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்’ என்று இருப்பதாகவே வைத்துக் கொள்வோம். அவர்கள் என்ன சொல்லி அழைப்பு விடுக்கிறார்கள் ‘பெண்களுக்கு மதிப்பளத்தல் என்பது தேசத்திற்கு மதிப்பளித்தல் என்பதாகும்’ என்று அறைகூவல். இதைவிட ஒரு நகைப்புக்குரிய ஒரு ‘முதலாளித்துவ கண்ணீரை’ நாம் பார்க்க முடியாது.

பெண்களுக்கு மதிப்பளிக்க இவர்கள் யாரை அழைக்கிறார்கள் தனி நபர் ஆண்களை. எவ்வகையான ஆண்களும், பெண்களும் இதில் இடம்பெறுகிறார்கள் என்பதை வைத்துப் பார்த்தாலே இது எந்த வர்க்கத்தைக் ’கவர’ எடுக்கப்பட்டிருக்கிறது என்பது விளங்கும். உண்மையில் ஒருவர் பெண்களுக்கு மதிப்பளிக்க விரும்பினால் முதலில் அவர்கள் தாங்கள் பயன்படுத்தும் சொற்களில் கவனமாக இருக்க வேண்டும். ‘படைவீரர்’ என்பதே  ’ஆண்மை’ எனும் ஆணாதிக்க கருத்தியலை முன் வைக்கும் ஒரு சொல். வீரர் என்றாலே அது ஆண் என்பதுதான் பொதுப் புரிதல். வீரராய் இருப்பவர்தான் பெண்ணுக்கு பாதுகாவலராக முடியும், அல்லது பெண்ணுக்கு பாதுகாவல் / மதிப்பளிப்பதென்பது வீரமிக்க செயல் என்று சொல்வது அபாசமான ஒன்றில்லையா?

பெண்ணுக்கு மதிப்பளிப்பதென்றால் என்ன?  பெண் விடுதலை என்றால் என்ன? பெண்மை என்ற பெயரில் அவளை ஆணாதிக்க வரையறைக்குள் இருத்தி ‘நீ பெண், நீ பெண்’ பெண்ணாய் இருப்பதாலேயே உனக்கு எல்லா சலுகைகளும், அங்கீகாரங்களும் கிட்டும் என்று  மன்மார்ந்த அடிபணிதலை வலியுறுத்துவதா?

ஆங்கிலத்தில் ஸ்டாண்ட் அப் ஃபார் வுமன் அதாவது பெண்களுக்காக துணை நிற்போம் (குரல் கொடுப்போம்) என்று பொருள். எந்த வர்க்கத்துப் பெண்களுக்கு, எதை வலியுறுத்தி இவர்கள் துணை நிற்க விரும்புகிறார்கள் என்றொரு கேள்வி எழுகிறது. வர்க்க பேதத்தைக் கூட விட்டுவிடுவோம். எதை வலியுறுத்தி இவர்கள் துணை நிற்கப்போகிறார்கள். இந்த விளம்பர நிறுவனத்தின் ‘பண்டத்தையே’ எடுத்துக் கொள்வோம், இது மயிர் மழிக்கும் ஒரு கருவி, இதுவரை அவர்கள் மயிர் மழிப்பது என்பது ‘ஆண்மை’, ஆணின் அடையாளம், அழகு என்றுதானே சொல்லி வருகிறார்கள். ஆனால் பெண்களுக்கான மழிக்கும் கருவியையும் இதே நிறுவனம் தயாரிக்கிறது, அதுபற்றிய பேச்சு எங்குமே இல்லை. (அதைப் பேசினாலும், அழகு, ஆணைக் கவர்வதற்கான ஒரே உத்தி என்றுதான் இருக்கும்).

அடுத்து இவர்கள் முன் வைக்கும் ‘படை வீரர்’ அடையாளம் – இதுதான் உண்மையில் உச்சபட்ச நகைச்சுவை, உண்மையில் படை வீரர்கள் / அவர்கள் மேல் அதிகாரிகள் தங்களுடன் பணி புரியும் பெண்களுக்கு விழைத்த பாலியல் தொந்தரவுகள் எத்தகையது என்பது யாவரும் அறிந்ததே. அஞ்சலி குப்தாவை நாம் மறந்திருக்க மாட்டோம். பூனம் கவுர், டிம்பிள் சிங்காலா ஆகியோர் மேல் அதிகாரிகளின் பாலியல் தொந்தரவு குறித்து புகார் செய்ததற்காக கோர்ட் மார்ஷியல் செய்யப்பட்டார்கள்.  சொல்லப்போனால், ஒரு சாதாரணக் குடிமகன் வன்புணர்வு, பாலியல் அத்துமீறல் செய்தால் ‘தூக்கிலிடு’ என்று கொந்தளிக்கும் ‘வர்க்கமானது’ இராணுவத்தினர் செய்யும் பாலியல் அத்துமீறலுக்கு (அது சக பணியாளரோ அல்லது பொதுமக்களிடத்தோ) மௌனம் காத்துவருவது வெளிப்படை.  இராணுவக் குற்றம் என்பது ஒரு அனுமதிக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. அவர்களுக்கென்று தனி விசாரணை முறை, தனி நீதிமன்றம். பாதிக்கப்பட்டவர் அக்குற்றங்களை வெளிக்கொண்டுவருவதில் தொடங்கி நீதிக்காக போராடுவது வரை அவர் எதிர்கொள்ளும் இன்னல்கள் சொல்லில் அடங்காது. பல வேளைகளில் அது தற்கொலையிலேயே முடிகிறது. ’இப்படிப்பட்ட படைவீரர்கள் பெண்களுக்குத் துணை நிற்பதா’ அத்தனை பலவீனமானவர்களா, முட்டாள்களா பெண்கள்.

(பெண்கள் வில்லன்கள்)

தெரிந்தோ தெரியாமலோ இவ்வளிம்பரம் ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தை அளிக்கிறது. ஆம், படை வீரர்கள் தங்கள் வீரத்தை பொதுமக்களிடத்து மட்டுமே காட்டுவார்கள். அதேபோல் இவர்கள் பொதுமக்களில் இருக்கும் ‘ஆண்களை’ அழைக்கிறார்கள். அஸ்ஸாம், ஜார்கண்ட், தண்டகாரண்யம் போன்ற பகுதிகளில் முதலாளிகளுக்கு நிலத்தைப் பிடுங்கிக் கொடுக்கும் மாபெரும் பணியில் ஈடுபடுபடுவதற்காக இராணுவ வீரகள் குவிக்கப்பட்டுவிட்டதால், பெண்களுக்கு பாதுகாப்பளிக்க, துணை நிற்க பொதுமக்களில் இருக்கும் ‘படை வீரர்களே’ எஞ்சியிருக்கிறார்கள் என்ன செய்வது.

பெண்களுக்கு துணை நிற்பது என்றால் என்ன? முதலில் பெண்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளை அதிகாரப்பூர்வமாக, சட்டபூர்வமாக பெற்று தருவதற்கு உழைப்பது, பெண் எனும் கருத்தியலை மாற்றுவதற்கான முயற்சிகளை எடுப்பது, பெண்ணை மதியுங்கள் என்று முழக்கமிடுவதற்கு பதில் பெண்களுக்கான உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்று நீளும். முதல் சொன்ன அதிகாரப்பூர்வ மீட்பு என்பது ‘அரசிடம்’ இருந்து தொடங்க வேண்டும். முதலில் இவர்கள் 33% இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற சொல்லி பாராளுமன்றவாதிகளை நோக்கி குரல் எழுப்பலாம். AFSPA வுக்கெதிராக கடந்த 12 வருடங்களாக உண்னாவிரதம் இருக்கும் இரோம் சர்மிளா மீது தற்கொலை வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து, கைது செய்து உளைச்சல் தரும் அரசுக்கெதிராக ஒன்று கூடுவோம் என்று குரல் எழுப்பலாம். சாதி வெறி பிடித்து கவுரவக் கொலை என்ற பெயரில் பெண்களை எரித்துக் கொல்லும், அடித்துக் கொல்லும் செயல்களுக்கெதிராக ஒன்று திரள்வது, கப் பஞ்சாயத்து, கௌரவக் கொலை, பெண் சிசுக் கொலை, பெண் இனப்படுகொலை, குழந்தைத் திருமணம் (ஷரியத் சட்டம் உட்பட) இவைகளுக்கெதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவது, இவைகளை தடுக்க அரசிடம் செயல்திட்டத்தைக் கோருவது, உழைக்கும் மகளிர் குறைந்த கூலிக்கு சுரண்டப்படுவதை, பெண்களின் இரட்டை உழைப்பைக் களைதல் என்று பெண்களுக்காக துணை நிற்க எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது. இவையெல்லாம் அரசுக்கெதிராக களம் இறங்க வேண்டிய பிரச்சனை, ஜில்லெட்டும், அவர்கள் அழைக்கும் ‘படை வீரர்களும்’ இதற்கு தயாராக இருப்பார்களா?

பெண்களுக்கு துணை நிற்க ஆண்களை அழைப்பது சரி, பெண்களைக் கொடுமைபடுத்தும், வரதட்சனைக் கேட்டு கொலை செய்யும், பாலியல் தொழிலில் தள்ளிப் பிழைக்கும் தரகுப் பெண்கள், பெண்களுக்கெதிரான குற்றங்களைப் பதிவு செய்ய பெண்கள் காவல்துறையை அனுகினால் அங்கு ஆணாதிக்க கொச்சை சொற்களை உமிழ்ந்து அலைகழிக்கும் பெண்கள் இவர்களுக்கெதிராக, அல்லது இவர்களிடம் மாற்றத்தைக் கோர எவருக்கு அழைப்பு விடுப்பர்?

,

குறைந்தபட்சம் சித்திரகாடா சிங், மலாய்க்கா அரோரா ஆகிய ‘சதை விற்பனையாளர்களை’ முன் நிறுத்தி முதலாளிக் கண்ணீர் வடிப்பதையாவது நிறுத்திக்கொள்ள முடியுமா ஜில்லட் ’வீரர்களே’….

எங்களுக்கு பயில்வான்களோ, படைவீரர்களோ தேவையில்லை கனவான்களே, நண்பர்கள் போதும். உங்கள் ‘புஜ பலத்தைக் காட்ட’ எங்களை பலவீனப் பிராணிகள் ஆக்காதீர்…ஆண்களை அடியாட்களாக்காதீர் (gym boys!!)…

பெண்கள் ஆடுகளும் அல்லர், ஆண்கள் மேய்ப்பரும் அல்லர்….

 

Related Links:

http://facttruth.wordpress.com/2010/05/28/victimization-of-women-officers-in-indian-army/

http://www.huffingtonpost.com/2012/12/27/india-gang-rape-suicide_n_2370859.html

http://indianmilitarynews.wordpress.com/tag/sexual-harassment/

http://www.firstpost.com/india/code-of-injustice-silencing-sexual-assaults-in-the-military-660748.html

http://www.ndtv.com/article/cities/court-martialled-female-iaf-officer-commits-suicide-132943

http://syaanand.blogspot.in/2012/07/islam-act-matter.html

http://www.vinavu.com/2011/04/04/sharia-talaq/

தூத்துக்குடி கடற்கரையில் பெண்கள் தின நிகழ்ச்சி

thooththukkudi

தூத்துக்குடி கடற்கரையில்

17.3.2013

பெண்களுக்கான ஆண்கள் நிகழ்ச்சி என்ற பெயரில், தூத்துக்குடி ராஜா சில்க்ஸ் நிறுவனம் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. தமிழக முதலமைச்சர் அறிவித்திருக்கும் 13 அம்ச திட்டத்தை ஆதரிப்பது, பெண்களுக்கு பாதுகாப்பை உறுதிபடுத்திட உறுதிமொழி எடுக்கவும், கையெழுத்து பிரச்சாரம் செய்திடவும் ஆண்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

பேச்சு சுதந்திரத்தை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர் இந்த நிகழ்வை ஏற்றுக்கொண்டேன்.

வழக்கமாக மூடிய அறையில், ஓரளவு ஒத்த சித்தனையோ அல்லது மாற்று தேடலோ உள்ள கூட்டத்தினர் மத்த்யில், கல்லூரி மாணவர் மத்தியில் உரையாற்றி இருக்கும் எனக்கு ஒரு திறந்தவெளியில், கடற்கரை ஓரத்தில் பொது மக்கள் மத்தியில் உரையாடியது ஒரு மாறுபட்ட அனுபவம். பொது புத்தியில் அத்தனை ஆழமாக ஊறிப்போயிருக்கும் மக்களிடையே நான் பேசப்போவது கிரக்கமும், லத்தீனும் ஆகிவிடக் கூடாது எனும் ஒரு எச்சரிக்கை மணி அடித்துக் கொண்டிருந்தது. மைய நிகழ்ச்சி தொடங்கும் முன் குழந்தைகளை உற்சாகப்படுத்தவும், கடற்கரைக்கு வந்திருந்த மக்களை நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு ஈர்க்கும் வகையிலும் சில விளையாட்டு நிகழ்ச்சிகளை அறிவித்தார்கள்.

உற்சாகத்துடன் குழந்தைகள் மேடை ஏறி தங்களுக்கு விருப்பமான பாடல்களைப் பாடினார்கள், சில குழந்தைகள் தமிழ் அறப் பாடல்களைப் பாடினார்கள். குழந்தைகளின் இந்த இனிமைக் குரலில் கடலும் தன் இரைச்சலை குறைத்துக் கொண்டது போல் இருந்தது. குழந்தைகளின் குறும்பு மனதை ஆட்கொண்ட அதேவேளை, திறமை எனும் பெயரில் ‘சினிமாப் பாடல்களை’ப் பாடியபோது மனம் பதைபதைத்தது.

என்னுடைய பேச்சு பின் வருமாறு:

“எல்லோருக்கும் வணக்கம். பெண்களுக்கான ஆண்கள் நிகழ்ச்சி எனும் பெயரில் பெண்களுக்கு பாதுகாப்பை வலியுறுத்தி, தாங்கள் அதை உறுதிபடுத்துவோம் என்று உறுதி மொழி ஏற்கும் வகையில் ராஜா சில்க்ஸ் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. பாராட்டுக்குறியது.

மேடை ஏறும் முன் என்னை “பாசிடிவ்வாக பேசுங்கள்” என்று சொல்லி அனுப்பினார்கள். அதுதான் எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. என்னுடைய குறிக்கோள் மக்களுக்கு அறிவூட்டுவது, அவ்வறிவு பாசிடிவ்வா, நெகட்டிவ்வா என்பதை பேசிய பின்னர் நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.  ஏனென்றால் சுற்றிலும் அச்சுறுத்தும் வகையிலான மனநிலையைக் காணும் போது நான் எங்கிருந்து பாசிடிவ்வாக தொடங்குவது என்று எனக்குத் தெரியவில்லை.

இந்த நிகழ்ச்சியையே எடுத்துக் கொள்வோம். நாளுக்கு நாள் பெண்கள் வன்கொடுமை அதிகரித்து வருகிறது, உங்கள் வீட்டுப் பெண்களை தைரியமாக வெளியில் அனுப்ப இயலவில்லை எனும் நிலையிருந்தும், அதை மாற்றுவதற்கான ஒரு முயற்சி, அல்லது ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிக்குகூட சில ‘பொழுது போக்கு’ விளையாட்டுகள் மூலமே உங்களை ஈர்க்க முடிகிறது. விளையாட்டு, மேஜிக் ஷோ என்று அறிவித்து கூப்பிட்ட பின்னரே இங்கு கூட்டம் வந்துள்ளது. இந்த மனநிலையை நாம் எப்படி புரிந்து கொள்வது சொல்லுங்கள்.

அதேபோல் குழந்தைகள் பாடல்கள் பாடினர். சில குழந்திகள் ‘ரைம்ஸ்’ பாடினர். மகிழ்ச்சி. ஒன்றிரண்டு குழந்தைகள் பாடிய சினிமா பாடல் எனக்கு மிகவும் வருத்தத்தை அளித்தது. “வேணா மச்சான் வேணா இந்த பொண்ணுங்க காதலு” எனும் அந்த பாடல் வரிகளின் பொருள் கூட தெரியாமல் அந்த குழந்தைகள் அதைப் பாடிச் சென்றது. அதிலும் குறிப்பாக, ஒரு பெண் குழந்தை டவுசர் அவுருண்டா, ஃபிகரு வேணாண்டா என்று தன்னை அறியாமல் பாடுகிறது.

(அந்த தத்துவப் பாடல்

” வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாட்ட‌ரு
கடல போல காதல் ஒரு சால்ட் வாட்ட‌ரு
அது கொஞ்சம் கரிக்கும் போதே நீ தூக்கி போட்டுடு…

மம்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்ச்ச‌ர் இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா டவுசர் அவுருண்டா…
மம்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்ச்ச‌ர் இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா டவுசர் அவுருண்டா…
கண்ண கலங்க வைக்கும் ஃபிகரு வேணான்டா…
நமக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நண்பன் போதுண்டா…”)

அதாவது ஃபிகரு எனும் அந்தச் சொல் பெண்ணினத்தை இழிவுபடுத்துகிறது என்று தெரியாமல் பாடுகிறது, அதைக் கண்டு பெற்றோர்கள் மகிழ்கின்றனர். பொது புத்தி அப்படித்தான் பழக்கப்பட்டிருக்கிறது. பெற்றோர்களை நான் குறை சொல்வதாகவோ, பொது புத்தி என்று சொல்வதால் எனக்கேதோ விசேச புத்தி இருப்பதாகவோ புரிந்து கொள்ளக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். பொது புத்தி என்றால் நாம் ஒரு குறிப்பிட்ட வகையான சிந்தனைப் போக்கிற்கு பழக்கப்பட்டுவிட்டோம் என்று பொருள். கேள்வி ஏதுமின்றி கண்மூடித்தனமாக அடிபணியும், உள்வாங்கிக் கொள்ளும் ஒரு புத்தி. அது ஒரு பழக்கம். உ.ம்: குழந்தைகளை A to Z நேரடியாக சொல்லச் சொல்லும் போது அவர்கள் வேகமாக சொன்னார்கள், ஆனால் அதை தலைகீழாகச் சொல்லச் சொன்னபோது தடுமாறினர்கள். காரணம் என்ன? பழக்கம், ஒரு குறிப்பிட்ட முறையில் பழக்கம், பயிற்சி அவ்வளவே. நம் மூளையும் அப்படித்தான் செயல்படுகிறது. அதுபோன்ற ஒரு சில உதாரணங்களை உங்களுக்கு சுட்டிக் காட்டவே நான் இன்று இங்கு வந்துள்ளேன்.

ஆண் பெண் பேதம் முதலில் நம் வீட்டிலிருந்தே தொடங்குகிறது, அது குழந்தைப் பருவத்திலேயே விதைக்கப்படுகிறது. உ.ம்: ஆண் குழந்தைக்கு விளையாட, மெக்கானிக்கல் பொம்மைகளையும், பெண் குழந்தைகளுக்கு சொப்பு, பார்பி போன்ற பொம்மைகளையும் நாம் வாங்கிக் கொடுக்கிறோம். ஏன்? சமைப்பது, பொம்மைகளுக்கு அலங்காரம் செய்வது போன்ற விளையாட்டுகளைத்தான் பெண் குழந்தைகள் விரும்புகிறது என்றால் ஏன்? சிந்திக்க வேண்டும்.

அதேபோல் “பொம்பளையா நடந்துக்க”, “ஆம்பிளையா நடந்துக்க” போன்ற வசனங்கள். திரைப்படங்களில் கூட ஒரு ‘தாதா பெண்’ என்றால் “ஹே…. நான் பாக்கத்தாண்டா பொம்பள… நிஜத்துல ஆம்பளை” என்று கர்ஜிப்பார். ஏனென்றால் ஆணாக இருப்பது அத்தனை உயர்வானது, வீரம் நிறைந்தது எனும் புரிதல். அதேபோல் ஒரு ஆண் “ஹே…. நான் பாக்கத்தாண்டா ஆம்பிளை….. நிஜத்துல பொம்பள…” என்று கர்ஜிப்பாரா. அப்படி கர்ஜித்தால் நாம் சிரித்துவிடுவோம் இல்லையா? ஏனென்றால் பெண்ணாக இருத்தல் என்பது அத்தனை கேவலமானது? ஏன் அப்படி?

இந்த நிகழ்ச்சியில் என் பெயருக்கு முன்னர் போடப்பட்டிருக்கும் ஒரு சொல் கூட ஆண் பெண் பாகுபாட்டிற்கு ஒரு உதாரணம் தான். ‘திருமதி. கொற்றவை’ என்று போட்டிருக்கிறார்கள். ஆனால் ஆணுக்கு எப்போதும் ‘திரு.’ மட்டுமே, பெண்ணுக்கு மட்டும் திருமணம் முடிந்தவுடன் திருமதி சேர்க்கப்படும். ஏன்? பெண்கள் தங்கள் பெயருக்கு பின்னால் தந்தையின் பெயர் அல்லது கணவன் பெயரை போட்டுக் கொள்கிறார்கள் (போட வேண்டும் என்ற விதி) எந்த ஒரு ஆணாவது தனது பெயருக்குப் பின்னால் ஒரு பெண்ணின் பெயரைப் போட்டுக் கொள்கிறாரா? எனக்கு திருமணமாகிவிட்டது என்று சொல்லிக் கொள்வதில் ஒரு தயக்கமும் இல்லை. ஆனால் அந்த அடையாளப்படுத்துதல் ஏன் பெண்ணுக்கு மட்டும் வலியுறுத்தப்படுகிறது. சிந்திக்கவும்.

ஆண் பெண் பாகுபாடு வளர, இடைவெளி பெருகிட ஊடகங்கள் ஒரு பெரும் பங்கு வகிக்கிறது. முதலாளிகள் உருவாக்கும் பண்டங்கள் மீண்டும் மீண்டும் ஆண், பெண் அடையாளங்களுக்கு விதிகள் வகுத்து, நீ ஆண், நீ பெண் என்று அழுத்தம் கொடுத்துக் கொடுத்து பெண்களை மட்டம் தட்டிக் கொண்டே இருக்கிறது.  ஒரு பெண்ணுக்கு ’இடுப்பு, தொடை, மார்பு, நீளமான கூந்தல்’ இவைகள் அழகு என்று தீர்மானிக்கும் அதிகாரத்தை அவர்களுக்கு கொடுத்தது யார். ஒரு புறம் பெண்களை புகழ்வது போல், பெண்கள் மிது அக்கறை உள்ளது போல் ஒரு நாடகம், மறுபுறம் பெண்களைக் கேவலப்படுத்துவது.

இத்தகைய சித்திரிப்புகளை, பாலியல் பாகுபாட்டு அடையாளவாதங்களை சுட்டிக் காட்டுவது, விழுப்புணர்வை ஏற்படுத்துவது இவையே மாசெஸ் அமைப்பின் குறிக்கோள்.  உ.ம்: உங்களுக்கெல்லாம் மிகவும் பிடித்த ஒரு நடிகர் நடித்த விளம்பரம். இமாமி ஃபேர் & ஹாண்ட்சம் க்ரீம் ஃபார் மென் எனும் விளம்பரத்தில் சூர்யா சொல்வது ‘பெண்மையோடு இருப்பது அவமானத்திற்குரியது’ என்பதாகும். அதில் அவரது தோற்றத்தை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். அதற்கு ‘குறியீடு’ என்று பெயர். அவர் பெரிய மிசையோடு வருவார், ஏன் அவர் சாதாரண மீசையோடோ அல்லது மிசை இன்றியோ வரவில்லை? ஏனென்றால் மீசை என்பது ‘ஆண்மைச் சின்னம்’ பெரிய மிசை ‘பெரிய ஆண்மை’! அதேபோல் பெண்களுக்கான முகப்பூச்சை பூசுபவர் ‘பயில்வான்’ அதுவும் ஒரு ஆண்மைச் சின்னம். பெண்களுக்கு அடையாள விதிகளை வகுத்து வந்தக் கூட்டம் இப்போது ஆண்களுக்கும் அழகு, சிக்ஸ் பேக்ஸ் என்று விதிகளை வகுக்கிறது. ஆண்கள் பாவம்.

பெண்களுக்கான முகப்பூச்சை போட்டால், பெண்மை மேலோங்கும், அது எத்தனை அவமானகரமானது என்றொரு கேள்வியை ஏழுப்புகின்றனர். நிச்சயம் இவர்கள் பெண் வயிற்றிலிருந்துதானே பிறந்து வந்திருப்பார்கள்? ‘ஆண்’ முகப்பூச்சைப் பூசிய பின்னர், ஐந்தாறு பெண்கள் பயில்வானைச் சுற்றி நடனமாடுவார்கள். எத்தனை அசிங்கமான ஒரு கற்பனை, சிந்தனை? இதை நாம் கவனித்திருக்கிறோமா?

பொதுவெளியில் ஒரு நல்ல பெயரை ஏற்படுத்திக் கொள்ளும் இத்தகைய நடிகர்கள் எப்படி இதுபோன்ற விளம்பரத்தில் நடிக்கிறார்கள். அதேபோல், பொது நலனில் ‘அக்கறை’ காட்டும் இவர்கள் ஏன் பெண்களை அரைகுறை ஆடையோடு நடனமாட வைத்து பிழைக்கிறார்கள்?

இந்த ஊர் மீனவர்கள் பெரும்பகுதியாக வாழும் ஊர். சமீபத்தில் இலங்கை இராணுவம் மீனவர்களுக்கு அளித்து வரும் துன்பங்கள் நிச்சயம் நம்மை கவலையில் ஆழ்த்துகிறது. அதேபோல் தமிழ் இனப் போராட்டம், தமிழீழப் போராட்டம் ஆகியவை. அதற்கு ஆதரவளிப்பது அவசியமே. ஆனால் அதற்கு ஆதரவளிக்கும் நடிகர்கள், சினிமாக்காரர்கள் செய்வது என்ன? சிந்தித்திருக்கிறோமா? நடிகர் விஜய், மீனர்வர்களுக்கு இலவச வலை கொடுத்து தன் கடமையை முடித்துக் கொண்ட கையோடு, ஒரு கதாநாயகிக்கு அரைகுறை உடை கொடுத்து ஆடக் கிளம்பிவிடுவார். மற்றவர்களும் இதேபோல், பெயருக்கு உண்ணாவிரதம், ஆதரவு என்று தெரிவித்துவிட்டு தங்கள் படங்களில் பெண்கள் விசயத்தில் சிறிதளவும் பண்பின்றி நடந்து கொள்கின்றனர்.

அந்த நடிகைகளும் அதற்கு உடன்படத்தானே செய்கிறார்கள் என்று நீங்கள் சொல்லலாம். உண்மைதான், பணம் ஆண் பெண் பேதமறியாது. அதேபோல், ஒரு குறிப்பிட்ட மதத்தினரை தவறாக சித்தரித்துவிட்டால் எத்தனை கொந்தளிப்பு நிகழ்கிறது. பெண்களை இத்தனை கேவலமாக சித்திரிப்பதற்கெதிராக பெண்களாகிய நாம் கொத்தித்தெழுகிறோமா? இல்லையே?

இதுபோன்ற இழிவான சித்தரிப்புகளுக்கெதிராகவும் நாம் கொத்தெழ வேண்டும். இன்று உறுதிமொழி எடுக்க வந்திருக்கும் இளைஞர்கள் அதற்காகவும் உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும். சிந்தனையில் மாற்றமின்றி செயலில் வராது. பெண்களை இழிவுபடுத்தும் இதுபோன்ற கருத்துக்களை மாற்றாமல் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது.

இன்றைய நிகழ்ச்சியில் முதலமைச்சர் அறிவித்திருக்கும் 13 அம்ச திட்டத்தை ஆதரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் எனக்கு சில மாற்று கருத்தும் விமர்சனமும் உண்டு. ஆனால் மற்ற மாநிலங்கள் ஏதும் அறிவிக்காத முன்னர், முதலமைச்சர் அவர்கள் முன் கை எடுத்திருப்பது பாராட்டுக்குறியது. அதற்கு நாம் நன்றி தெரிவிக்கிறோம். ஆனால் அதில் உள்ள ஒன்றிரண்டு பரிந்துரைகளில் எனக்கு மாற்று கருத்துள்ளது. மரண தண்டனை மற்றும் ஆண்மை நீக்கம். இந்த இரண்டுமே பயனற்றது. மேலும் இது மற்றவரைக் குற்றவாளியாக்கி நாம் தப்பித்துக் கொள்ளவே உதவும். ஏனென்றால் இந்த சமூகத்தில் நடக்கும் அத்தனைக் குற்றங்களிலும் அனைவருக்கும் பங்குண்டு. நாமனைவரும் ஒவ்வொரு பங்கு வகிக்கிறோம். மேற்சொன்ன அந்த ‘பாலியல் சுரண்டல்களைக்’ கண்டு கொள்ளாமல் இருப்பது கூட ஒரு குற்றமே.

எந்த காரணத்தாலும் நாம் மரண தண்டனையை ஆதரிக்க முடியாது. ஏனென்றால் அது தீர்வல்ல. அது குற்றத்தை தடுக்காது. உ.ம் புதிதில்லி சம்பவம் நடந்தவுடன் பாலியல் வல்லுறவு குற்றத்திற்கு மரண தண்டனை என்று முழங்கினார்கள். நேற்று ஒரு ஸ்விஸ் தம்பதிகள் சுற்றுலா சென்றபோது, அப்பெண் குழு வல்லுறவுக்கு உள்ளானார். வல்லுறவு செய்தவருக்கு மரண தண்டனை விவாதம் குறித்து தெரியாதா? அதையும் மீறி அவர்களை அந்த குற்றத்தை செய்விப்பது எது என்று நாம் கேள்வி எழுப்ப வேண்டும். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் எவ்வித மனநிலையிலிருந்து அதைச் செய்கிறார்கள் என்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். உளவியல் ரீதியான அனுகுமுறை அவசியம்.

சுற்றிலும் பெண் உடலை கவர்ச்சியாக காட்டி, வெறி ஏற்றி ஒரு கூட்டம் வேலை பார்த்துக் கொண்டிருக்க, ஒரு சிலரை மட்டும் குற்றவாளியாக்குவது சரியல்ல.

அதேபோல் ஆண்மை நீக்கம், இது நிச்சயம் ஆண்களைக் கேவலப்படுத்தும் செயல். ஆம் நீ ஆண் என்று அழுத்தம் கொடுத்து மீண்டும் ஆண்மைச் சிந்தனையை தூக்கிப் பிடிக்கும் செயல். இதனால் பகைதான் வளருமே ஒழிய மாற்றம் ஏற்படாது.

(rel. interview http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=3&contentid=875a4b56-d2c0-45b5-80ea-1f0112df57ff)

ஆண்மை பெண்மை அடையாளங்கள் எப்படி உருவானது என்று புரிந்து கொள்வது அவசியமாகிறது. ஆண் பெண் என்பது உயிரியல் ரீதியான அடையாளம், ஆனால் ஆண்மை பெண்மை என்பது உயிரியல் ரீதியானதல்ல. அது சமூகத்தால் உருவாக்கப்பட்டது. அப்படியே வேறுபாடுகள் இருந்தாலும், அது வேறுபாடே ஒழிய அதில் ஒன்று உயர்வு, ஒன்று தாழ்வு என்று கருதுவதற்கு இடமில்லை. அது அது அதன் தன்மையில் இருக்கிறது. அந்த வேறுபாட்டை நாம் மதிக்க வேண்டுமே ஒழிய, அதைவைத்து ஒருவரை பலவீனமானவர் என்று சொல்லும் அதிகாரம் எவருக்கும் கிடையாது. அப்படியே பலவீனமானவராகப் பெண் இருந்தாலும், அவரை ஒடுக்கும் அதிகாரம் எவருக்குமில்லை.

பேசுவதற்கு நிறைய இருக்கிறது. நேரத்தோடு முடித்துக் கொள்வது நலம். நம் மூளைகள் எப்படி ஒரு பொதுச் சிந்தனைக்கு பழக்கப்படுகிறது என்பதை ஒரு சில உதாரணங்கள் மூலம் உங்களுக்குச் சுட்டிக் காட்டினேன். பெண் பற்றிய கருத்துக்கள் மாறாமல் பெண்ணுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது, இருந்தாலும் இப்படி ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்து, ஆண்கள் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த உறுதி மொழி எடுத்தல், கையெழுத்திடுதல் போன்ற முயற்சி பாராட்டுக்குறியது. இதில் கலந்து கொள்ள வந்திருக்கும் அத்தனை இளைஞர்களையும் நான் பாராட்டுகிறேன்.

பகுத்தாய்ந்து செயல்படுதல் பயனளிக்கும். வாய்ப்பளித்தமைக்கு நன்றி.

Stop Sex-drugging

I am ashamed of those men and women who wish to claim themselves as ‘goodies’ by pointing out fingers at the ‘rapists’ and shouting their heart out demanding capital punishment on them or seeking action against Rapists. Though action is necessary, what actions and protests have they taken against the ‘male chauvinistic exploiters’ who objectify women as sexual objects in their films, shows, magazines, who made them cheers leaders etc and propagate women is all about ‘flesh’ .

Are they ready to ‘occupy theatres, media houses’ and ask them to ‘STOP SEXUAL EXPLOITATION’, ‘STOP SEDUCING INNOCENT MEN’ for their profits?

Are they ready to do something to rehabilitate those men who have been ‘sexually drugged’ with porns, item songs, ‘A’ certificate films and all male chauvinistic piggy ideologies?

Are they ready to talk to those ‘rapists’ and research on what ‘induces’ them to act so cruel and what could be done to prevent ‘sex-drugging’ of minds of men.

How many of those men respect the ‘labor’ of women at house work. How many of those men share house chore work? How many of those men respect women for what she is? How many of those men spare decision making power to woman in her own life?
How many of those men would not have ‘eve teased’, used words like ‘figure, chick, babe, hot machi’ etc., would not have tried to ‘take advantage or exploit’ women in the name of ‘love’.

Law and Punishment can hardly bring about change, take on the ‘REAL MAFIAS and REAL EXPLOITORS – THE IDEOLOGICAL RAPISTS OF WOMANHOOD’.

‘OCCUPY THEATRES & MEDIA HOUSES THAT SEXUALLY EXPLOITS WOMEN, BURN THE PORN MAGAZINES – SAVE MEN, WOMEN, QUEER PEOPLE AND CHILDREN FROM BEING SEXUALLY DRUGGED AND BEING MADE A ‘RAPIST’ AND A VICTIM ‘.

in Tamil:

வன்புனர்வாளர்களை நோக்கி விரல்களைச் சுட்டிக் காட்டி தங்களை ‘நல்லவர்களாக’ முன்வைத்து தூக்கு தண்டனை அல்லது கடும் நடவடிக்கைகள் கோரும் அந்த ‘நல்ல’ ஆண்களையும் பெண்களையும் கண்டு நான் வெட்கமுருகிறேன். நடவடிக்கை வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, ஆனால் இவர்கள் திரைப்படங்கள், நிகழ்ச்சிகள், விளம்ப்ரங்கள் போன்றவற்றில் பெண்களை வெறும் பாலியல் பண்டமாக, கவர்ச்சிப் பொருளாகப் பயன்படுத்தும் ’ஆணாதிக்க சுரண்டல்வாதிகளுக்கு’ எதிராக இதுவரை என்ன நடவடிக்கை எடுத்திருப்பர்கள், போராட்டம் நடத்தியிருப்பர்கள். பெண்களை ‘சியர் லீடராக’, பாலியல் பண்டமாக பயன்படுத்தி பெண் என்றால் வெறும் ‘சதை’ தான் என்று சொல்லும் அந்த ஆணாதிக்கவாதிகளுக்கெதிராக இதுவரை என்ன செய்திருக்கிறார்கள்?

தங்கள் இலாப நோக்கத்திற்காக ‘பாலியல் சுரண்டலை நிறுத்து’, ‘ஆண்களை பாலியல் ரீதியாக மூளைச் சலவை செய்வதை, காம வெறி ஏற்றுவதை நிறுத்து’ என்று சொல்லி ‘திரையரங்குகளை, ஊடக அலுவலகங்களை’ முற்றுகையிட அந்த ‘நல்லவர்கள்’ தயாரா?

போர்னோக்ராபி, குத்துப் பாடல்கள், ‘ஏ’ சான்றிதழ் திரைப்படங்கள் போன்ற ஆணாதிக்க பன்றித்தனமான கருத்தியல்களை பயன்படுத்தி ‘பாலியல் போதை’ ஏற்றப்பட்ட அப்பாவி ஆணினத்தை மீட்டெடுக்க, காப்பாற்ற ஏதாவது செய்வார்களா?

‘வன்புனர்வாளர்களிடம்’ பேசி, ஆய்வு செய்து, எது அவர்களை அத்தகைய கொடூரச் செயல்களைச் செய்யத் தூண்டுகிறது என்று ஆய்வு செய்து ‘பாலியல் போதை’யிலிருந்து ஆணினத்தை மீட்க ஏதாவது செய்வார்களா?

இவர்களில் எத்தனை ஆன்கள் பெண்ணின் ‘உழைப்பை’ வீட்டில் மதிக்கிறார்கள், எத்தனை ஆண்கள் வீட்டு வேலையை பகிர்ந்து கொள்கிறார்கள், பெண்ணை அவளின் ஆளுமைக்காக மதிக்கிறார்கள், பெண்ணுக்கு அவள் வாழ்வின் மீது முடிவெடுக்கும் உரிமையை அனுமதிக்கிறார்கள்?

இவர்களில் எத்தனை ஆண்கள் பெண்களை கிண்டல் செய்யாமல் இருந்திருப்பார்கள்?, ’ஃபிகரு’, ‘சிக், பேப், ஹாட்டு மச்சி’ போன்ற சொற்களைப் பயன்படுத்தாமல் இருந்திருப்பார்கள், காதல் என்ற பெயரில் பெண்ணை ஏமாற்றாமல் இருந்திருப்பார்கள்?

சட்டங்களும், தண்டனைகளும் அரிதாகவே மாற்றங்களைக் கொண்டுவர இயலும், ’உண்மையான மாஃபியாக்கள் மற்றும் உண்மையான சுரண்டல்வாதிகள் – பெண் மீது கருத்தியல் வன்புணர்வு செய்யும் வண்புணர்வாளர்களுக்கெதிராக போராடுங்கள்’

‘பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டிப் பிழைக்கும் திரையரங்குகள் (அத்தகையப் படங்களை வெளியிடும்), ஊடக  நிறுவனங்களை முற்றுகையிடுங்கள், ஆபாச இதழ்கள், புத்தகங்களை தீயிலிட்டு கொளுத்துங்கள் – ஆண், பெண், மாற்றுப் பாலினம், குழந்தைகள் ஆகியோர் பாலியல் போதை ஏற்றப்பட்டு, சுரண்டப்பட்டு ‘வன்புனர்வாளராகவோ, பாதிக்கப்பட்டவராகவோ’ மாற்றப்படுவதிலிருந்து காப்பாற்றுங்கள்.

 

வோடஃபோன் விளம்பரத்தின் சிறுவர் மீதான பாலியல் சுரண்டல்

வக்கிரமும், பொறுப்பின்மையுமே பணம் செய்வதற்கான, விளம்பரத்திற்கான தன்மை என்று சமீபத்திய விளம்பரங்கள் நமக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் 11 அல்லது 12 வயது சிறுவர்களை வைத்து வெளிவந்திருக்கும் வோடஃபோனின் புதிய விளம்பர ’கரு’ (theme) மிகவும் அதிர்ச்சியூட்டக்கூடியதாக இருக்கிறது.

‘இணைப்பு – தொடர்ச்சியாக, தொல்லையில்லாமல்’, ’உடனடி தொடர்புகள்’ என்கிற தலைப்புகளில் விளம்பரங்கள் வருகின்றன. 11 அல்லது 12 வயதில் இருக்கும் குழந்தைகள் இருவரை கதாநாயகன், கதாநாயகி என்ற வகையில் சித்தரித்துள்ளனர். ஒரு விளம்பரத்தில் அந்த இரு ‘சிறுவர்களும்’ ‘தனிமையில்’ உரையாடுவதற்கு ஏதுவாக ஒரு நாய் காவல் காக்கிறது.

இரண்டாவது விளம்பரத்தில் பொம்மை காரை வைத்து விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவனை நாய் ஒன்று எழுப்பி வெளியே அழைத்து வருகிறது. சிறுமி மிதிவண்டி ஓட்டியபடி ஓரக் கண்ணால் ‘நாயகனை’ பார்த்தபடி, காதல் புன்னகை சிந்தியபடி செல்கிறாள்

மூன்றாவது விளம்பரம்: ’ஆண்’ ‘நாயகன்’ விளையாடுகிறார், ‘பெண்’ ‘நாயகி’ ஊஞ்சலில் ஆடியபடி படிக்கிறார். அவருடைய ‘ஸ்கார்ஃபை’ உருவி ஓடுகிறது நாய். அதை எடுத்துக் கொடுத்து அந்த ஆண் சிறுவன் உடனடி தொடர்பை ஏற்படுத்திக் கொள்கிறார்.

இவ்வளவு வக்கிரமாக ஒருவர் சிந்திக்க முடியுமா? குடும்பம், கற்பு என்று புனிதவாதம் பேசும் இந்த மண்ணில் எப்படி இது போன்ற சுரண்டல்கள், சிறுவர்கள் மத்தியில் பாலியல் தொடர்புகளை ஊக்குவித்தல் வகையான சித்தரிப்புகள் கண்டிக்கப்படுவதில்லை.

இந்த விளம்பரத்தில் தங்கள் பிள்ளைகளை ஈடுபடுத்தியுள்ள பெற்றோரின் அறம் எத்தகையது என்கிற கேள்வி எழுந்த வண்ணம் இருக்கிறது. இது போன்ற ‘குடும்பவாதிகள்தான்’ ஒழுக்கவாதம் பேசிக்கொண்டு பணத்திற்காகவும், புகழுக்காகவும் சுயமரியாதையை விற்று பிழைக்கின்றனர். பகுத்தறிவை பயன்படுத்துபவர்களை ‘சமூக விரோதிகள்’ என்கின்றனர்.

இவ்விளம்பரம் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும். தாமதிக்க நேரமில்லை இந்த கோரிக்கையை வலியுறுத்தி Press Council of India, Ministry of Information and Broadcasting, Advertising Council of India, Ministry of Women and Child Development, IBF India விற்கு மென் கடிதம் எழுதயிருக்கிறேன்.

மாசெஸ் அமைப்பின் துவக்க நிகழ்வு மற்றும் இமாமி விளம்பரத்திற்கு எதிரான பிரச்சாரம்

10.3.2012 – மாசெஸ் அமைப்பின் துவக்க நிகழ்வு மற்றும் இமாமி விளம்பரத்திற்கு எதிரான பிரச்ச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பெண் விடுதலை, பெண்ணியம் தொடர்பான பேச்சு, 20 நிமிட காட்சிப்படம், ஓவிய பட்டறை ஆகியவை இடம்பெற்றன. வெவ்வேறு அரசியல் நிலைப்பாடு, தத்துவார்த்த நிலைப்பாடு கொண்டவர்கள் கலந்து கொண்டு ஒரே மேடையில் பேசினார்கள். கருத்தியல் தளம், மனித உரிமை செயல்பாடு, அரசியல் களம், கல்வியியல் தளம் ஆகியவற்றில் இயங்குபவர்கள் கருத்துரையாற்றினர், இதன் மூலம் பெண் விடுதலை சிந்தனையின் பல்வகை பரிமாணங்களை அறிந்து கொள்ள முடிந்தது.

நிகழ்ச்சியில் உரையாற்றியவர்கள்:

தோழர். ப. சிவகாமி (நிறுவனர், சமூக சமத்துவப் படை கட்சி), பேரா. அ. மார்க்ஸ், பேரா. பத்மினி, பேரா. மோனிக, கோ. சுகுமாரன் (மக்கள் உரிமை கூட்டமைப்பு, புதுச்சேரி)

நிகழ்ச்சியில் ஓவியம் வரைந்தவர்கள்:

தோழர்கள் விஸ்வம், ராஜன், வசந்த், ஏழுமலை, ஆனந்த், கிரிஸ்டி, ரோஹினி மணி, விதார்த்தி, மோனிகா, திலிப், சூரஜ், யுகன். கிரன் துளசி என்பவரின் ’பாலுறுப்பு அடையாளம் அழித்த’ புகைப்படம் ஒன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டது.

மாலை 3 மணி அளவில் ஓவியர்கள் இக்சா மையத்திற்கு வந்து ஓவியங்களை வரையத் துவங்கினர். ஆணாதிக்க கருதூன்றியப் பார்வையிலிருந்து  (male gaze) பெண் உடலை மீட்டு ஒரு புதிய பொருள் கொடுக்கூடிய வகையில் ஓவியங்கள் இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த வகையில் ஒவ்வொரு ஓவியமும் பெண்ணின் மறுபக்கத்தை பிரதிபலிக்கும் விதமாக அமைந்திருந்தது. 5.45 மணி அளவில் துவக்க நிகழ்வு தொடங்கியது. கொற்றவை வரவேற்புரையாற்றினார். மாசெஸ் அமைப்பின் செயல் திட்ட முன் வரைவை வெளிட்டு அமைப்பு துவக்கம் பற்றி அதிகார பூர்வ அறிவிப்பை வைக்குமாறு தோழர் ப. சிவகாமி அவர்களை கேட்டுக்கொண்டார் கொற்றவை. சிவகாமி அவர்கள் வெளியிட, பேரா. அ. மார்க்ஸ் அவர்கள் அதை பெற்றுக் கொண்டார். பின்பு பேரா. பத்மினி, பேரா. மோனிகா, கோ. சுகுமாரன் ஆகியோரிடம் செயல் திட்ட பிரதி கொடுக்கப்பட்டது.

கருத்துரை நிகழ்த்துவதற்கு முன் கொற்றவை தயார் செய்திருந்த 20 நிமிட காட்சிப்படம் ஒன்று திரையிடப்பட்டது.  இலக்கியம் தொடங்கி, இன்றைய விளம்பரங்கள், திரைப்பட பாடல்கள் ஆகியவற்றில் நிகழும் பெண் கதாபாத்திர சித்திரங்கள் ஆகியவை தொகுக்கப்பட்டிருந்தன. பெண் விடுதலை, மானுட விடுதலை குறித்து முன்னோடிகள் சொல்லியிருப்பது எனும் பகுதியில் பெரியார், அம்பேதகர் ஆகியோரின் பேச்சுக்கள், இவற்றோடு பெண் எழுத்தாளர்கள், உளவியலாளர்கள், புரட்சியாளர்கள் சிலரது குறிப்புகளும் இணைக்கப்பட்டிருந்தன. இந்த காட்சிப்படத்தின் ஊடாக ஒரு பெண்ணியவாதியாக எனக்குள் (கொற்றவை) நெடுநாள் நெருடிக்கொண்டிருந்த ஒரு கேள்வியும், அதன் இறுதில் கோரிக்கைகள் சிலவும் வைக்கப்பட்டன. உழைக்கும் உடல்களை போற்றும் வகையில் மெரினா கடற்கரையில் வைக்கபட்டிருக்கும் உழைப்பாளர் சிலையில் ஏன் ஒரு பெண் உழைப்பாளி கூட இடம்பெறவில்லை என்பதே அக்கேள்வி. பெண் உழைப்பாளர்களுக்கான சிலை வைக்கப்பட வேண்டும், அது பெண் மட்டுமல்லாமல் ஆணும் பெண்ணும் இனைந்து இருக்கும் சிலையாக இருக்க வேண்டும், மூன்றாம் பாலினத்தவருக்கு வேலை வாய்ப்பில்லை என்பதை வலியுறுத்தும் சிலையும் வைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

அதேபோல் மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் பேசப்படும் அளவுக்கு லுக்சம்பர்கிசம் ஏன் பேசப்படுவதில்லை – மார்ச் 5, 2012 சே குவேரா அளவுக்கு கொண்டாடப்படவேண்டிய ஒரு பெண் ஆளுமை பிறந்து 141 வருடங்கள் முடிவடைகிறது… அவர்தான் ரோசா லுக்சம்பர்க்.

ஆணாதிக்கம் இயற்கை மீது போர் தொடுப்பது போல் இயற்கையின் பிரதியான பெண்ணிடமும் போர் புரிந்தவாரிருக்கிறது, ஆங்காங்கே சில பெண்கள் சீறிக்கொண்டிருப்பது போய், ஒட்டுமொத்த பெண்ணினமும் பொங்கி எழும் காலம் வெகுதொலைவில் இல்லை எனும் முழக்கத்தோடு அந்த காட்சிப் படம் முடிந்தது.

அதைத் தொடர்ந்து:

முதலில் பேசிய பேரா. அ. மார்க்ஸ் அவர்கள் 90களில் நிறப்பிரிகை வெளிவந்து கொண்டிருந்த காலத்தில் பெண்ணியம், மாற்றுச் சிந்தனைகள், அரசியல் குறித்தெல்லாம் நிறைய விவாதங்கள் நடைபெற்றன. வெவ்வேறு அரசியல், கருத்து நிலைப்பாடு கொண்டிருந்தவர்களும் ஒரே மேடையில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தினர். அதைத் தொடர்ந்து நிறைய உரையாடல்கள் நிகழும். புதிய சிந்தனைகளை அறிவதற்கான வாய்ப்பாக அது அமைந்தது. ஆனால் தற்போது அச்சூழல் குறைந்து வருகிறது என்று சொன்னார். மேலும் பெண் உடல், காமம் குறித்து  பெண்கள் எழுதும் போது எத்தகைய எதிர்ப்புகளைப் பெண்கள் சந்திக்க நேர்கிறது என்று சொல்லி, முத்துப்பழனி அவர்களின் நூல் மீது கொண்டுவரப்பட்ட தடை குறித்தும் பேசினார்.

அவரைத் தொடர்ந்து தோழர் ப. சிவகாமி அவர்கள் பேசினார். மூத்த அரசியல் செயல்பாட்டாளராக அரசியல் களத்தில் பெண்களின் பங்களிப்பு குறித்து அவர் பேசினார். கடந்த பத்தாண்டுகளில் பெண்கள் அரசியலில் பங்கு பெறுவதும், அவர்கள் தலைமையில் போராட்டங்கள் நடைபறுவதும் அதிகரித்திருக்கிறது என்றார்.  சுமார் ஒன்றரை லட்சம் பெண்களைத் திரட்டி மாநாடு நடத்தியதை குறிப்பிட்டார். படித்த மேல்தட்டுப் பெண்கள் பெண்ணியம், பெண் விடுதலை சிந்தனை என்பதை ‘பாலியல்’ என்ற வட்டத்திற்குள் மட்டும் சுருக்கி விடாமல், பெண்களை அரசியல் படுத்துவும், ஒடுக்கப்பட்ட சாதியினரின் போராட்டங்களில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்கவும், அவர்களின் விடுதலைக்காக போராடவும் தயாராக இருக்க வேண்டும் என்றார். பெண் உடல் மீதான கருத்தாக்கங்களை மாற்றியமைப்பது என்பது அவசியம், அதற்கு ஆண்களிடத்தில் மாற்றம் கொண்டுவருவது எவ்வளவு முக்கியமோ அதேபோல் பெண்களின் மன நிலையைலும் மாற்றம் வரவேண்டும். பாலியல் சுரண்டல் குறித்து அதிக கோஷங்கள் எழுப்ப்பப்பட்டு வருகிறது. அதுவும் தேவைதான், அதற்கப்பால் பெண்களின் தேவை, உரிமைகளை சட்டபூர்வமாக பெருவதற்கு பெண்கள், பெண்ணியவாதிகள் ஒன்றிணைந்து செயல்படவேண்டும். உதாரணமாக பொது இடங்களில் ஆண்கள் தனியாக உலவுகின்றனர், ஆனால் ஒரு பெண் அப்படி தனியாக நிற்பதோ, சாலையை, சுற்ற வட்டாரத்தை வெறுமனே ரசிப்பதற்கோ சாத்தியமில்லை. அதேபோல் பெண்களின் பெயரில் பாட்டா கோருதல், நிலம் கோருதல், பெண்களுக்கென்று விளையாட்டுத் திடல் வேண்டும் என்று சட்ட ரீதியான கோரிக்கைகளை வைக்கலாம். உடல் ரீதியாக பெண்களைப் பலப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றால். பெண்கள் இன்று அரசியல் வந்துவிட்டல் 33% என்ன 50% சதவிகிதம் கூட அவர்களால் கைப்பற்ற முடியும் என்றார்.

அதைத் தொடர்ந்து கொற்றவை பெண்கள் அரசியல் பங்கு பெருவதில் குடும்பம் எனும் அமைப்பு ஒத்துழைப்பதில்லை, குறிப்பாக உயிர் குறித்த அச்சம் ஆண்களையே அரசியல்களத்தில் தயக்கம் கொள்ளச் செய்கிறது, பெண்களுக்கு அதைவிட மிகுந்த அச்சறுத்தல்கள் இருக்கிறது. ஆனால் அதையும் தாண்டி பெண்கள் செயல்படவேண்டியது அவசியமாகிறது என்றதோடு, ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் பிரச்சனைகளை எடுத்துப் போராடும் அமைப்புகளோடு மாசெஸ் அமைப்பு சேர்ந்து பணியாற்றும் என்பதையும் தெரிவித்துக்கொண்டார்.

அதன் தொடர்ச்சியாக முனைவர் பத்மினி பேசினார். பெண்ணியக் கல்வியின் அவசியம் குறித்தும், அது பள்ளி பாடதிட்டத்திலேயே சேர்க்கப்படவேண்டும் என்பது குறித்தும் பேசுமாறு அவரைக் கேட்டிருந்தேன்.  இலக்கியம் தொடங்கி பெண் உடல் மீது என்ன வகையான பிம்பங்கள் ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது, பெண் ஒடுக்குமுறையில் உற்பத்தி முறை, பொருளாதார முறை ஆகியவற்றின் தொடர்பு ஆகியவற்றை பேசியவர், அதிகார வர்க்கத்திற்கு எதிராக இருக்கக்கூடிய பெண்ணியக் கல்வியை அரசாங்கம் பாடதிட்டத்தில் சேர்க்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது, இருந்தாலும் முயல்வோம். அதைத் தாண்டி இதுபோன்ற முயற்சிகள் மூலம் பெண் உடல் மீதான பிம்பங்களை கலைக்கும் உரையாடல்களை நிகழ்த்தி பெண் எழுத்துக்கான புதிய மொழியை உருவாக்க வேண்டும் என்றார்.

அடுத்ததாக பேரா. மோனிகா பேசினார்.  பாலினம், பாலியல் ஆகியவற்றின் வேறுபாடுகளை சுட்டிக்காட்டியவர், பிம்பம் என்பது எவர் அதை உருவாக்குகிறாரோ அவரின் மனம்படியே இருக்கும் என்றார். அந்தவகையில் ஆணாதிக்கமானது ஒவ்வொருவரின் மனதில் பெண் என்பவள் பாலியல் பண்டம் எனும் பிம்பத்தையும், அவளுக்கான தன்மைகள், கடமைகள் யாவை என்றும் ஏற்றிவைத்திருக்கிறது. அதிகார வர்க்கத்தின் படைப்புகளை ஒவ்வொன்றாக எடுத்து அதை சுற்றி ஒரு உடையால் நிகழும் போது அந்த பிம்பங்கள் எப்படி தோற்றுவிக்கப்படுகின்றன என்பதை எடுத்துரைப்பது எளிதாகிறது என்றார். மேலும் அவர் மாசெஸ் அமைப்பு மூன்று மாதிதிற்கு ஒருமுறை வெளிவரக்கூடிய ஒரு சஞ்சிகையை கொண்டுவர முயலவேண்டும் என்று கூறினார்.

அடுத்ததாக தோழர். கோ. சுகுமாரன் அவர்கள் பேசினார். மனித உரிமை செயல்பாட்டாளரான இவர் காவல் நிலயத்தின் வன்புணர்வு கொடுமைக்கு உள்ளான பத்மினி மற்றும் இதர பெண்கள் வழக்கு விசாரனைகளின் போது எப்படி வேசி என்று முத்திரை குத்தப்படுகின்றனர் என்று சொன்னதோடு, அவ்வழக்குகள் எப்படி எதிர்கொள்ளப்பட்டது என்றும் பேசினார். அத்தோடு அ. மார்க்ஸ் சுட்டிக்காட்டிய இப்போதை உரையாடலுக்கு சாத்தியமற்ற சூழல் குறித்தும், அதனால் கருத்தியல் தளத்தின் பின்னடைவுகள் குறித்தும் பேசினார்.

கொற்றவை நன்றியுறையாற்றி நிகழ்ச்சியை முடித்தார்.

(அன்றைய நிகழ்ச்சியில் பேசுவதற்காக ஒரு நீண்ட உரையை தயார் செய்து வைத்திருந்தேன். நேரம் காரணமாக அதை பேச முடியவில்லை. வேறொரு தளத்தில் அது பதிவு செய்யப்படும்)

Related Links:

http://www.newsalai.com/2012/03/blog-post_8589.html

https://masessaynotosexism.wordpress.com/events/

 

Women’s Day Program – M.A.S.E.S launch