Category Archives: casteist advertisements

திருமணத் தரகு விளம்பரங்களை தடை செய்

 

மதச்சார்பற்ற நாடு, சாதிய பாகுபாடுகளை அனுமதிக்காத நாடு என்றெல்லாம் சொல்லபப்டும் இந்த நாட்டில் தான் ‘கம்யூனிட்டி மேட்ரிமொனி’ என்கிற பெயரில் சாதியை கட்டிக்காக்கும் மிகப் பிரதான வடிவமான சொந்த சாதித் திருமணம் பற்றிய விளம்பரம் எவ்வித எதிர்ப்புமின்றி அனுமதிக்கப்படுகிறது.
ஐயர் மேட்ரிமொனி, ஐயங்கார் மேட்ரிமொனி, கொங்கு வேலாளர் மேட்ரிமொனி, கிரிஸ்டியன் மேட்ரிமொனி, முஸ்லிம் மேட்ரிமொனி என இந்த விளம்பரங்களைக் காணும் போது நெஞ்சம் பதைபதைக்கிறது.

எவ்வளவு வெளிப்படையாக சாதியைப் போற்றும் ஏற்பாட்டை விளம்பரப்படுத்துகிறார்கள். சாதி குறித்த பெருமிதத்தை நாகரீகப் போர்வையில், தனித்துவமான பண்பாடு என்பன போன்ற ஆபத்தான சொல்லாடல்கள் மூலம் சாதியப் பற்றை, சாதிய வெறியை தூண்டும் வேலையை இத்தொழிற்துறை தொடங்கியுள்ளது.

இது சாதியமைப்பை அப்படியே கட்டிக்காக்கும் இந்திய முதலாளித்துவ கயமை என்பதோடு மேலும் பல ஆபத்துகள் இதில் நிறைந்துள்ளன. சொத்தை பாதுகாக்கவும், சாதியைப் பாதுகக்கவும் பெண் உடலானது ஏற்கனவே கடுமையான ஒடுக்குமுறைக்கு உள்ளாகியிருக்கிறது. தனக்கான துணையை தேடும் உரிமை மறுக்கப்படும் நிலை மேலும் இறுக்கமடைகிறது. சாதியப் புனிதம் காப்பதன் பெருமிதத்தை உயர்த்திப் பிடிப்பதன் மூலம் கௌரவக் கொலைகள் அதிகரிப்பதற்கான சூழல் ஊக்குவிக்கப்படுகிறது. காதலர்களுக்கெதிரான கலாச்சாரக் காவலர்களுக்கு சமூக அங்கீகாரம் வழங்கவும் இத்தொழிற்துறை வகை செய்கிறது.

உடனடியாக இதற்கெதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பெரியாரிய இயக்கங்கள், கம்யூனிஸ்ட் இயக்கங்கள், முற்போக்கு சக்திகள் களம் இறங்குவது அவசியமாகிறது.

இதை வெறுமனே இந்துத்துவ சதி, இந்துத்துவ வெறி என்று மட்டும் நாம் அனுக முடியாது. சாதி என்பது உற்பத்தி உறவுகளோடு தொடர்புடையது என்னும் மார்க்சிய சூத்திரத்தை இந்த Manifestations உடன் பொருத்திப் பார்க்க வேண்டும். தனியுடைமை – சொத்து, மூலதனம் இவற்றை தன் சொந்த சாதிக்குள் தக்கவைத்துக்கொள்ளும் நிலவுடைமை கயமையும், முதலாளித்துவ தகவமைப்பும் சேர்ந்து செயல்படுகிறது.

புதிய வடிவிலான இந்த சாதிய தகவமைப்பிற்கு தற்போதைய பார்ப்பனிய-முதலாளித்துவ ஆதரவு அரசு(கள்) ஏற்றதாய் இருக்கிறது. நமது மௌனம் சம்மதத்திற்கு அறிகுறியாகிவிடக் கூடாது.

சாதியை ஒழிப்பதற்கு காலங்கள் பிடிக்கும் எனினும், சாதியமைப்பை அப்படியே கட்டிக்காக்க மூலதன-இலாப- சுய நல நோக்கோடு செயல்படும் கேவலமான திருமணத் தரகு விளம்பரங்களை தடை செய்ய நாம் களம் இறங்க வேண்டும்.

– #கொற்றவை

A conversation with Hero Motors

Nirmala Kotravaiposted toHero MotoCorp
Hero Honda should immediately remove the casteist content in its communication and in future should refrain from using caste names & casteist notion in its advertisements or communication.
MASESSAYNOTOSEXISM.WORDPRESS.COM
  • Hero MotoCorp Dear Nirmala, Hero as a responsible corporate has always been an important part of the India story. Hero is committed to the highest levels of conduct in all its actions. Splendor is the world’s largest selling two wheeler brand. This creative is in t…See More
  • Nirmala Kotravai Thanks for replying. I was told that this ad appeared some time long back and the caste names were replaced by just names & that’s why I removed my post from the blog. But now your answer is quite surprising. ‘Iyer’ is not a family name, it is a ‘caste’ name & as per Indian Caste System, it boasts of ‘noble’ birth, where by placing the hard core laborers who do ‘unclean’ jobs in the lowest order & has branded them ‘Untouchables’.
  • Nirmala Kotravai It looks like you or your company or your creative agency is quite insensitive to the casteist oppression in the country. Or you are least bothered about hurting the sentiments of the oppressed. I am sure your team would have only chosen to use the caste names which are known as ‘upper castes’ and definitely not of the ‘lower castes’. Can you explain this state of mind please?
  • Kanaga Sivakumar The intent was not hurt any sentiments, but to say that today Splendor is part of every family. – Neither every family is Iyer family in india nor every motor company wants to advertise XXX Iyengar & Sons Ltd nowadays. it hurts. It is as simple as it is
  • Ganesh Subbi Kudos to you Nirmala Kotravai.. Hero MotoCorp should remove the content and issue a statement…
    23 hours ago · Like · 2
  • Kumar S Kumar @ Mr.kanga sivakumar, just imagine instead of iyer ,we try with some lower caste name from north india, then you will be knowing consequence of sales in particular brand and the people response. Even government should not allow people to use their ca…See More
  • Kandeeban Ayyathurai First and foremost, whoever created this ad shud know we tamils in TN DO NOT use surnames/caste names.. our names are Patronymic (go look up for the meaning of that). Using a caste name here is not just discriminatory but self-defeating cos no one in TN would identify themselves with it.. not even the so-called “iyers”… u just shot urself on the foot, Hero!!

Hero Honda & Casteist Advertisement

565364_10151304742712612_1518260035_n

                                                                                                                                                                                                               

This is to register a complaint against the Hero Motor Corp Advertisement for Splendor pro which propagates casteism in the  name of family name. In a country where the labor class is oppressed in the name of caste and devoid of its rights, a company like Hero Motor Corp should be sensible enough in not using caste names in its communication. Hence Hero Motor Corp should immediately remove the casteist content in its communication and in future should refrain from using caste names & casteist notion in its advertisements or communication. , else MASES will be forced to get into action inviting public attention.

ஹோரோ மோட்டார் கார்ப் தனது ஸ்ப்ளெண்டர் ப்ரோ விளம்பரத்திற்காக சாதியப் பெயரைப் பயன்படுத்தியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உழைக்கும் வர்க்கம் சாதியின் பெயரால் கடுமையாக ஒடுக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்படும் நாட்டில், ஹீரோ ஹோண்டா போன்ற ஒரு நிறுவனம் சற்று கூறுணர்வோடு செயல்பட வேண்டும். உடனடியாக ஹீரோ மோட்டார் கார்ப் அந்த விளம்பரத்தைத் திரும்பப் பெற வேண்டும், அதிலுள்ள சாதியப் பெயர்களை, கருத்துகளை நீக்க வேண்டும். இல்லையேல் மாசெஸ் மக்களின் கவனத்தை ஈர்க்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும்.

People who wish to complaint against this advertisement may use below links:

இந்த விளம்ப்ரத்திற்கெதிராகப் புகாரளிக்க கீழ்கண்ட சுட்டியைப் பயன்படுத்தவும்:

http://www.heromotocorp.com/en-in/reachus/queryform

http://tinyurl.com/mndvpom – http://www.akosha.com

https://www.facebook.com/MyAkosha

http://www.facebook.com/HeroMotoCorpIndia

or call Ankur Singla @ 0120-380-3011, personal complaint manager for Hero Honda

Hero Honda Chennai office call @ 044 28350874