Tag Archives: பெண்ணியம்

“மார்க்ஸியமும் பெண் விடுதலையும்”

மே மாத சிறப்பாக எழுத்தாளர் கார்ல் மார்க்ஸ் என்ற தலைப்பில் முழு நாள் நிகழ்வு சென்னை கவிக்கோ அரங்கத்தில் நடைபெற்றது. பல அமர்வுகளும் கார்ல் மார்க்ஸ் பற்றியும் அவரது கருத்துக்கள் பற்றிய கலந்துரையாடலும் நடைபெற்றது

அதில் ‘மார்க்ஸியமும் பெண் விடுதலையும்” என்ற தலைப்பில் நான் பேசியதன் தொகுப்பு.

நன்றி வாசகசாலை

 

திருமணத்திற்கு கன்னித்தன்மை டெஸ்ட்! – நக்கீரன்

IMGIMG_0001

டாக்டர் ஆமீனா வதூதுக்கு ஆதரவாக கூட்டறிக்கை

டாக்டர் ஆமீனா வதூதின் சென்னை பல்கலைகழக சிறப்பு விரிவுரை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள் கூட்டறிக்கை

 statement_final_2 (1)-page-0 statement_final_2 (1)-page-1 statement_final_2 (1)-page-2 statement_final_2 (1)-page-3 (1)

சென்னை பல்கலைக்கழக இஸ்லாமிய ஆய்வுத்துறையும், JABS கல்லூரியும் இணைந்து இஸ்லாம் , பாலியல் மற்றும் சீர்திருத்தம் என்ற தலைப்பில் அமெரிக்க இஸ்லாமிய பெண்ணிய சிந்தனையாளரான ஆமீனா வதூத் நிகழ்த்த இருந்த கவுரவ விரிவுரை ரத்து செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சியும் வருத்தமும் அடைகிறோம். அதனை தொடர்ந்து ” பெண்களின் அனுபவங்கள் மற்றும் இஸ்லாத்தில் அவர்களின் அதிகாரம் சார்ந்த பிரச்சினைகள்” என்ற தலைப்பில் வட்டமேசை கலந்தாய்வு நடக்க இருந்தது. இதுவும் காவல்துறையின் உத்தரவு காரணமாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று காவல்துறையின் வேண்டுகோள் காரணமாக அவரின் கவுரவ விரிவுரை மற்றும் வட்டமேசை கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டிருக்கிறது என்று பல்கலைகழக அதிகாரிகள் தெரிவித்தார்கள். முஸ்லிம் குழுக்கள் (வஹ்ஹாபிய குழுக்கள்) என்று போலியாக தங்களை வெளிப்படுத்திக்கொள்பவர்கள் ஆமீனா வதூதின் நிகழ்ச்சியை  சென்னையில் நடத்தினால் நாங்கள் தடுப்போம் என்று மிரட்டியிருக்கிறார்கள். மேலும் ஆமினா வதூத் அமெரிக்க அரசின் ஊதுகுழல் என்றும், இஸ்லாமிய விரோதி என்றும் குறிப்பிட்டிருக்கின்றனர். பல்கலைகழகத்தின் இஸ்லாமிய ஆய்வு மையமானது பல்கலைகழகத்தின் விவாத உரிமையை ஊக்குவிக்க மற்றும் உரையாடலை மேற்கொள்ள எடுத்த எல்லா முயற்சிகளும் பலனளிக்கவில்லை.

ஆமீனா வதூதின் செயல்பாடுகளை தூரத்தில் இருந்து கவனிக்கும் எவருமே இது அவர்மீதான அடிப்படை இயல்பற்ற குற்றச்சாட்டுகள் என்பதை ஒப்புக்கொள்வர். மேலும் இந்த குழுக்களின் வாதம் முழு அறியாமை என்பதையும் பதிவு செய்வார்கள். இஸ்லாத்திற்கு மதம் மாறிய ஆப்ரிக்க – அமெரிக்க பெண்ணான ஆமினா வதூத் , அஸ்மா பர்லாஸ் மற்றும் ரிபாத் ஹஸன் ஆகியோருடன் இணைந்து அமெரிக்காவில் இஸ்லாமிய பெண்ணிய கருத்தாக்கத்தை முன்னெடுக்கின்றார்.

மேலும்  ஆமினா வதூத்  மலேசியாவை அடிப்படையாகக்கொண்டு இயங்கும் இஸ்லாமிய சகோதரிகள் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர். இந்த அமைப்பானது உலகம் முழுவதும் பெண்களுக்கு நீதியையும், சமத்துவத்தையும் குர் ஆனிய அடிப்படையில் வலியுறுத்தி ஆன்மீக தளத்தில் கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக இயங்குகிறது. மேலும் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை மற்றும் முத்தலாக் முறைமை ஆகியவற்றிற்கு குர் ஆனிய அடிப்படையில்  சமத்துவ முறையிலான தீர்வை முன்னெடுக்கிறது. இஸ்லாமிய சகோதரிகள் அமைப்பு (SiS)என்பது நம்பிக்கைக்கொண்ட பெண்களுக்காக உலகம் முழுவதும் தீவிரமாக இயங்கும் ஸ்தாபனம். இந்த அமைப்பின் ஒருங்கிணைப்போடு ஆமினா வதூத் முஸ்லிம் குடும்பங்களில் பெண்களுக்கான சமத்துவம் மற்றும் நீதி ஆகியவற்றை வலியுறுத்தி முசாவா இயக்கத்தை நடத்தினார்.

இந்த தருணத்தில் இந்தியா முழுக்க இருக்கும் முஸ்லிம் பெண்கள் மற்றும் உலகளாவிய முஸ்லிம் பெண்கள் எல்லோரும் முஸ்லிம்களாக ஒன்றுதிரண்டு, இணைந்து அவர்களுக்கான நீதி மற்றும் சமத்துவத்தை பெறுவதில் முனைப்பாக செயல்பட்டு, இஸ்லாமிய நம்பிக்கையாளர்களாக, அதன் மீதும் பற்றுதல் கொண்டவர்களாக, சட்டங்களை மதிப்பவர்களாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்நிலையில் இம்மாதிரியான குழுக்கள் இது தமிழ்நாட்டு முஸ்லிம் மக்களின் கருத்து என்று தங்களின் இருப்பை நிலைநாட்டுவதற்காக போலியாக கருத்து தெரிவிக்கிறார்கள்.

இதைவிட மோசம் என்பது இப்படியான பார்வைகள் ஒளிபரப்ப அல்லது கேட்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. ஆமினா வதூத் இந்தியாவிற்கு வருகை தந்ததில் இருந்து எவ்வித பிரச்சினையும் இல்லாமல் பல்வேறு பல்கலைகழகங்கள் மற்றும் பொதுமேடைகளில் உரையாற்றி இருக்கிறார். இந்நிலையில் அவரது பேச்சால் வன்முறை ஏற்பட சாத்தியமுண்டு என்பது அப்பட்டமான பொய்யாகும். அவரைப்பற்றி அறிந்தவர்கள் ஒவ்வொருவருமே அவர் தன் வாழ்நாள் முழுவதையும் இஸ்லாத்திற்குள்ளேயும், அதன் வெளியேயும்  சமாதானம் மற்றும் சமத்துவத்திற்காக செலவழிக்கிறார் என்பதை புரிந்து கொள்வர்.

இந்த வருந்தத்தக்க நிகழ்வுகள் மற்ற காரணங்களுக்காக வேதனையளிப்பதாக உள்ளன. தமிழ்நாடு முஸ்லிம் பெண்கள் ஜமா அத், மும்பையை தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் அகில இந்திய முஸ்லிம் மகிளா அந்தோளன், அவாஸ் -இ -நிஸ்வான் – மும்பை மற்றும் அகில இந்திய முஸ்லிம் பெண்கள் சட்டவாரியம் – லக்னோ, இந்தியாவின் சிறிய நகரங்களில் செயல்படும் சிறு குழுக்கள் ஆகியவை எல்லாம்  நம்பிக்கை மற்றும் சட்டம் ஆகியவற்றின் ஆணாதிக்க காரணிகளை எதிர்க்கின்றன.  இந்த சூழலில் ஆமினா வதூதின் வருகை மற்றும் உரையானது இந்தியாவில் பெண்களிடையே இந்த விவகாரம் சம்பந்தமான உற்சாகமூட்டும் விவாதத்தை கிளப்பும்.

ஆமினாவதூதிற்கு மாற்றாக சிந்திப்பவர்கள் அவருடன் விவாதிக்க எப்போதுமே வரவேற்கப்படுகிறார்கள். ஆனால் இது அவரின் பேச்சுரிமையை பறிப்பதாக, எல்லோருக்கும் பழக்கமான அமெரிக்க ஏஜண்ட் என்று முத்திரைக்குத்தி அவரின் மதிப்பை குலைப்பதாக இருக்க முடியாது. அப்படி இருக்க கூடாது.

இரண்டாவதாக  காவல்துறை பல்கலைகழக விவகாரங்களில் கருத்துக்கள் சார்ந்த ஆலோசகர்களாக மாறிப்போனது குறித்து அதிர்ச்சியடைகிறோம். எம்மாதிரியான கருத்துக்கள் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தலாம். இதுபோன்ற சூழ்நிலையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது மாதிரியான ஆலோசனைகளை வழங்க தகுதியான நபராக காவல்துறை தன்னை கருதிக்கொள்கிறது. நிச்சயமாக இது காவல்துறையின் வேலையல்ல. மேலும் தெளிவாக இது காவல்துறையின் அபாயகரமான மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் விளையாட்டே.

இறுதியாக, சென்னை பல்கலைக்கழகத்தின்  “காவல்துறை எச்சரிக்கை” நோக்கிய மனோபாவத்தை அறிந்து அதே மாதிரி அதிர்ச்சியடைகிறோம். பல்கலைகழகத்தின் எல்லா துறைகளும் மிக திடமாக விவாதம் மற்றும் திறந்த உரையாடல் ஆகியவற்றை நோக்கி நிற்பதற்கு பதிலாக, நிர்வாகம் ஆமினா வதூதிற்கு தன் கதவுகளை அடைத்திருக்கிறது. இது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பல்கலைகழக அறிவுப்பண்பாட்டின் மீது உவப்பான சமிக்ஞைகளை அனுப்பாது.

நாங்கள் காவல்துறையின் இம்மாதிரியான கல்வித்துறை தலையீட்டை வன்மையாக எதிர்ப்பதுடன், கல்வி சமூகத்தை அதன் சுதந்திரத்திற்காக அணி திரள அழைக்கிறோம்.

முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக தங்களை முன்னிலைப்படுத்துபவர்கள் ஆமினா வதூத் மற்றும் பிற முஸ்லிம் பெண்கள் குழுக்களின் இம்மாதிரியான செயல்பாடுகள் மற்றும் விவாதங்களில்  தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மாறாக அவர்களை சட்டவிரோதிகளாக பார்க்கக்கூடாது.

சென்னை பல்கலைக்கழகம் கல்வித்துறையின் கவுரவம், சுதந்திரம்,கண்ணியம் ஆகியவற்றை மீட்டெடுப்பதுடன் , ஆமீனா வதூதை பல்கலைகழகத்திற்கு மீண்டும் அழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

————————————————————————————————-

Kaviko Abdur Rahman, Tamil Poet

Aniruddhan Vasudevan (Writer)

Abeedheen, Writer

Abilash Chandran, Poet

AD Bala, Journalist

Ahmed Faizal, Poet, Sri Lanka

Ambai ,Writer

Ameer Abbas (Film director)

Anandhi Shanmugasundaram, Social Activist

Prof. S. Anandhi

Dr. Arshad Alam, JNU, New Delhi

S. Arshiya, Writer

Abdul Haq Lareena, Poet, Sri Lanka

P.K Abdul Rahiman, University of Madras

A.P.M Idress, Writer, Sri Lanka

Anwar Balasingam, Writer

Dr. A. R. Venkatachalapathy, MIDS, Chennai

Dr. A.K. Ramakrishnan, JNU, New Delhi

Benazir Begam, Poet and Student Reporter, Dindugal

Chitra Jeyaram, Film Director and Producer, U.S

Cimimeena  (Social activist )

Devabira, Poet, Netherlands

V. Geetha, Feminist Historian and Writer, Chennai

Geetha Ilangovan, Film Maker

Geetha Narayanan, Research Scholar and Social activist

Dr. P.M. Girish, University of Madras

Gnani Sankaran, Writer, France

H.G. Razool, Poet

Hameed Jaffer, Writer

Prof. Hameem Mustafa, Nagercoil

Inba Subramaniyan, Poet

Indira Gandhi alangaram (Writer)

Jamalan, Writer

Professor Jeyashree venkatadurai

Dr. M. H. Illias, Jamia Millia Islamia, New Delhi

Kalaiarasan, Writer, Nether Land

Kalanthai Peer Mohamad, Writer

Kannan Sundaram,  Editor  & Publisher, Kalachuvadu

Kavitha Muralidharan, Journalist, Chennai

Kavin Malar, Writer and Journalist, Chennai

Keeranur Jakir Raja, Writer

Kombai S Anwar, FilKm Maker, Chennai

Ko.Sugumaran, Human Rights Activist, Pondichery

Kulachal Mu.Yoosuf, Writer & Translator

Kutti Revathi, Poet

Leena Manimekalai, Poet & Film Maker

Lenin Mathivanan, Writer, Sri Lanka

Leninsha Begam, Journalist, Chennai.

Living smile Vidhya, Poet

Manomani, Poet and Editor, Pudhuezhuthu

Manusyaputhiran, Writer and Editor, Uyirmmai Magazine

Meeran Mydeen, Writer

Mohammed Imdad, Social Activist, Sri Lanka.

Mujeeb Rehman, Writer

Malathi maithri (Poet, New Delhi)

Nirmala Kotravai, Feminist

Nisha Mansur, Poet

Dr. V. Padma (Mangai), Academician and Theatre person, Chennai

Dr. G. Patrick, University of Madras

H.Peer Mohammed, Writer

Prince entra Periyar, Social Activist

Thi. Parameswari  (Poet)

Dr. M. Priyamvada, University of Madras

Professor Premananthan (Delhi university)

Raji Kumarasamy, Social Activist

Dr. Ramu Manivannan, University of Madras

Rishan Sherif, Poet, Sri Lanka

Riyaz Kurana, Poet, Sri Lanka

Rafeek Ismail (Assistant Film Director)

Rajan kurai (Writer)

Sadakathulla Hasani, Editor, Al-Hindh, Madurai

Salma, Writer & Poet

Syed Buhari, Film Maker

Sharmila Seyyid, Poet, Sri Lanka

Shoba Shakthi, Writer, France

Shubashree Desikan, Journalist, Chennai

S. P. Udayakumar (Coordinator – People Movement of Anti-nuclear project at Kodankulam)

Sukirtha Rani, Poet

Senthilnathan (Editor Aazhi magazine)

Dr. Sunitha V, MCC, Chennai.

Shameem sheik (Social activist, Bangalore)

Siddarth Kandasamy (Social activist)

Tajdheen, Poet

Tharmini, Poet

Poet Thilagar, Sri Lanka

Thamayanthi (Social Activist, Sri Lanka)

Tamilpen Vilasini (Social Activist)

Vaa. Manikandan, Poet

Venkatesh Chakravarthy, Film Critique

பணியிடங்களில், பெண்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள்

1082601_10200292384981155_2125076262_o

 

பணியிடங்களில், பெண்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் தருவோர் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் ஒன்று இயற்றப்பட்டுள்ளது. லோக் சபா மற்றும் ராஜ்யசபாவில் இந்த சட்டம் ஏற்று கொள்ளப்பட்டு, பின் ஜனாதிபதி ஒப்புதலும் வாங்கி தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது

இது பற்றிய தகவல்கள் சிறு கேள்வி பதில் வடிவில் :

எந்தெந்த நிறுவனங்கள் இதனை பின் பற்ற வேண்டும் ?

அனைத்து நிறுவனங்களும் – அவ்வளவு ஏன் – வீட்டி பணிபுரியும் பணிப்பெண் கூட பாலியல் சீண்டல்களுக்கு ஆளானால், இச்சட்டத்தின் கீழ் கம்பிளேயின்ட் தரலாம். நிறுவனங்கள், சிறு கடைகள், ஹோட்டல்கள், அரசு துறை நிறுவனங்கள் என எல்லா இடங்களுக்கும் இச்சட்டம் பொருந்தும்

இந்த சட்டத்தில் முக்கியமாக என்ன சொல்லப்பட்டுள்ளது ?

ஒரு பெண் பாலியல் சீண்டல்களுக்கு ஆளானால், அவர் அது பற்றி, பணி புரியும் இடத்தில் புகார் தரலாம். ஒவ்வொரு நிறுவனமும் இதற்காக ” Internal Complaints committee ” ஒன்றை அமைக்க வேண்டும்.

இந்த கமிட்டியில் எத்தனை உறுப்பினர் இருக்க வேண்டும், யார் யாரெல்லாம் இருக்க வேண்டும் என்ற விபரங்களை இந்த சட்டம் விரிவாக கூறுகிறது

மேலும் புகார் உண்மை – என்றால் அதன் மேல் தகுந்த நடவடிக்கை எடுக்கவும் கூறப்பட்டுள்ளது. பொய்யான குற்ற சாட்டுகள் தரப்பட்டால் அப்படி தந்த பெண் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது

ஒவ்வொரு நிறுவனமும் Internal Complaints கமிட்டி அமைக்க வேண்டுமா ? உதாரணமாக 5 பேர் வேலை செய்யும் ஒரு மருந்து கடையில் ஒரே ஒரு பெண் இருந்தால் அங்கும் Internal Complaints கமிட்டி அமைக்கணுமா ?

10 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் வேலை பார்க்கும் எந்த நிறுவனம் அல்லது கடையும் (அங்கு ஒரே ஒரு பெண் ஊழியர் இருந்தால் கூட) இந்த கமிட்டி அமைக்க வேண்டும்.

அரசாங்கம் ஒவ்வொரு ஏரியாவிலும் சில லோக்கல் கமிட்டிகள் அமைக்கவும் சட்டம் பரிந்துரை செய்துள்ளது. 10 க்கு குறைவான நபர்கள் ஒரு நிறுவனம் அல்லது கடையில் வேலைக்கு இருந்தால் அங்கு நிகழும் இத்தகைய குற்றங்களை லோக்கல் கமிட்டி முன்பு எந்த பெண்ணும் கொண்டு செல்லலாம்

Internal Complaints கமிட்டியில் யார் யாரெல்லாம் உறுப்பினர் ஆக இருக்க வேண்டும்?

கமிட்டியில் குறைந்தது 4 உறுப்பினர் இருக்க வேண்டும். கமிட்டியின் தலைவராக ஒரு பெண் தான் இருக்க வேண்டும். அவர் அலுவலகத்தில் சீனியர் நிலையில் இருக்கும் பெண்மணியாய் இருத்தல் நலம். கமிட்டியின் மொத்த உறுப்பினர்களில் குறைந்தது பாதி பேர் பெண்களாக இருக்க வேண்டும். 4 பேர் கொண்ட கமிட்டி எனில் – குறைந்தது 2 பெண்கள்; 5 பேர் உள்ள கமிட்டி எனில் குறைந்தது 3 பெண்கள் இருத்தல் அவசியம்

இந்த கமிட்டியில் நிறுவனத்தில் பணி புரியாத ஒரு வெளி நபரும் இருக்க வேண்டும். இவர் சேவை நிறுவனங்களுடன் (NGO) தொடர்புடையவராக இருத்தல் அவசியம்

ஒரே ஊரில் இருக்கும் நிறுவனத்தின் ஒவ்வொரு கிளைக்கும் ஒரு கமிட்டி அவசியமா? வெளியூரில் இருக்கும் ப்ராஞ்ச்களுக்கும் கமிட்டி தேவையா ?

ஆம் உள்ளூர் அல்லது வெளியூர் எங்கு கிளை அலுவல்கம் இருந்தாலும் அங்கும் இத்தகைய கமிட்டி அவசியமே.

தனது மேலதிகாரியான பெண் அதிகாரி தனக்கு செக்ஸ் டார்ச்சர் தருகிறார் என ஒரு ஆண் ஊழியர் இந்த சட்டத்தின் கீழ் புகார் தர முடியுமா?

இல்லை இந்த சட்டம் முழுக்க முழுக்க பெண்களை பாது காக்க மட்டுமே இயற்றப்பட்டது. சட்டத்தின் தலைப்பிலேயே “பெண்களை பாதுகாக்க ” என கூறப்பட்டுள்ளது.

ஒரு ஆண் அதிகாரி ( Gay ) தனக்கு செக்ஸ் டார்ச்சர் தருகிறார் என இன்னொரு ஆண் ஊழியர் இந்த சட்டத்தின் கீழ் புகார் தர முடியுமா?

முடியாது மேலே சொன்ன காரணம் தான்.பெண்கள் மட்டுமே இந்த சட்டத்தின் கீழ் கம்பிலேயின்ட் தர முடியும்

ஒரு பெண் ஊழியர் மற்ற சக ஊழியர்களை விட – தனது மேனேஜர் மேல் செக்ஸ் கம்பிலேயின்ட் தந்தால் அது சீரியசாக எடுத்து கொள்ளப்படும் என்பது உண்மையா ? ஏன் ?

ஆம். சக ஊழியர் மேல் தரும் செக்ஸ் கம்பிலேயின்ட் விட- தான் ரிப்போர்ட் செய்யும் மேனேஜர் மேல் அதே புகார் தந்தால் அதன் விளைவு அதிகம் தான்.
காரணம் ஒரு மேனேஜர் தான் தன் கீழே இருப்போருக்கு வருடாந்திர அப்ரைசல், ப்ரோமோஷன், லீவு என எல்லாவற்றையும் ஓகே செய்ய வேண்டும். இந்த அதிகாரத்தை அவர் தவறாக நடக்க முயல்வது பெரும் குற்றமாக கருதப்படும்

இங்கு அந்த குற்றம் மட்டுமல்ல தனது பதவியை தவறாக பயன்படுத்தினார் என்பதால் தண்டனை அதிகமாகவே ( அநேகமாக வேலை இழப்பு) இருக்கும்
**************
இது புதிய சட்டம் என்பதால் இது பற்றி விரிவாய் பேச எங்கள் ஸ்டடி சர்க்கிளில் இருந்து ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்துள்ளோம். அதன் அழைப்பிதழ் இது…

இதை வாசிக்கும் நீங்கள் HR அல்லது லீகல் பீல்டில் இருந்தால் நிச்சயம் நீங்களும் கலந்து கொள்ளலாம் அல்லது உங்கள் நிறுவன HR மேனஜர்க்கு இந்த பதிவை அல்லது மீட்டிங் குறித்த அறிவிப்பை அனுப்பி, முடிந்தால் கலந்து கொள்ள சொல்லுங்கள் !

source: http://veeduthirumbal.blogspot.com/2013/07/blog-post_25.html – via https://www.facebook.com/groups/againstmalechauvinisticads/597274056961646/?ref=notif&notif_t=group_activity by Siva Kumar

My Case On Acid Attacks In Supreme Court

Sushil Kumar Shinde: Stop the sale of acid in retail #womensafety #stopacidattacks

Two men threw acid on me when I was 15 years old. This happened because I refused to marry one of them.

It has been eight years since this incident and nothing has changed. In the last three months alone more than 60 acid attack cases on women in India were reported.

After this brutal incident, I decided to fight against the use of acid as a weapon against women. I filed a case with the Supreme Court of India to seek justice and control the sale of acid in India.

On Tuesday, the Supreme Court gave the Government of India a final deadline of 7 days to frame a policy to curb the sale of acid in order to prevent acid attack cases.

If the Home Minister acts on this immediately, a lot of acid attacks can be prevented In India. That’s why I started this petition telling the Union Home Minister, Sushil Kumar Shinde to immediately take measures to regulate sale of acid in retail.

With each passing day, in the absence of any regulation on acid sale, innocent women are paying a heavy price.

We need to build enormous pressure on our Home Minister Shinde and let him know that the whole country is watching his actions. We have less than a week to do this!

Join me in telling Home Minister Shinde to immediately regulate and control the sale of acid. Sign my petitionand forward it to your friends and family to save the lives of many more women in India. http://change.org/stopacidattacks

Thanks in advance for taking action,

Laxmi via Change.org

 

‘கணவரின் அதிகாரத்தை நிராகரிக்கத் தூண்டியவர்கள்’ – பிபிசி

சவுதி அரேபியாவில் ஒரு பெண்ணை அவரது கணவரின் அதிகாரத்தை நிராகரிக்க தூண்டிய குற்றத்தின் பேரில் தண்டிக்கப்பட்டுள்ள இரு பெண் உரிமைச் செயற்பாட்டாளர்கள், அந்த தண்டனையை நீக்குமாறு தமது அரசாங்கத்தை கோரியுள்ளனர்.

தமக்கு விதிக்கப்பட்ட 10 மாத சிறைத்தண்டனையை நீக்குமாறு அந்த இரு பெண்களால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு இந்த வார பிற்பகுதியில் விசாரணைக்கு வரவுள்ளது.

வஜெகா அல் குவைதர் மற்றும் பௌசியா அல் ஒயோயுனி ஆகிய இந்த இரு செயற்பாட்டாளர்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள இந்தத் தண்டனை, அவர்களை சிறையில் போட்டு, அவர்கள் பெண்களுக்காக எழுப்பி வருகின்ற குரலை அடக்குவதற்கான ஒன்றாக பார்க்கப்படுகின்றது.

சவுதி பெண்களுக்கு வாகனங்களை ஓட்டுவதற்கான உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற போராட்டத்தில் முன்னணியில் திகழ்ந்தவர் வஜெகா.

பௌசியா சவுதியில் பெண்களுக்கான செல்வாக்கு மிக்க இணையதளம் ஒன்றை நடத்திவருகின்றார்.

வீட்டில் அடைக்கப்பட்ட கனடியப் பெண்

ஆகவே இரு வருடங்களுக்கு முன்னதாக தான் கடுமையாக தனது சவுதியைச் சேர்ந்த கணவரால் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக நத்தலி மோரின் என்னும் கனடிய பெண் முறையிட்ட போது, இவர்கள் இருவரும் அதில் அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக தலையிட்டார்ககள் என்பது யதார்த்தமானதுதான்.

ஆனால், அந்த துஷ்பிரயோக குற்றச்சாட்டை அந்தப் பெண்ணின் கணவர் மறுத்தார்.

அந்த கனடிய பெண், தன்னையும் தனது குழந்தைகளையும் தனது கணவர் உணவு, தண்ணீர் இல்லாமல் அடைத்து வைத்திருப்பதாகவும், தனக்கு உதவுமாறும் தமக்கு டெக்ஸ்ட் மூலம் உதவி கோரினார் என்று பௌசியா கூறுகிறார்.

ஆகவே தாம் இருவரும், அந்த கனடிய பெண்ணுக்கு உணவு வழங்குவதற்காக அவரது வீட்டுக்கு சென்றதாக இரு பெண்களும் கூறுகின்றனர்.

ஆனாலும், அந்த டெக்ஸ்ட் செய்தி உண்மையில் தம்மை இந்த விடயத்தில் மாட்டி விடுவதற்காக நத்தலியின் கணவராலேயே அனுப்பப்பட்டதாக பௌசியா கூறுகிறார்.

நத்தலியின் கணவர் பொலிஸுக்கு புகார் செய்ய, பொலிஸார், நத்தலியை கடத்த முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர்களை கைது செய்தார்கள்.

இவர்கள் இருவருக்கும் இந்த ஜூன் மாதத்தில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டபோது, அந்தக் குற்றச்சாட்டு கைவிடப்பட்டது.

ஆனால், அதற்குப் பதிலாக இவர்களுக்கு தக்பீப் – அதாவது ஒரு மனைவியை அவரது கணவரின் அதிகாரத்தை நிராகரிக்குமாறு தூண்டி விடுதல் என்ற குற்றச்சாட்டின் கீழ் இவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது.

இவர்களுக்கு 10 மாதச் சிறைத்தண்டனையும், 2 வருடங்களுக்கு பயணத்தடையும் விதிக்கப்பட்டது.

கண்டனம்

இதனை மனித உரிமைகள் அமைப்புக்கள் கண்டித்துள்ளன.

இந்த இரு பெண்களும் கடந்த காலங்களில் சவுதி பெண்களின் உரிமைகளுக்காக போரடிதற்கான பதிலடியாக, அவர்களை மௌனிக்கச் செய்வதற்காகவே அவர்களுக்கு இந்தச் சிறைத்தண்டனை வழங்க்கப்படுவதாக ”ஈக்குவாலிட்டி நவ்” என்ற அமைப்பின் செயற்பாட்டாளரான சவுட் அபு தையே பிபிசியிடம் தெரிவித்தார்.

செல்வாக்கு மிக்க சூரா கவுன்ஸிலில் பெண்களுக்கு உறுப்புரிமை வழங்குவது, அடுத்து வருகின்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பெண்களுக்கு வாக்களிக்க இடமளிப்பது ஆகியவற்றின் மூலம் மன்னர் அப்துல்லா சவுதியில் பெண்களுக்கு மேலும் உரிமைகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இவை வெறுமனே ஒரு குறியீட்டளவிலானவை மாத்திரமே என்று செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.

பெண்கள் மீது ஆண்களுக்கு இருக்கக்கூடிய ”பாதுகாவலர்” என்ற அதிகாரத்தில் மட்டுப்பாடுகள் தேவை என்பதுதான் தற்போது பெண் உரிமைச் செயற்பாட்டாளர்களின் முக்கிய கோரிக்கையாக இருக்கிறது.

இந்த இலகுவில் மாற்ற முடியாத அம்சங்களுக்கு எதிராகப் போராடி பெண்களுக்கான ஒரு மேம்பட்ட உலகை உறுதி செய்யும் போராட்டத்தில் வஜெகாவும் பௌசியாவும் உண்மையில் வீரப் போராளிகள் என்று அவர்கள் பாராட்டுகிறார்கள்.

 

source: http://www.bbc.co.uk/tamil/global/2013/07/130710_saudiwomen.shtml

 

Pre-marital Sex or Non-marital Sex

r736549_5984837

Most Media probably tried creating a sensational debate yesterday with its headline “Couples who have premarital sex to be considered ‘married,’ says HC”  –  unfortunately it has to be pointed out that “Do not write between lines and let not the interpretation of an Individual be projected as High Court Judgement”.

According to the report:

The court further said if necessary either party to a relationship could approach a Family Court for a declaration of marital status by supplying documentary proof for a sexual relationship. Once such a declaration was obtained, a woman could establish herself as the man’s wife in government records. “Legal rights applicable to normal wedded couples will also be applicable to couples who have had sexual relationships which are established.”

The court also said if after having a sexual relationship, the couple decided to separate due to difference of opinion, the ‘husband’ could not marry without getting a decree of divorce from the ‘wife’.

“..if any couple choose to consummate their sexual cravings, then that act becomes a total commitment with adherence to all consequences that may follow, except on certain exceptional considerations,” Justice C S Karnan said in his order.

Before I begin with my criticism, I consider that this Judgement is a historic one and is in no way a cultural or a moral disaster. While we read the entire ruling, it is very clear that Justice C.S. Karnan has intended to protect the rights of women and child who are abandoned after sexual exploitation either by pointing out to consensual sex or  by taking the excuse of not being legally / customarily married / saying that it is an illegitimate child.

“Justice Karnan said he was of the view that a valid marriage did not necessarily mean that all the customary rights pertaining to the married couple are to be followed and subsequently solemnised. In the present case, the woman and her husband had no encumbrance or other disqualification for solemnising their wedding as per their customs. For solemnising a wedding, legal aspects should be placed on a higher scale than the customary aspects. In this case, the man had signed in the ‘live birth report’ of his second child and given his consent for a Caesarean section for its birth. As such, he had officially admitted that she was his wife.”

“Without legal encumbrance or third party interference or without affecting third party rights, both the petitioner and the respondent lived together as spouses and begot two children.” Therefore, the question of an illegitimate relationship did not arise. Wedding solemnisation was only a customary right, but not a mandatory one. Hence, the judge said, he was treating the couple as spouses in normal life

First of all, to me in this context, the word ‘Pre-marital’ sex sounds absurd, “non-marital” sex may be a better term because this ruling discusses about ‘ruling out’ the customary aspects of marriage that is followed for the sake of society or under the religious belief system. In-fact I recommend that the word “non-marital” sex comes into floating rather than this word ‘Pre-marital Sex”. (it tries to imply that sex is taboo).

 Also I notice that many other posts discusses based on tweets & posts of the general public which comments such as “if all sexual relationships amounts to marriage, then how many wives do I have” etc., This is a reflection of a ‘COMMON MAAAANNNNNNN’ trying to boast of his ‘sexual capability’. Nowhere has the justice let out words that acknowledges all sexual relationships as marriage, he has very clearly evaluated the period of living, resultant actions, engagement and concluded the judgement on the grounds of those evidences.

‘One of the intelligent post questions the fate of commercial sex being labeled as marriage’, these kind of interpretation is nothing more than male chauvinist stupidity.  But I would like to say that if it is the case of a commercial sex-worker who conceived a child out of a living / sex with ‘one person’ and there has been a lack of protective measures by the Man in-spite of women insisting on protection, then that has to be considered as a child born out of “non-marital sex” and the women should be given right to seek maintenance for her pregnancy, child birth and maintenance of that child.

Now, coming back to the HC judgement, justice has done the necessary evaluation to arrive at the conclusion of acknowledging a ‘live-in’ relationship as marriage and whereby boldly recommended to rule out the ‘customary aspects’ (to be precise ‘religious customary aspects) and keep Legal aspects above all aspects. He has very clearly stated what all evidences would count for a live-in relationship.

More importantly we have to note that it says “Pre-marital sex equals ‘marriage’, must get ‘divorced’ to ‘marry’ another

I am not surprised to see the ‘moralistic’ outcries of few people because in a male dominant society one always get carried away by the mere word “Pre-marital sex”, but now this judgement insists on ‘commitment’ and demands responsibility for ‘action’ – no more it can be a mere ‘sex-play’ in the name of ‘live-in relationship’ or keeping a ‘keep’.

arey baba you got to be ‘responsible’ for your action, you just can’t spit in the vagina and run away.

Relevant Posts:

http://pratyaya.nationalinterest.in/2013/06/18/making-sense-of-madras-high-court-judgment-on-pre-marital-sex-and-marriage/

http://www.firstpost.com/india/why-the-madras-hc-judgment-on-premarital-sex-is-a-progressive-one-883961.html

http://www.legallyindia.com/201306183757/Bar-Bench-Litigation/madras-hc-pre-marital-sex-enough-to-solemnize-wedding-divorce-needed-to-marry-again

News links:

http://www.thehindu.com/news/national/tamil-nadu/couples-who-have-premarital-sex-to-be-considered-married-says-hc/article4824017.ece

http://indiatoday.intoday.in/story/hc-says-couple-of-right-legal-age-indulging-in-sex-are-husband-and-wife/1/283991.html

பாலியல் போதை எனும் மனநோய்

gg

 

ஓவ்வொரு முறை வன்புணர்வு கொடுமைகள் நடக்கும்போதும் போராட்டங்கள் தொடுக்கப்படுகிறது. இந்த விழிப்புணர்வும், ஒருங்கிணைப்பும் ஆதரவளித்தாலும், தாங்கள் வன்புணர்வு செய்வது ஒரு குழந்தை என்று கூட கவனத்தில் கொள்ளாத அளவுக்கு செல்லும் அந்நபர்களின் மனநிலை குறித்தே எனது எண்ணம் சுழல்கிறது.

அத்தகைய குற்றவாளிகளின் மனநிலையை ஆய்வு செய்ய இந்த அரசு என்ன செய்கிறது என்பதே மீண்டும் மீண்டும் எனது கேள்வியாக இருக்கிறது. ஏன் ஒருவர் இத்தகைய மனநிலைக்கு தள்ளப்படுகிறார்  “பாலியல் போதையூட்டும்” (sex drugging) கருவிகள் யாவை,  அவைகளின் பங்கு யாது, அதன் தாக்கம் எத்தகையது என்பன போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டாமா?

உளவியல் நிபுனர், பாலியல் மருத்துவர் (ஃப்ராய்டியர்கள் அல்ல), பெண்ணியலாளர்கள், பொதுவுடைமை ஜனநாயகவாதிகள், பொதுமக்கள், மாணவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய குழுக்களை அமைத்து பாலியல் குற்றவாளிகளிடம் உரையாடலை, ஆய்வுகளை நிகழ்த்த அரசு முனைய வேண்டும்.

குற்றத்திற்கான வேர்களை கண்டடையாமல், தூக்கில் போடு, கல்லால் அடி, ஆண்மை நீக்கம் செய் என்பதெல்லாம் வெறும் உணர்ச்சிவயபட்ட ஆணாதிக்க வாதமே. தற்காலிக மன அமைதிக்கு மட்டுமே அது உதவும்.

பாலியல் போதையூட்டத்தால் தூண்டப் பெருபவர்களுக்கு, பாலியல் மனநோயாளிகளுக்கு மறுவாழ்வு மையங்கள், ஆலோசனை மையங்கள் அமைக்கப்பட வேண்டும். அங்கு வருபவர்களின் தனியுரிமை மதிக்கப்பட வேண்டும், இரகசியங்கள் காக்கப்பட வேண்டும்.

மீண்டும் சொல்கிறேன் அந்த மனநிலை குறித்தே நான் அதிகம் கவலை கொள்கிறேன்.. இந்த சமூகம் ஒட்டுமொத்தமாக மனநோயாளிகளையே உற்பத்தி செய்கிற்து… அதில் ஒரு வகையான மனநோயாளிகள் இந்த பாலியல் குற்றவாளிகள்… கெட்டவர்களை நோக்கி பாய்வதும், தண்டனை கோருவதும் மட்டுமே நம்முடைய கடமையாகிவிட முடியாது, ஒருவரை நல்லவராக்குவதும் நம் கடமையே. அத்தகைய முயற்சிகளுக்கு அரசே வழிவகுத்து தர வேண்டும்.

அகிலாவுக்கு ஆதரவு, சன் நிறுவனத்திற்கு கண்டனம்

ff

*பெண்  ஊடகவியலாளர்கள் விடுக்கும் பத்திரிகைச்செய்தி*

வணக்கம்!

பெண்கள் தங்களுக்கு நேர்ந்ததை பொதுவாக வெளியில் சொல்ல அச்சப்படும் சூழல்
நிலவும் நிலையில் தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தவர்கள் குறித்து
புகார்கள் அளிக்கப்படும்போது புகார் அளிப்பவரையே குற்றவாளியாக மாற்றிவிடும்
விநோதம் இங்கே நிகழ்கிறது. புகார் அளிக்கும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு
இல்லை. அண்மையில் அப்படி புகார் அளித்து தனது மேலதிகாரியின் கைதுக்கு காரணமான சன் டிவி செய்தி வாசிப்பாளர் அகிலாவுக்கு கொலை மிரட்டல் வந்ததாக‌ அவர் தெரிவிக்கிறார். மேலும்அவர் பணியாற்றும் நிறுவனத்திலேயே அவருக்கு செய்தி
வாசிக்க வாய்ப்பு வழங்காமல் பழிவாங்கப்பட்டதுடன்,  அகிலாவை தற்போது இடைநீக்கம் செய்திருக்கிறது சன் டிவி நிர்வாகம். பாலியல்ரீதியாக இணங்க மறுக்கும் பெண்களை திறமை போதவில்லை என்று காரணம் காட்டி, அதிகாரத்தைபயன்படுத்தி ஒடுக்குவது போன்ற மோசமான செயல்பாடுகளிலும் பணியிடத்தில் உள்ள மேலதிகாரிகள் ஈடுபடுவதைத் தடுத்தாகவேண்டும். சன் டிவி நிர்வாகத்தின் இந்த செயலுக்கு பெண் ஊடகவியலாளர்களாகிய நாங்கள் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்.

1997ல் விசாகா எதிர் இராஜஸ்தான் அரசு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய
தீர்ப்பின்படி, வேலை செய்யும்இடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல்
தொல்லைகளைத் தடுப்பதற்குரிய வழிகாட்டு நெறிகளைநீதிமன்றம்  வகுத்தது. இது போன்ற முறையீடுகளை ஆய்வு செய்வதற்கு உள் விசாரணைக் குழுக்களைஅமைக்குமாறு வேலையளிப்போரைக் கேட்டுக் கொள்வதும் இவ்வழிகாடுதல்களில்  அடங்கும். ஆனால இதுபெரும்பாலான இடங்களில் இல்லை. இப்படியான ஒரு குழுவை அமைப்பது அவசியம்.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கான அவசரச் சட்டம் தற்போது
நாடாளுமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால்
இக்குழுவை கட்டாயமாக அனைத்து பணியிடங்களிலும் அமைத்தாக வேன்டும்.விசாகா குழு வழிகாட்டுதலின்படி பாலியல் குற்றங்கள் கிரிமினல் குற்றங்களாகக் கருதப்படவேண்டும். புகார் அளிக்கும் பெண்கள்தொடர்ந்து நிறுவனத்தில் பணியாற்றும்படியான சூழலையும் உருவாக்க வேண்டும். பாலியல்
தொல்லைகொடுத்தவர்களுக்கு ஆதரவு அளித்து, பாலியல் தொல்லைக்குள்ளான பெண்ணை ஒதுக்கி வைக்கும் செயலை  பெண்ஊடகவியலாளர்களாகிய நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

பெண் ஊடகவியலாளர்களாகிய நாங்கள் விசாகா குழுவை உடனடியாக ஒவ்வொரு
நிறுவனத்திலும் அமைக்கும்படிகோருகிறோம்.உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தில்
மிகவும் முனைப்புடன் இருப்பதால், ஊடக நிறுவனங்களில் இத்தகைய குழு ஒன்றை
அமைப்பது மிகவும் முக்கியமானதென்று நாங்கள் கருதுகிறோம். பாலியல்ரீதியாக
தொல்லைகள் தருபவர்களை கையாளுவதற்கு இந்தக் குழு மிகவும் உதவிகரமாக இருக்கும்.

பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளில் எப்பொழுதும் பெண்களின் பக்கம்
நிற்கிறோம் நாங்கள் என்பதைஇந்த அறிக்கை மூலம் தெரிவிக்கிறோம்.மேலும் இதுபோன்ற விஷயங்கள் தொடரும்பட்சத்தில், அதிகாரத்தை பயன்படுத்தி அத்துமீறல்களைச் செய்வது தொடர்ந்தால் பாதிக்கப்படும் பெண்களின் பக்கம் நின்று போராட்டங்களை முன்னெடுப்போம் என்றும் அறிவிக்கிறோம்.

இப்படிக்கு
பெண்  ஊடகவியலாளர்கள்
தொடர்புக்கு 9841155371, 9159486669

dc

Opinion about age of consent in Deccan Chronicle


20_03_2013_101_005 20_03_2013_103_012

http://www.dc-epaper.com/PUBLICATIONS/DC/DCC/2013/03/20/ArticleHtmls/Its-all-about-sex-and-the-city-20032013101005.shtml?Mode=1

The move to retain the age of consent of consensual sex at 18 years has evoked mixed reactions. Will it be the step forward in curtailing crimes against women?

The fatal Delhi gang rape inci dent shook the very conscience of the nation and resulted in citizens demanding a stringent anti-rape law to curb the atrocities against women. The government formed a committee, which was lead by former Chief Justice J.S. Verma, to suggest amendments to the existing law. In the recent past, as a part of the anti-rape bill, the Centre proposed to lower the age of consensual sex from 18 to 16 and incurred the wrath of the opposition and many activists, who reckoned that lowering the age might result in teenagers indulging in pre-marital sex, especially since women have to be 18 years old to get married. The anti-rape bill was introduced on Tuesday, which retained the age of consent of consensual sex as 18.
Many in the city share their opinions on how far playing with the age of consensual sex, will help to curtail crimes against women. Nirmala Kotravai, founder of Movement Against Sexual Exploitation and Sexism (MASES) reckons that decision of setting a legal age for consensual sex will not contribute towards the safety of women. “The bill is aimed at protecting women and children women and childre below the age of 18 from being exploited, but what about exploitation above the age of 18? How much are we sure about women not being raped after 18? It gives room for someone to take advantage quot ing the age of consensus,“ she points out. Actress Khushboo wonders how this move can reduce rape, but contested the claim that a reduction of legal age to 16 could send across a wrong message to youngsters. Khushboo says, “In India, rape knows no age bar. A woman as old as 45 also is raped in some corner of the country . How will reducing or increasing the age bar for consensual sex make a real difference.“ Clearly unhappy at the earlier decision to change the age for consensual sex to 16, she says, “If a person gets to vote at the age of 18, so everything else should start at that,“ she says.

On the other hand, Kirthi Jayakumar, a lawyer (human rights and gender-based violence) argues that this law is idealist but impractical, adding that 16 years would be a more realistic age for current times. “Yes, it is true that most people in India find even consensual sex before marriage unacceptable. But, it is also a fact that some boys and girls have sex before the age of 18. Some advocate that the age of consent be 16, which is more realistic, and some think 18 is ideal,“ she relates.

Changing the age of consensual sex to control crimes is a “ridiculous move“ exclaims Priyamani. “No great change can come about in two years. If the age for consensual sex is 16 and the legal marriageable age is 18, a two-year gap is not going to make much of a difference,“ she remarks, in conclusion.

Thanks: Deccan Chronicle.