Tag Archives: kotravai

Women’s Day recognition

VSTB6979

லயோலாவில் விருது

வணக்கம் தோழர்களே,
1.10.2017 – வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாய் அமைந்தது. நான் படித்த லயோலா கல்லூரியில், முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பாக நடந்த லாமெஸ்’17 என்னும் நிகழ்ச்சியே அதற்கு காரணம்.
லயோலாவில் காட்சித் தொடர்பியல் (விஷுவல் கம்யூனிகேஷன்) படித்து தொடர்பியல் துறையில் குறிப்பிடத்தக்க அங்கீகாரம் பெற்றவர்களுக்கு விருது வழங்கி அங்கீகரிக்கும் நிகழ்வு. எழுத்தாளர் என்ற வரிசையில் என்னையும் அழைத்து சிறப்பித்திருந்தார்கள்.
சிறப்பு விருந்தினர்களாக இசையமைப்பாளர் #SanthoshNarayan Director #Mysskin Actor Guru Somasundaram வந்திருந்தார்கள்.
1987களில் படித்து விநியோகிஸ்தராக திகழும் அபிராமி ஃபிலிம்ஸ் (மன்னிக்கவும் சரியான பெயர் நினைவில் இல்லை) நிறுவனர், தோழர் Kombai S Anwar, புகைப்பட கலைஞர் #GVenkatram koothu pattarai #NateshMuthusamy தொடங்கி இயக்குனர் #Vetrimaran Somee Tharan என் வகுப்புத் தோழர்கள் இயக்குனர் #அஹ்மத்,புகைப்பட கலைஞர் Satyajit C.P. ஊடகத் துறையில் Andrew Juan Pradeep Milroy Peter Saju David P @Aldom Jacob Sujith G ஒளிஓவியத் துறையில் எனக்கு அடுத்த வருடங்களில் படித்த Soundar Rajan, விளம்பர துறையில் @chockalingam OPN Karthick இயக்குனர்கள் Pushkar Gayatri John Vijay என்ற பெயர்களுக்குப் பின் வந்த அத்தன பெயர்களும் எனக்கு வியப்பளித்தது! காரணம், நாம் சமீபத்தில் திறையில் கண்டு விரும்பிய அல்லது அறிந்த முகங்களில், பெரும்பாலர் லயோல விஸ்காம்! பெருமகிழ்ச்சி!
நான் மிகவும் ரசித்த படமான ஒருநாள் கூத்து இயக்குனர் Nelson Venkatesan இயக்குனர் Rajkumar Periasamy இயக்குனர் Yuvaraj Dhayalan இயக்குனர் Badri Venkatesh Editor Fenny Oliver Editor Ruben Actor@Krishna Ramakumar, புகைப்பட கலைஞர் Sree Nag (Shreya Nagarajan Singh) என்று பட்டியல் நீண்டது (எனவே அனைவரின் பெயரும், படங்களும் நினைவில் இல்லை, மன்னிக்கவும்). இவர்களோடு நம் மனதில் கண்டிப்பாக இடம்பிடித்திருக்கக் கூடிய #சுமார்மூஞ்சிகுமாரு புகழ் Daniel Annie Pope Lallu Sananth singer & music composer Ajesh இயக்குனர் Kiruthiga Udhayanidhi …… (விஷால், ஜெயம் ரவி, விஜய் ஆகியோர் உட்பட) இன்னும் பலர் என்று வியப்பளிக்கும் பட்டியல்.
இப்படி மைய நீரோட்ட ஊடகத் துறையில் மிளிர்ந்தவர்களுக்கு மத்தியில் மாற்று அரசியல் நீரோட்டத்தை மையமாக வைத்து எழுதும் நான்.
தான் வளர்த்த பிள்ளைகளை ஊக்குவித்து, பாராட்டி, பின் வரும் சந்ததியினருக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த லயோலா கல்லூரி, முன்னாள் மாணவர்கள் சங்கம், விஸ்காம் துறை பேராசிரியர்கள், நிர்வாகிகள், மாணவர்கள் என அனைவரின் அன்பும் போற்றுதலுக்குரியது.
மேடையில் பேசியது:
வணக்கம் தோழர்களே, நான் ovc 65 பேட்ச். இந்த எண்ணை சொல்லவே பெருமையாக இருக்கிறது. அரசு தரக்கூடிய விருதை விட இந்த விருதை நான் பெருமையாக எண்ணுகிறேன், ஏனென்றால் நாம் படித்த கல்லூரியில் நமக்கு அங்கீகாரம் கிடைப்பதென்பது பெருமகிழ்ச்சிக்குரியது, அல்லவா!
இந்த தருணத்தில் நான் Rajanayagam Appaa வை மிகவும் மிஸ் செய்கிறேன். நான் படித்த காலத்தில் மிகவும் மக்காகவே இருந்தேன் ஆனால் இன்று… என்னையெல்லாம் பாஸ் செய்துவிட பெரிய மனது வேணும் அது ராஜநாயகம் தோழருக்கு இருந்தது. அதேபோல் பேராசிரியர் ஹென்ரி மரியா விக்டர், சுரோஷ் பால், ரபி பெர்னாட் ஆகியோருக்கும் எனது நன்றிகள்.
வாய்ப்பு கிடைக்கும் போது விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது ஒரு எழுத்தாளரின் கடமை. அந்த வகையில் நான் இந்த மேடையில் ஒரு வேண்டுகோள் வைக்க நினைத்தேன், எனக்கு முன்னரே கார்த்திக் பேசிவிட்டார். ஆம்! ஊடகங்களில் பெண் உடல் சித்தரிப்பு குறித்துத்தான். திரைத்துறையினர் பலர் கூடியிருக்கும் அரங்கில் இதை பேசுவது அவசியம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக பலரும் சென்று விட்டனர். இருப்பினும் சொல்கிறேன். பெண் கதாபாத்திரங்களை சற்று கூருணர்வுடன் சித்தரியுங்கள். குத்துப் பாட்டெல்லாம் எதற்கு?
சமீபத்தில் நான் பார்த்த ஒரு திரைப்படத்தில் வேலை கேட்டு வரும் ஒரு பெண்ணின் கையில் துடப்பத்தைக் கொடுத்து வீட்டிற்குள் தள்ளி விடுவார் கதாநாயகன், அவள் அதை ரசித்து சிரிப்பாள். என்ன இது?
I started a Forum to talk about Sexist Representations in Media and Thank you Karthick for speaking about it and seeking social responsibility.
மற்றபடி நிகழ்ச்சியை வெகு சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறீர்கள். அனைவருக்கும் நன்றி
என்று முடித்தேன்.
ஆனால், இந்த தருணத்தில் நான் முக்கியமான இரண்டு பெயர்களை குறிப்பிட்டே ஆக வேண்டும். ஒருவர் Fr. Injakal and Fr. Alphonse இவர்கள் இருவரும் மனது வைக்காமல் போயிருந்தால் எனக்கு லயோலா கல்லூரியில் இடமே கிடைத்திருக்காது. இன்சக்கல் அவர்களின் அறைக்கு வெளியே ஒரு மாதம் தினம் தினம் சென்று காத்திருந்து மன்றாடி பெற்ற இடம். (நுழைவுத் தேர்வில் தேரவில்லை!). அப்போது கல்லூரி முதல்வராக இருந்தவர் Fr. Xavier Alphonse இவர்களை நான் என்றென்றைக்கும் மறக்க மாட்டேன்.
இந்நிகழ்ச்சிக்கு என்னை அழைத்த Nithya B Nithi மற்றும் அனைத்து பேராசிரியர்களுக்கும் நன்றி.
#LAMBZ17

my interview in Daily Thanthi

kotravai1

nirmala kotravai

kotravai 3

kotravai 4

பாலியல் மருத்துவமயமாதலைக் கண்டு விழித்தெழுதல்

Zahra-Luengo-3-844x1024

ஆங்கிலத்தில்: லியோனார் டீஃபர்

தமிழ் மொழிபெயர்ப்பு: கொற்றவை

பெண்களுக்கான பாலுறவுத் தேர்வு மற்றும் பாலுறவு அதிகாரம் குறித்து சமகாலங்களில் பலவிதமான சொல்லாடல்கள் நிகழ்ந்துவரும் போதிலும், ஒரு ஆணாதிக்க சமூகத்தில் பெண்களின் பாலுறவு அனுபவமானது எப்போதும் ‘மற்றமை’களாலேயே கட்டுப்படுத்தப்படுகிறது. பெரும்பாலான பெண்ணியவாதிகள் இதை ஒப்புக்கொள்கின்றனர். அதேவேளை, பாலியல் விஷயத்தில் இதுவரை நிலவி வந்த இரட்டை நிலைப்பாடு தற்போது மறைந்துவிட்டது எனவும், குறைந்தபட்சம் வைதீக மதங்களின் ஆதிக்கம் இல்லாத நாடுகளில் பெண்கள் பாலுறவு சுதந்திரம் பெற்றுவிட்டனர் என்றும் இன்று பலரும் கதைக்கின்றனர். இருப்பினும், பழங்குடிப் பெண்கள், மாற்றுத் திறனாளிப் பெண்கள், பதின்பருவ வயதுப் பெண்கள், கல்லூரியில் படிக்கும் பெண்கள், காதல் வயப்பட்டு ஆடவருடன் ஊர்சுற்றும் பெண்கள் (dating women), திருமணமான பெண்கள், முதிய வயதுப் பெண்கள் மற்றும் பலப் பெண்கள் இவ்வாதத்தை மறுக்கின்றனர். அவர்கள் எழுதிய நினைவுக்குறிப்புகள் மற்றும் அவர்கள் பற்றிய ஆய்வுகள் மூலம் இது தெரியவருகின்றது. பாதுகாப்பின்மை, துயரம், மற்றும் அப்பட்டமான கீழ்படுத்துதலால் நேரும் ஏமாற்றம், அவமானம், மகிழ்ச்சியின்மை மற்றும் நம்பிக்கையின்மை போன்ற உணர்ச்சிள் எவ்வாறு வழக்கமாகிவிட்டது என முக்கியத்துவம் கொடுத்து விளக்கும் கதைகள் பெண்களின் பாலுறவு வாழ்க்கை பற்றிய பதிவுகளில் வழக்கமாகிவிட்டது.

பாலுறவு வாழ்க்கையில் ஆணாதிக்க தாளத்திற்கு ஏற்றவகையில்தான் நாம் ஆடுகிறோம் என்பதை ஒப்புக்கொள்வதால் உடல்ரீதியான இன்பம், உணச்சிப்பூர்வமான நெருக்கம், சரச விளையாட்டுகளில் உளவியல்ரீதியான அதிகாரம், சுய-இன்பம் அல்லது ஏதோ ஒரு தருணத்திலாவது கூட்டுப்பாலுறவு போன்றவற்றை பெண்கள் அனுபவிக்கவில்லை என்று பொருளில்லை. மாறாக, பாலுறவில் இன்பமடைதல், நெருக்கம் மற்றும் அதிகாரம் போன்ற உணர்ச்சிகள் நமது ஆணாதிக்க சமூகத்தின் அங்கங்களாக இருக்கும் பெருநிறுவனங்கள், ஊடகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவை வரையறுத்துள்ள எல்லைகளுக்குள்ளும், விதிகளுக்குள்ளுமே நிகழ்கின்றன என்று வலியுறுத்துவதே எமது நோக்கம். இவ்வாறாக, பெண்ணிய கண்ணோட்டத்தில் கூறுவதானால், பாலுறவு விடுதலை என்பது இன்னமும் தொலைதூரத்தில்தான் உள்ளது.

சமகால தாராளவாத சமூகத்தில், பாலுறவு விதிகளையும், எல்லைகளையும் கட்டுப்படுத்தும் தரவுகளுக்கான பிரதான மூலமானது “பாலின்பம் என்பது உடல்நலம்” எனும் சொல்லாடலை முன்வைத்து சொற்பொழிவு வடிவம் பெற்ற அரசாங்கக் கொள்கைகள் மற்றும் வணிகநலன் சார்ந்த போதனைகளிலிருந்தும் உருவாகிறது. மாறாக அவ்வுரையாடல்கள், “பாலின்பம் என்பது ஒரு பொழுதுபோக்கு,” “பாலின்பம் என்பது உணர்ச்சிப் பெருவெள்ளம்,” “பாலின்பம் என்பது இயல்பாக ஒரு கற்றல் நடவடிக்கை,” அல்லது “பாலின்பம் என்பது பரந்த பன்முகப்பட்ட கலாச்சார வெளிப்பாட்டின் கூட்டுத்தொகை,” போன்ற கருத்துகளை முன் வைத்து நடப்பதில்லை. ஆனால் அவை, சுவாசிப்பது போல், ஜீரணிப்பது போல் அல்லது தூக்கம் போல் “பாலின்பம் என்பது பாலுறுப்பு சார்ந்த உலகளாவிய பரிணாமவியல் நடத்தை மற்றும் தேவை” என்றும் முன் வைக்கின்றன. இந்த வரையறைக்குள் இருந்து பார்க்கும்பொழுது, உடலுறவுச் செயல்பாடற்ற வாழ்க்கை அல்லது திருமணமானது ஆரோக்கியமானதல்ல, உடலுறவு என்றாலே அது பாலுறுப்புச் செயல்பாட்டை உள்ளடக்கி இருக்க வேண்டும், உச்சகட்டத்தை அடைவதே உடலுறவின் உச்சபட்சம், குறைவான உடலுறவுச் செயல்பாடுகள் இயல்பானதல்ல, உடலுறவு என்பது ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் இன்னபிற ஆதாயங்களையும்… கொடுக்கவல்லது.

இதுபோன்ற கட்டமைப்புகள் பாலுணர்வு என்பதை உயிரியல் நலன் சார்ந்த ஒரு சொல்லாடலாக முன்வைக்கின்றன. அதன்மூலம் அவை, இயல்பானச் செயல்பாடு, இயல்புக்கு மாறானச் செயல்பாடு என வகைப்படுத்தி மக்களுக்கு பாலியல் குறித்த விளக்கங்களையும் அறிவுரைகளையும் வழங்கும் அதிகாரம் படைத்த மத்தியஸ்தர்களாக மருத்துவர்கள் மற்றும் மனநல மருத்துவர்களை உருவாக்குகிறது. நம் சமூகங்களின் பாலுணர்வு நிபுணர்களாக இம்மக்கள் பதவி உயர்வு பெற்றவர்களாகிவிட்டனர்.

இக்கட்டமைப்பை மானிடவியலாளர்களும், சமூகவியலாளர்களும் “மருத்துவமயமாக்கல்” என்று விளிக்கின்றனர். மேலும் அவர்கள், 20ஆம் நூற்றாண்டில் மருத்துவமயமாக்கலின் வளர்ச்சியை ஆய்வு செய்துள்ளனர். ஏனென்றால் அக்காலகட்டத்தில்தான் மனிதர்களின் அன்றாட வாழ்வின் உணர்வம்சங்களான மனநிலை, உறக்கம், பசி, உணர்ச்சிகள், மதுப்பழக்கம், செயல்பாட்டு அளவு, உடல் எடை, மூப்படைதல், கர்ப்பம், மாதவிடாய், போதைப் பழக்கம், மனத்திடம், சமூக நடத்தை மற்றும் இன்னும் இதர அம்சங்களை முழுவதுமாக பொதுமையாக்கியதோடு, அதுகுறித்த ஒரு துறைசார் புரிதலையும் ஏற்படுத்தும் மாபெரும் மாற்றம் நிகழ்ந்தது. இவையனைத்தும் உடல்நலம் (நோய்) சார்ந்த அம்சங்களாகிப் போனது. மேலும், சமூக விதிமுறைகளிலிருந்து மாறுபடும் எதுவொன்றும் மருத்துவ அல்லது மனநலப் பிரச்சினையாக அடையாளப்படுகிறது. பல்லாயிர ஆண்டுகால ஆணாதிக்க மதக் கோட்பாடுகளின் விளைவால் பாலின்ப வாழ்க்கை குறித்து நிலவும் ஒழுக்கநெறி கண்ணோட்டமும், அப்போதனைகள் மற்றும் நடைமுறைகளில் பெண்களுக்களிக்கப்படும் அதி-ஒழுக்க முன்நிபந்தனைகள் கொண்ட இடத்தையும் வைத்து இந்த பாலியல் மருத்துவமயமாக்கல் என்பதை “பாவத்திலிருந்து நோயாக” (sin to sickness) மாற்றப்படும் ஒரு நிகழ்வாக மட்டுமே நான் காண்கிறேன், கட்டுப்பாட்டிலிருந்து விடுதலைக்கு மாறும் நிகழ்வாக அது இல்லை.

பாலுணர்வானது 1980கள் மற்றும் 1990களில் ”பாலியல் மருத்துவம்” எனும் ஒரு புதிய சிறப்பு மருத்துவப் பிரிவாக வளர்ச்சிபெறத் தொடங்கியபோது, ஒரு பெண்ணியவாதியாக பாலியலானது மருத்துவமயமாவது குறித்த ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. அதாவது, உண்மையில் அத்துறையானது, பாலின்ப நாட்டத்திலும், அனுபவத்திலும் சமூக விதிமுறைகளை மீறும் பெண்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக, உதவுவதற்காக அல்லது சரிசெய்வதற்காகப் பிரத்யேகமாக உருவானத் துறையாகும். இருப்பினும், முந்தைய மருத்துவ வளர்ச்சிக் காலகட்டங்கள் போல், தன்பாலினச் சேர்க்கையில் ஈடுபடும் பெண்கள் அல்லது பாலின்ப வெறி பிடித்தப் பெண்களை அடக்குவதற்காக உருவான பாலியல் மருத்துவமல்ல, ஆனால் உடலுறவில் ஆர்வமற்ற திருமணமானப் பெண்களின் அசமந்த நிலையைச் சரிசெய்வதற்காக உருவானது. இதுபோன்ற பெண்களுக்கு   “உதவுவதற்காக” எடுக்கப்பட்ட முயற்சிகள், வயாகரா மற்றும் விறைப்புத் தன்மையூக்கிகளின் வரவுக்கு வழிவகுத்ததோடு, வாழ்நாள் முழுதும் பாலுறுப்பை உட்செலுத்தும் உடலுறவிலும், உச்சகட்ட இன்பத்தை அடைவதற்கும் உதவும் மருந்துகளுக்கான விளம்பரங்கள் மூலம் ஆண்களுக்கான ஊக்குவிப்புகளும் நடந்தன என்பது கவனத்திற்குறியது.

ஆண்டுதோறும் கோடிக்கணக்கான டாலர்கள் / பவுண்டுகள் அல்லது யுரோ மானியங்களைப் பெற்றுத்தரும் ஆண்களுக்கான வயாகராவுக்கும் அதிகமான வருமானத்தைப் பெற்றுதரவல்ல பெண்களுக்கான “இளஞ்சிவப்பு வயாகராவுக்கான” வேட்டையை மருந்து நிறுவனங்கள் தொடங்கின. பெண்களுக்கான வேட்கை / கிளர்ச்சி மருந்துகள், ஊக்கிகள் விளம்பரப்படுத்தப்பட்டன. சந்தேகமின்றி, அவை பன்னாட்டு கூட்டு ஸ்தாபனங்களின் நலனுக்காக என்றோ, விளம்பர நிறுவனங்களின் நலனுக்கென்றோ விளம்பரப்படுத்தப்படவில்லை! ஆனால், பெண்கள் மத்தியில் காணப்படும் பரந்த பாலின்பச் செயல்பாட்டின் போதாமை மற்றும் துயரத்தைப் போக்கும் தேவையாக, பெண்களின் அத்தியாவசிய சுய தேவையாக முன்வைக்கப்பட்டன.

பெண்களின் பாலுறவுப் பிரச்சினையும், நிறைவின்மையும் பெரும்பாலும் சமூக மற்றும் ஒருவருக்கிடையே ஒருவர் கொள்ளும் உறவுசார் பிரச்சினையின் விளைவு என்று விளக்கும் சலவைப் பட்டியல் போன்ற (இச்சொல் வேண்டுமென்றே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது) நீண்ட, பரந்தளவிலான ஆய்வுகள் மூலம் முன்வைக்கப்பட்ட போதிலும் இந்த வேட்டை பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. ஏனென்றால், “பெண் பாலுறவுப் பிழற்ச்சி”க்கு சிகிச்சையளிக்கும் மருந்து கண்டுபிடிக்க இதுவரை மேற்கொள்ளப்பட்ட எண்ணற்ற மருத்துவ சோதனைகள் தோற்றுப்போக, மருந்துகளுக்கு அமெரிக்க அங்கீகாரம் கிடைக்காத நிலையே அதற்குக் காரணம். ஆனால் இதுவும் தற்காலிகமானதே, ஏதோவொரு மருந்து நிச்சயம் பரிசோதனையில் வெற்றி பெரும். அதன்பிறகு, கிடைக்கும் அத்தனை தொடர்பாடல் ஊடகங்கள் வாயிலாகவும் அவ்வளவு ஏன், இன்னும்கூட கண்டுபிடிக்கப்படாத ஊடகங்கள் வாயிலாகவும் ”நற்செய்தி” என்ற தலைப்பில் விளம்பரத் துறையானது பரந்த அளவில் அதனைக் கொண்டு சேர்க்கும்.

கடந்த இரண்டு பத்தாண்டுகளாக என்னுடைய செயல்பாடுகளும், கல்வியியல் பணிகளும் இந்தப் பாலியல் மருத்துவமயமாதலுக்குப் பின்னால் உருவாகும் அமைப்புமுறை மற்றும் வலைப்பின்னலை அம்பலப்படுத்துவதில் கவனம் செலுத்தும் விதமாகவே இருந்துள்ளது. ஒரு உளவியல் சிகிச்சையாளர் மற்றும் ஆய்வாளராக எனக்கு வழங்கப்பட்ட வரம்புக்குட்பட்ட எனது தொடக்ககாலப் பயிற்ச்சியைக் கடப்பதும், நுண்ணாய்வு பொதுச் சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை பற்றிய சமூகவியல் ஆய்வு போன்ற பிரிவுகள் குறித்த எனது அறிவை விரிவுபடுத்திக்கொள்வதும் எனக்குப் பெரும் சவாலாக இருந்தன. பெண்ணியம் எனக்கொரு அடிப்படை நிலைப்பாட்டை வழங்கியது – பாலியல் என்பது உடல்நலனுக்குறிய உயிரியல் மருத்துவம் என்பதைக் காட்டிலும், அது ஒரு கலாச்சார ஏற்பாடு என்று புரிந்துகொள்வது – ஆனால், உலக அரங்கில், முடிவுக்கு வராத, காலத்துக்கும் நீளும் வகையிலான பாலுணர்வு ஆய்வுகள், நோயறிதல் மற்றும் சிகிச்சை போன்ற கட்டமைப்புகள் வழி தொழில்முறைக் கூறுகளும், வர்த்தகக் கூறுகளும் உலக அரங்கில் எவ்வாறு பாலுணர்வு குறித்து உரையாடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள எனக்கு நீண்ட காலம் பிடித்துவிட்டது.

மொத்தத்தில், நிலைமையை நான் இவ்வாறு புரிந்துகொள்கிறேன்: நுகர்வுலகத்தில் பாலின்பம் என்பது ஒரு பண்டமாகிவிட்டது. ஆளும் அதிகாரிகளால் தற்போது பாலின்பம் என்பது “உடல் நலம்” எனும் ஒட்டுமொத்த நுகர்வு வகையினத்திற்குள் அடக்கப்படும் ஒரு பொருளாகிவிட்டது. நியமிக்கப்பட்ட பாலியல் ஆலோசக நிபுணர்களாக மருத்துவர்கள் கருதப்படுகின்றனர். அதன் மூலம் அவர்கள் தங்களது ‘சேவை’ பற்றிய ஒரு சுய-நியாயப்படுத்தலில் ஈடுபட்டவாறு தங்களது அதிகாரத்தையும், பொருளாதார வாய்ப்புகளையும் தக்கவைத்துக்கொள்ளும் வகையில் செயல்பட முடியும். ஆரோக்கியமான மற்றும் வயதுக்கேற்ப தொடர்ந்து மாறுகிற பண்புடைய பாலுறவு வாழ்கை என்பது கேள்விக்கப்பாற்பட்ட உரிமையாகவும், சமூக அவசியத் தேவையாகவும் உருவாகிவிட்டது. பெரும்பாலான மக்களுக்கு பாலியல் அறிவுறுத்தல்கள் கிடைப்பதில்லை, அதனால் அவர்களின் பாலுறவு வாழ்க்கையானது யதார்த்தத்தில் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய முடியாத குறைபாடுடையதாகிறது. ஆனால், அத்தகைய ஏமாற்றங்கள் என்பது சமூகத்தால் உருவாக்கப்படும் ஒன்று என்பதை மக்கள் புரிந்துகொள்ளத் தவறிவிடுகின்றனர், மேலும் இயலாமை உணர்வு மேலோங்க அவர்கள் தங்களை குறைபாடுடையவர்களாக எண்ணி மருத்துவ வடிவமைப்புகளுக்கும், கண்காணிப்புகளுக்கும், தலையீடுகளுக்கும் பலியாகிவிடுகின்றனர். அதே அனுமானங்களுக்கு ஊடகங்களும் வசப்பட்டு, வெறும் செய்தி வெளியீடு என்று சொல்லத்தக்கத் தகவல்களைக் கூட ஏதோ பெரிய கண்டுபிடிப்புப் போல ஊதிப் பெருக்குகின்றன. இவ்வாறாக பாலியல் மருத்துவமயமாக்கல் என்பது தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

Thanks to: http://www.hystericalfeminisms.com/

To read in English: http://www.hystericalfeminisms.com/waking-up-to-the-medicalization-of-sex-2/

February 2015 Update/Statement From Leonard

Mases —

Greetings My Friends, Relatives and Supporters:

I know that many of you have concerns about the status of my situation and have been wanting an update about what is going on.  A lot has been happening in the last few months and I am sorry I have not written in a while.  The deaths over this last year have been hard to accept, including the recent loss of my Sister Vivian.  I want to deeply thank everyone for your loving words, prayers and also for helping my son Chauncey pay for her funeral expenses, I am humbled beyond what my words can express.

We are coming up on 40 years of my being in prisons.  Sometimes, I honestly cannot believe it, sometimes I just don’t want to believe it.  You have been here with me through many dark times.  It is not possible for me to respond to each of you personally, I sure wish I could.

The reality is that I am not getting any younger, I feel my body every day.  My hip hurts, I cannot see very well, my body aches and my diabetes makes me feel uneasy a lot of the time. I do not say these things so you’ll feel sorry for me, I just want to share because I would like for you to understand where I am at in my life. When I put the losses of my friends and family together in my mind with the way my body feels, I feel a hunger to go home like I have never felt in all these long years.

It is time.

If only for a while, to feel the grass under my feet, to paint with the wind on my face while I listen to the laughter of my grandchildren in the yard, to smell some apple pie cooking in the air.  Some simple things is all I need.

I hear there are many of my Native Brothers and Sisters who are much younger than I who are doing some great work and it gives me great peace to know that the struggles our people face will always be addressed with honor and spirit.  I know about the problems we are all facing, and I want to encourage you to never give up on the things you know are right.

I am not giving up either.

Being in prison is a lot like being given a terminal diagnosis, and with that in mind, I am pleased to announce that I have retained a new legal team to represent my needs and best interests.  Together we have developed a careful “treatment plan” to hopefully gain the freedom and balance we have all been working for.

I do not know what the future will hold, but you should know that I am confident I have the best team I could have ever asked for.  I want to say that I am finding hope and slowly letting it find me. Take it from this old dude, life is different at 70.

I have been strongly advised, and I agree, that in order for this process to have a chance to work, the details and inner working of our plans must remain confidential. I am placing my very life in the hands of my legal team.  We cannot have any entity or person outside of my legal team speaking for me, acting on my behalf, or representing me. I am asking all of you to honor and respect this decision.  Much like a surgeon who performs a lifesaving operation, it is critical to my freedom that they be allowed to do what they are highly skilled at, without any outside interference.

You will still hear from me, as we all know, I am not going anywhere yet.

I want you to continue to support what you know is right. Be active, take an active role in our world and support the things you know need to be supported. Stand up for those that need to be stood up for, teach and take care of our children and our Mother Earth. Help one another to be strong and honorable, keep and carry on the traditions, languages and culture of our people. Be kind and caring toward each other.

I will continue to need your support, prayers, your love, and your understanding as I walk on this final path toward my freedom.

We will share as much information as we can as the process moves forward.  In the meanwhile, if you have any questions or concerns, please direct your inquiries to the website as that is the only official point of contact for myself and my team.

In the Spirit of Crazy Horse

Leonard Peltier

Mitakuye Oyasin

www.leonardpeltier.info
freedom@leonardpeltier.info

 P.S: A poem dedicated to Leonard, written by Kotravai in tamil, published in Kombu Little Magazine, is translated and published here

திருமணத்திற்கு கன்னித்தன்மை டெஸ்ட்! – நக்கீரன்

IMGIMG_0001

ஜில்லெட்டின் படை வீரர்கள்

no-68481_640

சமீபத்தில் ஜில்லட் நிறுவனத்தின் படைவீரர்கள் தேவை எனும் ஒரு விளம்பரத்தைக் காண நேர்ந்தது. பெண்கள் தினம் என்பது ஆண்களின் தினமாக, ஆணாதிக்க ’பெண்மை’ போற்றும் தினமாக, பெண்களுக்கு ‘லஞ்சம்’ கொடுக்கும் தினமாக மாறிவிட்ட சூழலில், இந்த விளம்பரம் என் கவனத்தை ஈர்த்தது.

அந்த விளம்பரம் என்ன சொல்கிறது:

ஆங்கிலத்தில்:

Soldiers Wanted not to guard the borders

Not to go to war

But to

Support the most important Battle of the Nation

To stand up for women

Because when you respect women

You respect your nation

Support the Movement

Gillette salutes the Soldier in You

தமிழில்:

// Because when you respect wome// – எனும் இந்த வரியை மொழிபெயர்த்தால், ஏனென்றால் நீங்கள் பெண்களுக்கு மதிப்பளித்தால் என்று வருகிறது ஆனால் நான் விளம்பரத்தைப் பார்க்கையில் என் காதில் பெண்களுக்கு வாய்ப்பளித்தால் என்று வந்ததாக நினைவு. (தவறாக இருப்பின் தெரிவிக்கவும்)

பெண்களுக்கு வாய்ப்பளித்தால் எனும் வார்த்தையில் உள்ள அரசியல் மிகவும் ஆபத்தானது ஏனென்றால் அது பெண்ணை ஆணிடம் இறைஞ்சிப் பெருபவளாக, ஆணே எல்லோருக்குமான ‘கடவுளாக’ சித்தரிக்கிறது. எதற்காக பெண்கள் ‘படைவீரர்களிடம்’ வாய்ப்பை எதிர்பார்த்து நிற்க வேண்டும். வாய்ப்பு கொடுக்கும் நிலையில் ஆண்களும், பெறும் நிலையில் பெண்களும் ஏன் இருக்கிறார்கள்?

அது அவ்வாறில்லை ‘பெண்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்’ என்று இருப்பதாகவே வைத்துக் கொள்வோம். அவர்கள் என்ன சொல்லி அழைப்பு விடுக்கிறார்கள் ‘பெண்களுக்கு மதிப்பளத்தல் என்பது தேசத்திற்கு மதிப்பளித்தல் என்பதாகும்’ என்று அறைகூவல். இதைவிட ஒரு நகைப்புக்குரிய ஒரு ‘முதலாளித்துவ கண்ணீரை’ நாம் பார்க்க முடியாது.

பெண்களுக்கு மதிப்பளிக்க இவர்கள் யாரை அழைக்கிறார்கள் தனி நபர் ஆண்களை. எவ்வகையான ஆண்களும், பெண்களும் இதில் இடம்பெறுகிறார்கள் என்பதை வைத்துப் பார்த்தாலே இது எந்த வர்க்கத்தைக் ’கவர’ எடுக்கப்பட்டிருக்கிறது என்பது விளங்கும். உண்மையில் ஒருவர் பெண்களுக்கு மதிப்பளிக்க விரும்பினால் முதலில் அவர்கள் தாங்கள் பயன்படுத்தும் சொற்களில் கவனமாக இருக்க வேண்டும். ‘படைவீரர்’ என்பதே  ’ஆண்மை’ எனும் ஆணாதிக்க கருத்தியலை முன் வைக்கும் ஒரு சொல். வீரர் என்றாலே அது ஆண் என்பதுதான் பொதுப் புரிதல். வீரராய் இருப்பவர்தான் பெண்ணுக்கு பாதுகாவலராக முடியும், அல்லது பெண்ணுக்கு பாதுகாவல் / மதிப்பளிப்பதென்பது வீரமிக்க செயல் என்று சொல்வது அபாசமான ஒன்றில்லையா?

பெண்ணுக்கு மதிப்பளிப்பதென்றால் என்ன?  பெண் விடுதலை என்றால் என்ன? பெண்மை என்ற பெயரில் அவளை ஆணாதிக்க வரையறைக்குள் இருத்தி ‘நீ பெண், நீ பெண்’ பெண்ணாய் இருப்பதாலேயே உனக்கு எல்லா சலுகைகளும், அங்கீகாரங்களும் கிட்டும் என்று  மன்மார்ந்த அடிபணிதலை வலியுறுத்துவதா?

ஆங்கிலத்தில் ஸ்டாண்ட் அப் ஃபார் வுமன் அதாவது பெண்களுக்காக துணை நிற்போம் (குரல் கொடுப்போம்) என்று பொருள். எந்த வர்க்கத்துப் பெண்களுக்கு, எதை வலியுறுத்தி இவர்கள் துணை நிற்க விரும்புகிறார்கள் என்றொரு கேள்வி எழுகிறது. வர்க்க பேதத்தைக் கூட விட்டுவிடுவோம். எதை வலியுறுத்தி இவர்கள் துணை நிற்கப்போகிறார்கள். இந்த விளம்பர நிறுவனத்தின் ‘பண்டத்தையே’ எடுத்துக் கொள்வோம், இது மயிர் மழிக்கும் ஒரு கருவி, இதுவரை அவர்கள் மயிர் மழிப்பது என்பது ‘ஆண்மை’, ஆணின் அடையாளம், அழகு என்றுதானே சொல்லி வருகிறார்கள். ஆனால் பெண்களுக்கான மழிக்கும் கருவியையும் இதே நிறுவனம் தயாரிக்கிறது, அதுபற்றிய பேச்சு எங்குமே இல்லை. (அதைப் பேசினாலும், அழகு, ஆணைக் கவர்வதற்கான ஒரே உத்தி என்றுதான் இருக்கும்).

அடுத்து இவர்கள் முன் வைக்கும் ‘படை வீரர்’ அடையாளம் – இதுதான் உண்மையில் உச்சபட்ச நகைச்சுவை, உண்மையில் படை வீரர்கள் / அவர்கள் மேல் அதிகாரிகள் தங்களுடன் பணி புரியும் பெண்களுக்கு விழைத்த பாலியல் தொந்தரவுகள் எத்தகையது என்பது யாவரும் அறிந்ததே. அஞ்சலி குப்தாவை நாம் மறந்திருக்க மாட்டோம். பூனம் கவுர், டிம்பிள் சிங்காலா ஆகியோர் மேல் அதிகாரிகளின் பாலியல் தொந்தரவு குறித்து புகார் செய்ததற்காக கோர்ட் மார்ஷியல் செய்யப்பட்டார்கள்.  சொல்லப்போனால், ஒரு சாதாரணக் குடிமகன் வன்புணர்வு, பாலியல் அத்துமீறல் செய்தால் ‘தூக்கிலிடு’ என்று கொந்தளிக்கும் ‘வர்க்கமானது’ இராணுவத்தினர் செய்யும் பாலியல் அத்துமீறலுக்கு (அது சக பணியாளரோ அல்லது பொதுமக்களிடத்தோ) மௌனம் காத்துவருவது வெளிப்படை.  இராணுவக் குற்றம் என்பது ஒரு அனுமதிக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. அவர்களுக்கென்று தனி விசாரணை முறை, தனி நீதிமன்றம். பாதிக்கப்பட்டவர் அக்குற்றங்களை வெளிக்கொண்டுவருவதில் தொடங்கி நீதிக்காக போராடுவது வரை அவர் எதிர்கொள்ளும் இன்னல்கள் சொல்லில் அடங்காது. பல வேளைகளில் அது தற்கொலையிலேயே முடிகிறது. ’இப்படிப்பட்ட படைவீரர்கள் பெண்களுக்குத் துணை நிற்பதா’ அத்தனை பலவீனமானவர்களா, முட்டாள்களா பெண்கள்.

(பெண்கள் வில்லன்கள்)

தெரிந்தோ தெரியாமலோ இவ்வளிம்பரம் ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தை அளிக்கிறது. ஆம், படை வீரர்கள் தங்கள் வீரத்தை பொதுமக்களிடத்து மட்டுமே காட்டுவார்கள். அதேபோல் இவர்கள் பொதுமக்களில் இருக்கும் ‘ஆண்களை’ அழைக்கிறார்கள். அஸ்ஸாம், ஜார்கண்ட், தண்டகாரண்யம் போன்ற பகுதிகளில் முதலாளிகளுக்கு நிலத்தைப் பிடுங்கிக் கொடுக்கும் மாபெரும் பணியில் ஈடுபடுபடுவதற்காக இராணுவ வீரகள் குவிக்கப்பட்டுவிட்டதால், பெண்களுக்கு பாதுகாப்பளிக்க, துணை நிற்க பொதுமக்களில் இருக்கும் ‘படை வீரர்களே’ எஞ்சியிருக்கிறார்கள் என்ன செய்வது.

பெண்களுக்கு துணை நிற்பது என்றால் என்ன? முதலில் பெண்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளை அதிகாரப்பூர்வமாக, சட்டபூர்வமாக பெற்று தருவதற்கு உழைப்பது, பெண் எனும் கருத்தியலை மாற்றுவதற்கான முயற்சிகளை எடுப்பது, பெண்ணை மதியுங்கள் என்று முழக்கமிடுவதற்கு பதில் பெண்களுக்கான உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்று நீளும். முதல் சொன்ன அதிகாரப்பூர்வ மீட்பு என்பது ‘அரசிடம்’ இருந்து தொடங்க வேண்டும். முதலில் இவர்கள் 33% இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற சொல்லி பாராளுமன்றவாதிகளை நோக்கி குரல் எழுப்பலாம். AFSPA வுக்கெதிராக கடந்த 12 வருடங்களாக உண்னாவிரதம் இருக்கும் இரோம் சர்மிளா மீது தற்கொலை வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து, கைது செய்து உளைச்சல் தரும் அரசுக்கெதிராக ஒன்று கூடுவோம் என்று குரல் எழுப்பலாம். சாதி வெறி பிடித்து கவுரவக் கொலை என்ற பெயரில் பெண்களை எரித்துக் கொல்லும், அடித்துக் கொல்லும் செயல்களுக்கெதிராக ஒன்று திரள்வது, கப் பஞ்சாயத்து, கௌரவக் கொலை, பெண் சிசுக் கொலை, பெண் இனப்படுகொலை, குழந்தைத் திருமணம் (ஷரியத் சட்டம் உட்பட) இவைகளுக்கெதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவது, இவைகளை தடுக்க அரசிடம் செயல்திட்டத்தைக் கோருவது, உழைக்கும் மகளிர் குறைந்த கூலிக்கு சுரண்டப்படுவதை, பெண்களின் இரட்டை உழைப்பைக் களைதல் என்று பெண்களுக்காக துணை நிற்க எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது. இவையெல்லாம் அரசுக்கெதிராக களம் இறங்க வேண்டிய பிரச்சனை, ஜில்லெட்டும், அவர்கள் அழைக்கும் ‘படை வீரர்களும்’ இதற்கு தயாராக இருப்பார்களா?

பெண்களுக்கு துணை நிற்க ஆண்களை அழைப்பது சரி, பெண்களைக் கொடுமைபடுத்தும், வரதட்சனைக் கேட்டு கொலை செய்யும், பாலியல் தொழிலில் தள்ளிப் பிழைக்கும் தரகுப் பெண்கள், பெண்களுக்கெதிரான குற்றங்களைப் பதிவு செய்ய பெண்கள் காவல்துறையை அனுகினால் அங்கு ஆணாதிக்க கொச்சை சொற்களை உமிழ்ந்து அலைகழிக்கும் பெண்கள் இவர்களுக்கெதிராக, அல்லது இவர்களிடம் மாற்றத்தைக் கோர எவருக்கு அழைப்பு விடுப்பர்?

,

குறைந்தபட்சம் சித்திரகாடா சிங், மலாய்க்கா அரோரா ஆகிய ‘சதை விற்பனையாளர்களை’ முன் நிறுத்தி முதலாளிக் கண்ணீர் வடிப்பதையாவது நிறுத்திக்கொள்ள முடியுமா ஜில்லட் ’வீரர்களே’….

எங்களுக்கு பயில்வான்களோ, படைவீரர்களோ தேவையில்லை கனவான்களே, நண்பர்கள் போதும். உங்கள் ‘புஜ பலத்தைக் காட்ட’ எங்களை பலவீனப் பிராணிகள் ஆக்காதீர்…ஆண்களை அடியாட்களாக்காதீர் (gym boys!!)…

பெண்கள் ஆடுகளும் அல்லர், ஆண்கள் மேய்ப்பரும் அல்லர்….

 

Related Links:

http://facttruth.wordpress.com/2010/05/28/victimization-of-women-officers-in-indian-army/

http://www.huffingtonpost.com/2012/12/27/india-gang-rape-suicide_n_2370859.html

http://indianmilitarynews.wordpress.com/tag/sexual-harassment/

http://www.firstpost.com/india/code-of-injustice-silencing-sexual-assaults-in-the-military-660748.html

http://www.ndtv.com/article/cities/court-martialled-female-iaf-officer-commits-suicide-132943

http://syaanand.blogspot.in/2012/07/islam-act-matter.html

http://www.vinavu.com/2011/04/04/sharia-talaq/