Nambikkai Manushigal “நம்பிக்கை மனுஷிகள்” குறும்படம்


“நம்பிக்கை மனுஷிகள்” குறும்படம்

வானவன் மாதேவி, இயல் இசை வல்லபி என்னும் இரு தேவதைகள் பற்றிய உண்மைக்கதை இது.
“மஸ்குலார் டிஸ்ட்ரோபி” (தசைச்சிதைவு நோய்) என்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள வானவன் மாதேவி, இயல் இசை வல்லபி என்ற இரண்டு சகோதரிகளின் உற்சாகமான ஆளுமையை, ஆக்கப்பூர்வமான பணிகளை கோடிட்டு காட்டுவதே `நம்பிக்கை மனுஷிகள்’ குறும்படத்தின் நோக்கம்.
தம்மைப் போல இந்நோயால் பாதிக்கப்பட்ட, வசதியற்ற நோயாளிகளுக்கு இந்த சகோதரிகள் மாற்று மருத்துவ சிகிச்சையை இலவசமாக அளிக்கிறார்கள். இதற்கென சேலத்தில் ஒரு மருத்துவமனை நடத்தி வருகின்றனர்.
வானவன் மாதேவி, இயல் இசை வல்லபி பற்றிய `நம்பிக்கை மனுஷிகள்’ குறும்படம் வியாபார நோக்கம் இன்றி தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை அதிகமான மக்களின் பார்வைக்கு கொண்டு போய் சேர்ப்பதன் மூலம் மக்களுக்கு வாழ்வின் நல்ல சங்கதிகளின் மீது நம்பிக்கை மிகுதிப்படும். இவர்கள் நடத்தும் பொதுத்தொண்டுக்கு உதவவும் வாய்ப்பாகும்.

“நம்பிக்கை மனுஷிகள்” குறும்படம்
இயக்கம் : கீதா இளங்கோவன்
ஒளிப்பதிவு : சேலம் ரியாஸ்
படத்தொகுப்பு : கா.கார்த்திக்

Tagged: , ,

One thought on “Nambikkai Manushigal “நம்பிக்கை மனுஷிகள்” குறும்படம்

  1. jayarajarethinam November 23, 2014 at 5:30 am Reply

    நன்றி நல்ல பகிர்வு

    2014-11-23 11:51 GMT+05:30 M.A.S.E.S — Movement Against Sexual
    Exploitation and Sexism :

    > Movement Against Sexual Exploitation and Sexism posted: ” “நம்பிக்கை
    > மனுஷிகள்” குறும்படம் வானவன் மாதேவி, இயல் இசை வல்லபி என்னும் இரு தேவதைகள்
    > பற்றிய உண்மைக்கதை இது. “மஸ்குலார் டிஸ்ட்ரோபி” (தசைச்சிதைவு நோய்) என்ற கொடிய
    > நோயால் பாதிக்கப்பட்டுள்ள வானவன் மாதேவி, இயல் இசை வல்லபி என்ற இரண்டு
    > சகோதரிகளின் உற்சாகம”

Leave a comment