பேராசிரியர் ஆமீனா வதூதுக்கு ஆதரவாக


 

A statement issued by writers and human rights federation for Freedom of Expression. MASES is in solidarity with them. MASES condemns such religious fundamentalism and threats given to writers & social activists.

 It is shameful to reject an opportunity to learn. It is hypocritical that such organizations take power in their hands to threaten a human being as per their convenience while they believe that it is the same GOD who created human beings. Why are they choosy when it comes to believe that it is ‘GOD’s wish’ or ‘GOD’s order’?

 Amina_Wadud

தமிழ்நாட்டில் சமீபகாலமாக  இஸ்லாத்தின் பெயரில் வஹ்ஹாபிய அமைப்புகளின் ஆட்டம் அதிகரித்து வருகிறது. பரவலாக்கப்பட்ட கருத்து என்ற வகையில் இருந்தாலும், பலதரப்பட்ட கருத்தாக்கம் என்ற வகையில் இருந்தாலும்  தங்களின் சுயநலம் சார்ந்த குறுகிய அரசியல் நலனுக்காக ஊடகங்களை, தனிநபர்களை, எழுத்தாளர்களை கருத்துக்களை வெளிப்படுத்த விடாமல் பின்வாசல் மற்றும் முன்வாசல் வழியாக மிரட்டுவது,  தங்களின் தொண்டர்களை தூண்டி விடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்திய/தமிழ்ச்சூழலில் இஸ்லாமிய பதின்பருவ இளைஞர்கள் பலர் இம்மாதிரி இயக்கங்களின் தூண்டல் காரணமாக தவறான புரிதலுடன், உணர்ச்சிமயமாகி சமூக மையநீரோட்டத்திலிருந்து துண்டித்து தங்களை தனியாக அடையாளப்படுத்திக்கொள்வது போன்றவற்றில் அப்பாவித்தனத்துடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

கருத்துரிமைக்கு எதிரான இந்த அச்சுறுத்தலில் “உன் கருத்துடன் முரண்படுகிறேன். ஆனால் உன்னுடைய கருத்து சுதந்திரத்தை ஆதரிக்கிறேன் என்பதே சிறந்த ஜனநாயக நெறிமுறையாக இருக்கும்”. இந்நிலையில் உலகபுகழ்பெற்ற இஸ்லாமிய பெண்ணிய சிந்தனையாளரும், அமெரிக்க பல்கலைகழக பேராசிரியருமான ஆமீனா வதூத் சென்னை பல்கலைகழகத்தில் கவுரவ விரிவுரையாற்ற இருந்தார். சென்னை எஸ்.ஐ.இ.டி கல்லூரியிலும் அவரின் உரை இருந்தது. ஆனால் அவரை அங்கு பேசவிடாமல் வஹ்ஹாபிய அமைப்பு ஒன்று தடை செய்திருக்கிறது. அவர் இஸ்லாமிய விரோதி என்ற வழக்கமான முத்திரைகளை பிரயோகித்து அதனை தடுத்திருக்கிறது. அதிகாரவர்க்கமும் ஓட்டு வங்கி அரசியல் காரணமாக அதற்கு துணை போயிருக்கிறது. பொதுவாக பல்கலைகழக கருத்தரங்கம் என்பது எல்லா தரப்பினரும் பார்வையாளராக பங்கேற்கும் ஒரு மேடை. மற்றவர்களை மிரட்டி என்னோடு மோதத்தயாரா? என்று சவால் விடுக்கும் இம்மாதிரியான இயக்கங்கள் பொது அரங்கில் ஒருவரை பேச விடாமல் தடுப்பது என்பது முரண்நகையே. மேலும் வறட்சியானதும், ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானதும் கூட. ஆக கருத்துரிமைக்கு எதிரான இந்த போக்கு மிகவும்  வன்மையாக கண்டிக்கத்தக்கது.

 சமூக அமைதியை, நல்லிணக்கத்தை விரும்பும் அனைத்து ஜனநாயக சக்திகள் குரல் கொடுக்க வேண்டிய நியாயமும் , அதற்கான தேவையும் இந்த சூழலில் எழுந்திருக்கிறது. இம்மாதிரியாக தங்களின் இருப்பிற்காகவும், அரசியலுக்காகவும் சமூகத்தை காயாக பயன்படுத்தி இயங்கும் வஹ்ஹாபிய அமைப்புகளை கருத்துரிமைக்கு ஆதரவான எழுத்தாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. அதிகாரவர்க்கமும், நீதிமன்றமும் தலையிட்டு இம்மாதிரி அமைப்புகளின் செயல்பாடுகளை கண்காணித்து ஜனநாயக இந்தியாவில் கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவான சூழலை ஏற்படுத்த கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது.

இப்படிக்கு

கருத்துரிமைக்கு ஆதரவான  எழுத்தாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் கூட்டமைப்பு

கவிஞர் அப்துல் ஹக் லறீனா ( இலங்கை)

 கவிஞர் சர்மிளா செய்யித் (இலங்கை)

 கவிஞர் சல்மா

 கவிஞர்  குட்டி ரேவதி

 கவிஞர் லீனா மணிமேகலை

 பேராசிரியர் ஹாமீம் முஸ்தபா

 கவிஞர் ஹெச்.ஜி ரசூல்

 எழுத்தாளர் மீரான் மைதீன்

 எழுத்தாளர் ஆபிதீன்

 எழுத்தாளர் எச்.பீர்முஹம்மது

 கவிஞர் தாஜ்

 பெனாசிர் பேகம் (மாணவ பத்திரிகையாளர்)

 லெனின்ஷா (பத்திரிகையாளர்)

 கவிஞர் சுகிர்தராணி

 கவிஞர் ரியாஸ் குரானா (இலங்கை)

 கவிஞர் அகமது பைசல் (இலங்கை)

 முஹம்மத் இம்தாத் (இலங்கை)

 எழுத்தாளர் எ.பி.எம் இத்ரீஸ் (இலங்கை)

 கவிஞர் ரிஷான் ஷெரிப் (இலங்கை)

 பேராசிரியர் ஜாகிர் உசேன் (சென்னை)

 via email from Leena Manimekalai

Related Posts: http://www.firstpost.com/india/the-link-between-croissants-and-tragic-silencing-of-islamic-scholar-amina-wadud-1002937.html

  http://www.thehindu.com/news/cities/chennai/one-sms-and-amina-waduds-lecture-was-called-off/article4971175.ece?homepage=true

 http://timesofindia.indiatimes.com/home/education/news/Madras-university-slammed-for-cancelling-Amina-Waduds-lecture/articleshow/21510513.cms

 http://www.thehindu.com/opinion/op-ed/reinvite-amina-wadud-to-speak-at-the-university-of-madras/article4974782.ece -‘Re-invite Amina Wadud to speak at the University of Madras’

 

Tagged: , , , , , ,

Leave a comment